நமது சவக்குழியை நாமே தோண்டுகிறோம்: எச்சரிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர்

புதைபடிவ எரிபொருள்களுக்கு அடிமையாகி இருப்பதன் மூலம் நமது சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் எச்சரித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தத் தருணத்தை தவறவிட்டால் யாரும் தப்பிக்க முடியாது : ஜோ பைடன்

    பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    நாம் நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தசாப்தம். இதை தவறவிட்டால் யாரும் தப்பிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

    கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார்.

    பருவநிலை மாற்றம் என்பது கற்பனையானது அல்ல. அது மக்களின் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அழித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

    சமீபத்திய ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சிக்கல்களை அமெரிக்கா அனுபவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    "இந்த தருணத்தை நாம் தவறவிட்டால், இன்னும் வரவிருக்கும் மோசமானவற்றிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது" என்றும் அவர் பேசினார்.

  2. நமது சவக்குழியை நாமே தோண்டுகிறோம்: எச்சரிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    புதைபடிவ எரிபொருள்களுக்கு அடிமையாகி இருப்பதன் மூலம் நமது சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் எச்சரித்துள்ளார்.

    கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் அவர் பேசினார்.

    "இப்போது நாம் நிறுத்தாவிட்டால், அது நம்மை நிறுத்திவிடும். போதும் என்று கூறுவதற்கு இதுவே நேரம். கார்பன் மூலமாக நம்மை நாமே கொல்லும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எரிபொருளை ஆழமாக நாம் தோண்டிக் கொண்டே இருந்தால், நமது சவக்குழியைத் தோண்டுகிறோம் என்றே பொருள்" என்று அவர் கூறினார்.

  3. கார்பனை உமிழும் காடுகள்

    புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும்.

  4. பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம்

    பருவநிலை மாற்றம்

    பட மூலாதாரம், Getty images

    புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

  5. வருகைதந்த பைடன்

    பைடன்

    ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ரோமுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பைடன் அங்கிருந்து க்ளாஸ்கோவிற்கு வந்துள்ளார்.

  6. COP26 மாநாட்டின் தொடக்க விழா தொடங்கியது

    பல்வேறு நாட்டு தலைவர்களின் வருகைக்கு பிறகு COP26 மாநாட்டின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது.

    opening ceremony
  7. பருவநிலை மாற்றத்துக்கு காற்றாலை மின்சாரம், பசுமை வீடுகள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்வு சொன்ன தமிழக கிராமம்

    பருவநிலை மாற்றம் என்பது மனிதர்களின் காதுக்குள் அபாயச் சங்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்க ஒவ்வொரு நாடும் என்ன செய்வது என்று தலையை உடைத்து யோசித்து கொண்டிருக்கின்றன.

    புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நாம் செல்வதே நீண்டகாலத்திற்கான தீர்வாக இருக்கும் என பல காலமாக பேசிக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் பெரும்பாலான மின்சாரத் தயாரிப்பு நிலக்கரியை நம்பியே உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்று மின்சாரத் தயாரிப்பில் தன்னிறைவு கிராமமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

  8. க்ளாஸ்கோ வந்தடைந்தார் க்ரேட்டா தன்பர்க்

    COP26 மாநாட்டிற்காக க்ளாஸ்கோ வந்தடைந்தார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பார்க்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. க்ளாஸ்கோ மாநாட்டில் முக்கியமாக கவனிக்கப்படுபவர்கள் யார்?

    தலைவர்கள்

    பட மூலாதாரம், Getty Images, PA Media

    கிளாஸ்கோ COP26 மாநாட்டில் 200 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். இதில் நாட்டின் தலைவர்கள் மட்டுமல்லாது, பருவநிலை நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் வருகை தரவுள்ளனர்.

    ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்படக் கூடியவர்கள் யார்?

    ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்கு முன்பு ஆட்சியில் இருந்த டிரம்ப், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற முடிவை திரும்பப் பெற்றார். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதாக அவர் உறுதியளித்தார்.

    உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா உள்ளது. மேலும் அதிகப்படியாக கார்பன் உமிழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே அமெரிக்கா இந்த மாநாட்டில் கலந்து கொள்வது அவசியமாக பார்க்கப்படுகிறது.

    ஷி ஷென்ஹுவா

    இவர் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர். ஷி ஜின் பிங்கின் சார்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 2007 – 2018ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற பருவநிலை சார்ந்த கூட்டங்களில் நாட்டின் சார்பாக பேசிய முக்கிய பேச்சாளர். சீனா பருவநிலை மாற்றம் குறித்து என்ன உறுதியளிக்கிறது என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது. அதிபர் ஷி ஜின்பிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பாட்ரிக்கா எஸ்பினோசா

    மெக்ஸிகோவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். ஐநாவின் முக்கிய பருவநிலை பேச்சாளர். மாநாட்டின் உயர் குழுவில் இருக்கும் ஒருசில பெண்களில் இவரும் ஒருவர்.

    நரேந்திர மோதி

    கார்பனை உமிழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கார்பன் உமிழ்வை குறைக்கும் ஆண்டையும் இந்தியா இதுவரை குறிப்பிடவில்லை. அதாவது `நெட் ஜீரோ` நிலையை அடையும் இலக்கை இந்தியா தெரியப்படுத்தவில்லை.

