ஏமன் மதரஸாவில் ஏவுகணை தாக்குதல் - குறைந்தது 29 பேர் பலி

ஞாயிறு இரவு நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. ஏமன் மதரஸாவில் ஏவுகணை தாக்குதல்

    ஏமனில் மதரஸா ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 29 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.

    மதக் கல்வியை பயிற்றுவிக்கும் இந்தப் பள்ளி மீது அரசுக்கு எதிராக போராடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிறு இரவு நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.

    உள்நாட்டு போர் காரணமாக தங்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேறியவர்கள், தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தில் வசித்து வந்தனர்.

    மாரிப் மாகாணத்தை கைப்பற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெரும் தாக்குதலைத் தொடங்கினார்கள்.

    இந்தத் தாக்குதலுக்கு பின் அவர்கள் உடனடியாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

    ஆறு ஆண்டுகளாக நடக்கும் ஏமன் உள்நாட்டுப் போரில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியான இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக குறைந்தது இரண்டு கோடிப் பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.

    Yemen war: Deadly missile attack on Marib religious school

    பட மூலாதாரம், MAREB PRESS

  3. டாடா மோட்டர்ஸ் இழப்பு அதிகரிப்பு

    நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 4,415.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்கிறது பிடிஐ செய்தி முகமை.

    அந்த நிறுவனத்தின் வருமானம் 15% அதிகரித்து 61,378.82 கோடி ரூபாயாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. பிரிவு உபசார விழாவில் உயிரிழந்த ராணுவ வீரர்

    தூத்துக்குடி மாவட்டம் கீழ விளாத்திகுளத்தினை சேர்ந்த ராணுவ வீரர் ரவிக்குமார் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் அவருக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மயக்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

    ரவிகுமாருக்கு இன்றுடன் பணிநிறைவு பெறும் நிலையில் கடந்த 29ந்தேதி நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மயக்கி விழுந்து உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கீழ விளாத்திகுளத்தினை சேர்ந்தவர் ரவிக்குமார் (46). இவர் கடந்த 28 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

    தற்பொழுது பஞ்சாப் மாநிலம் பாட்டிலாயாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் லேப் டேக்னீசினியாக பணியாற்றி வந்துள்ளார். இன்று (31.10.2021) ரவிக்குமார் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் (29.10.2021) அவர் பணிபுரிந்த இடத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றுள்ளது. விழாவில் ரவிக்குமார் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையெடுத்து விழாவில் கலந்து கொண்டவர்கள் ரவிக்குமாரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையெடுத்து உடற்கூறாய்வுக்கு பின்னர் பஞ்சாபில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக உடல் கொண்டு வரப்பட்டு, அங்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

    ரவிக்குமார் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளாத்திகுளம் வட்டாச்சியர் விமலா அஞ்சலி செலுத்தினார்.

    ரவிக்குமார் மனைவி ராணியம்மாளிடம், ரவிக்குமார் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி ஒப்படைக்கப்பட்டது. இதையெடுத்து அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

    பிரிவு உபசார விழாவில் உயிரிழந்த இராணுவ வீரர்
  5. 'சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்' - அகிலேஷ் யாதவ்

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார் .

    அக்கட்சி வெற்றிபெற்றால் முதல்வராக பதவியேற்கப்போவது அவர்தான் என்று கருதப்படும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அகிலேஷ் யாதவ் அசாம்கார்க் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக 2019இல் தேர்வானார்.

    Akhilesh Yadav
  6. கோவேக்சின் செலுத்திக்கொண்டோர் ஆஸ்திரேலியா பயணிக்க அனுமதி

    கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் ஓர் அங்கமாக, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பு மருந்து, சீன நிறுவனமான சீனோஃபார்ம் தயாரித்த 'BBIBP-CorV' தடுப்பு மருந்து உள்ளிட்டவற்றை செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையலாம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

    கோவேக்சின் செலுத்திக்கொண்டு 12 வயதுக்கும் மேற்பட்டவர்கள், சீனோஃபார்ம் தடுப்பு மருந்து (BBIBP-CorV) செலுத்திக்கொண்டு 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆகியோர் இனி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, நடராஜன் சுந்தர்

    காவல் துறை அணிவகுப்பை பார்வையிடும்
    படக்குறிப்பு, காவல் துறை அணிவகுப்பை பார்வையிடும்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் முதல்வர் அறிவிப்பு. புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி காவல் துறை அணிவகுப்பு மரியாதையை செலுத்தினார். இதையடுத்து பண்டிகை காலங்களில் 18 வயது பூர்த்தியடைந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