    அதேபோல கார்பன் உமிழ்வை குறைக்கும் திட்டத்தையும் ஐநாவிடம் வழங்கவில்லை. ஐந்தாண்டுக்கு ஒருமுறை இவ்வாறு திட்டம் குறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே க்ளாஸ்கோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் குறித்து மோதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அலோக் ஷர்மா

    பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தற்போது COP26 தலைவராக உள்ளார். இவரின் பணி நாட்டின் தலைவர்களை பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

  10. இந்த மாநாட்டில் சீனா கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன?

    ஷி ஜின்பிங்

    பட மூலாதாரம், Getty Images

    க்ளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் சீனா கலந்துகொள்ளவில்லை.

    சீனாவின் எஸ்ஓஏஎஸ் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநர் பேராசிரியர் ஸ்டீவ் சாங் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

    “தன்மீது நேர்மறையற்ற வெளிச்சம் சிறிதாயினும் விழுவதற்கு சீனா விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது என்கிறார் ,”அவர்.

    மேலும், “சீன அதிபர் ஷி ஜின்பிங் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. எனவே இந்த மாநாட்டில் அவர் கலந்து கொள்ளாதது ஆச்சர்யம் அளிக்கவில்லை, ஆனால் இணையம் மூலமாகவும் அவர் கலந்து கொள்ளாதது ஒரு புதிய செய்தியை சொல்கிறது,” என்று தெரிவிக்கிறார்.

    பருவநிலை மாற்றத்தை கையாள்வது சீனாவுக்கு முக்கியமான ஒன்று. ஆனால் நாடு அதே நேரத்தில் மின்சாரத் தட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறது. மின்சாரம் இல்லாத சூழல் ஷி ஜின்பிங்கிற்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்.

  11. புவி வெப்பமடைவதற்கு மனிதன்தான் காரணமா?

    உலகம் பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு மனிதர்களின் நடவடிக்கைதான் காரணமா?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. அதிகப்படியாக கரியமில வாயுவை வெளியேற்றும் முதல் ஐந்து நாடுகள்

    அதிகப்படியாக கரியமில வாயுவை வெளியேற்றும் முதல் ஐந்து நாடுகள்
  13. `உலகத் தலைவர்களே விழித்து கொள்ளுங்கள்....`

    COP26 மாநாடு மக்களையும் இந்த பூமியையும் காக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான லியனார்டோ டிகார்பியோ தெரிவித்துள்ளார்.

    “நாட்டின் தலைவர்களே, உலகம் உங்களை பார்த்து கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் நீங்கள் விழித்து கொள்ள வேண்டும். தோல்வியடைவதற்கான நேரம் இது இல்லை.” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. COP26 மாநாட்டில் என்ன முடிவு செய்யப்படும்?

    பருவநிலை மாற்றம்

    பட மூலாதாரம், Getty Images

    COP26 மாநாடு தொடங்குவதற்கு முன்பே தங்களது கார்பன் வெளியேற்றம் அளவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டங்களை பெரும்பாலான நாடுகள் வகுத்துவிடும்.

    இதன் மூலம் இனிமேல் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த ஒரு தெளிவு இப்பொழுதே கிடைக்கும்.

    இந்த மாநாடு நடக்கும் இரண்டு வார காலத்தில் பெரும்பாலான எண்ணிக்கையில் புதிய அறிவிப்புகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

    இவை பெரும்பாலும் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான அறிவிப்புகளாகவே இருக்கும்.

    அவற்றில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்த தேவையான விதிகள் என்ன என்பதும் உள்ளடங்கும்.

    உதாரணமாக கீழ்கண்ட அறிவிப்புகள் அவற்றில் இருக்கலாம்.

    • மின்சாரத்தை பயன்படுத்தும் கார்களுக்கு பெருமளவில் மாறுதல்
    • நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவை வேகமாக குறைத்தல்
    • குறைவான அளவிலேயே மரங்களை வெட்டுதல்
    • கடலோரப் பகுதிகளில் இரு ஏற்படும் இயற்கை அபாயங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக உண்டாகும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல்

    உலக நாடுகளின் தலைவர்கள், பேச்சுவார்த்தையாளர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் 25 ஆயிரம் பேர் இந்த மாநாடு உச்சி மாநாட்டின்போது க்ளாஸ்கோவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    COP26 மாநாட்டின்போது அரசின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் பருவநிலை பிரசாரகர்களும் தொழில் துறையைச் சார்ந்தவர்களும் பல நிகழ்வுகளை நடத்துவதோடு தங்கள் தொடர்புகளையும் விரிவுபடுத்திக் கொள்வர். இந்த மாநாட்டின்போது போராட்டங்களும் நடக்கும். உதாரணமாக எக்ஸ்டின்ஷன் ரெபெல்லியன் எனும் அமைப்பு, புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    இந்த மாநாட்டின் இறுதியில் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்தப் பிரகடனத்தில் COP26 மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் கையெழுத்திட வேண்டியிருக்கும்.

    அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு தாங்கள் எடுக்க உள்ள நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டு நாடுகள் கையெழுத்திடும்.

  15. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும்

    போரிஸ் ஜான்சன்

    க்ளாஸ்கோ மாநாட்டை ஒட்டி பிபிசியிடம் பேசிய போரிஸ் ஜான்சன், "நாம் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த ஆசைகளிலிருந்து செயல்களுக்கு மாற வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

    இந்த மாநாடு தனக்கு மிக முக்கியமானது என அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தான் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    பசுமைக் குடில் வாயுவு வெளியேற்றத்தை குறைக்க நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

    அதற்கு மத்தியில்தான் பிரிட்டன் இந்த மாநாட்டை நடத்துகிறது. பிரிட்டன் அரசு வளர்ந்த நாடுகளுக்கு உதவும் நோக்கில் ஒரு பில்லியன் யூரோக்களை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வழங்கும் என போரிஸ் ஜான் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று பிற வளர்ந்த நாடுகளும் நிதி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

  16. பருவநிலை மாற்றத்தில் மீத்தேனின் பங்கு என்ன?

    பருவநிலை மாநாடு பிரிட்டனின் கிளாஸ்கோவில் நடக்கிறது. இது புவி வெப்பமடைதலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த உலகின் மிகப்பெரிய சந்திப்புகளில் ஒன்று.

    ஆனால் அது எதைப் பற்றியது? பிபிசியின் சுற்றுச்சூழல் செய்தியாளர் மாட் மெக்ராத் உங்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

    பருவநிலைமாற்றத்தில் மீத்தேனின் பங்கு என்ன? - மாயா யோசிஃபோவா, வியன்னா, ஆஸ்திரியா

    மீத்தேன் என்பது ஒரு பசுமை இல்ல வாயு. சதுப்பு நிலங்கள் மற்றும் கரையான்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்தும், விவசாயம், புதைபடிவ எரிபொருளைத் தோண்டி எடுப்பது, நிலக்கழிவுப் பகுதிகள் போன்ற மனித நடவடிக்கைகளின் மூலமாகவும் வெளியிடப்படுகிறது.

  17. வாட்டி வதைக்கும் வெயில்; வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் அதுவும் விடியல் காலை 4 மணிக்கு

    கராச்சியின் வாட்டி வதைக்கும் வெயிலில் ஏசி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுகிறார் ரசா. ஆனால் அவரின் வீட்டிற்கு அவரால் ஏசி வாங்கும் அளவிற்கு பணமில்லை. அதைவிட கொடுமையாக வாரத்திற்கு ஒருமுறைதான் அங்கு தண்ணீர் வரும். கராச்சியின் வாட்டி வதைக்கும் வெயில் குறித்த பிபிசியின் Life at 50C ஆவணப்படம் இது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. COP26 என்ற பெயர் எதனால்?

    க்ளாஸ்கோவில் இன்று COP26 மாநாடு நடைபெறுகிறது அதை பிரிட்டன் நடத்துகிறது 200 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்குகொள்கிறார்கள் என சில நாட்களாக நீங்கள் பிபிசி மற்றும் பிற ஊடகங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    இது பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு என்பதை நீங்கள் கணித்திருப்பீர்கள் ஆனால் இதுகுறித்து பல கேள்விகள் உங்களுக்கு தோன்றலாம் அதற்கான பதிலை நீங்கள் இந்த நேரலை பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    முதலில் இதை ஏன் COP26 மாநாடு என்று சொல்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்...

    COP: COP என்பது கான்ஃப்ரன்ஸ் ஆஃப் த பார்ட்டீஸ் (Conference of the Parties) என்பதன் சுருக்கம்.

    COP1 மாநாடு 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது நடக்கும் மாநாடு 26வது மாநாடு என்பதால் COP26 என்று அழைக்கப்படுகிறது.

  19. பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் உறுதி

    G20

    பட மூலாதாரம், GETTY IMAGES

    வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்கள், பருவநிலை மாற்றத்தை 'அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்' மூலம் கட்டுக்குள் கொண்டு வர ஒப்புக் கொண்டுள்ளனர்.

    ஆனால் ரோமில் நடைபெற்ற் ஜி20 மாநாட்டில் வெகுசில உறுதிபாடுகளே கொடுக்கப்பட்டுள்ளது.

    இது செயற்பாட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. COP26 மாநாட்டிற்கு முன்னதாக சில உறுதியான இலக்குகள் நிர்ணயிக்கப்படும் என ஜி20 மாநாட்டை நடத்திய இத்தாலி நம்பியது. இந்த ஜி20 அமைப்பில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது.இவைதான் உலகில் ஏற்படும் உமிழ்வுகளில் 80 சதவீதத்திற்கு காரணம்.

    ஜி20 மாநாட்டில் அடுத்தடுத்து பயனுள்ள பல சந்திப்புகள் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

    அதேபோன்று COP26 மாநாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

    மேலும் உலகில் அதிக மாசை உருவாக்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக பைடன் தெரிவித்திருந்தார்.

  20. பிபிசி தமிழின் நேரலை

    COP26 மாநாடு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனுடன் உரையாடல்.