    புதுச்சேரி‌ யூனியன் பிரதேசத்திற்கு பிரெஞ்சு ஆட்சியின் கீழ் 280 ஆண்டுகள் இருந்தபோது 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை கிடைத்தது. இதை கொண்டாடும் விதமாக விடுதலை நாள் விழா புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையின் பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இவ்விழாவில் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை விழா உரையில் அறிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "அரசு பொறுப்பேற்ற ஆறு மாத காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி உள்ளது. அரசுத் துறைகளில் உள்ள பத்தாயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொது விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில், 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிடர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ரூ.500 வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்” என விடுதலை விழா உரையின் போது முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். முதல்வர் உரையைத் தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  8. 'தாலிபன் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் வான் தாக்குதல்' - யோகி ஆதித்யநாத்

    தாலிபனால் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அமைதி இழந்துள்ளன என்றும், ஆனால், அந்த ஆயுதக்குழு இந்தியாவை நோக்கி நகர்ந்தால், வான் தாக்குதல் தயாராக உள்ளது எனவும் உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மக்களைச் சென்றடைவதைக்கான பாரதிய ஜனதா கட்சி நடத்தும் 'சமாஜிக் பிரதிநிதி சம்மேளன்' எனும் நிகழ்வில் அவர் உரையாற்றியபோது, அம்மாநிலத்தில் உள்ள தமது அரசியல் எதிரிகளையும் தாக்கி பேசியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

    “தற்போது பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், நமது நாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்த நாடும் தன் புருவத்தை உயர்தத் துணியாது. தாலிபன் காரணமாக பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் அமைதியை இழந்துள்ளன. ஆனால், இந்தியாவை நோக்கி தாலிபன் நகர்ந்தால், வான் தாக்குதல் தயாராக இருக்கும்”, என்று அவர் கூறியுள்ளார்.

    யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர்

    பட மூலாதாரம், get

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது - உயர் நீதிமன்றம்

    தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

    சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்ட 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர் மரபினருக்கு 7 %, மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற சாதிகளுக்கு 2.5% என பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முந்தைய அதிமுக அரசு நிறைவேற்றியது.

    அந்தச் சட்டத்தை அமலாக்குவதற்கான அரசாணையை புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு வெளியிட்டது.

  10. மன்மோகன் சிங் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

    மன்மோகன் சிங்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மன்மோகன் சிங்

    முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நேற்று (அக்டோபர் 31ம் தேதி) மாலை 5.20 மணியளவில் வீடு திரும்பினார் என ஏ என் ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் 13ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.

    கடந்த அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவரை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

  11. பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்ட ஜப்பானின் எல்.டி.பி கட்சி

    ஃபுமியோ கிஷிடா

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, ஃபுமியோ கிஷிடா

    ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி ஜப்பான் நாடாளுமன்ற கீழவையில் 233க்கும் அதிகமான இடங்களைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான கொமெய்டோ (Komeito) கட்சி 32 இடங்களைப் பெற்றுள்ளது.

    ஒட்டுமொத்தமாக எல்.டி.பி மற்றும் கொமெய்டோ கூட்டணி 293 இடங்களைப் பெற்றுள்ளது. ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் ஜப்பானின் நிக்கி225 குறியீடு இரண்டு சதவீதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

    கடந்த பல தசாப்தங்களாக ஜப்பான் அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் எல்.டி.பி கட்சி 261 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையை நிரூபித்தாலும், கொரோனா கையாண்ட விதம் குறித்து மக்களால் விமர்சிக்கப்பட்டது. 64 வயதான ஃபுமியோ கிஷிடா கடந்த செப்டம்பர் மாதம்தான் எல் டி பி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  12. பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள கிளாஸ்கோ சென்றடைந்தார் நரேந்திர மோதி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க, கிளாஸ்கோ நகரத்தில் இன்று (நவம்பர் 1ம் தேதி, திங்கட்கிழமை) பருவநிலை மாற்ற மாநாடு தொடங்க உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள, இந்திய பிரதமர் நரேந்திர மோதி கிளாஸ்கோ சென்றடைந்தார்.

    அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்ததாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் 26ஆவது சி ஓ பி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

  13. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்