ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் வழக்கில் பிணை

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் சுமார் 3 வார காலத்தை கழித்த பின்னர் ஆர்யன் கான் பிணையில் வெளியாக உள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இந்த இரவு உங்களுக்கு இனிதாகட்டும்.

  2. 2ஜி தொடர்பில் நான் அளித்த பேட்டி உண்மைக்கு புறம்பானது, மன்னிப்பு கோருகிறேன்: முன்னாள் சிஏஜி வினோத் ராய்

    வினோத் ராய்

    பட மூலாதாரம், Getty Images

    2ஜி அலைக்கற்றை விற்பனை விஷயத்தில் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பற்றி தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார் சர்ச்சைக்குரிய முன்னாள் இந்திய தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 102 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிக் குறைவான உரிமக் கட்டணத்துக்கு விற்றதால் அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசியலில் மிகப் பெரிய சூறாவளி ஏற்படக் காரணமாக இருந்தவர் வினோத் ராய்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014ம் ஆண்டு தேர்தலில் படு தோல்வி அடைந்து ஆட்சியை இழக்க காரணமாக அமைந்த குற்றச்சாட்டுகளில் இது முக்கியமானது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, பின்னாளில் குற்றமற்றவர் என்று விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

    இந்த 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடி கொடுத்ததாக தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் தவறுதலாக அப்படிக் கூறிவிட்டதாகவும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வினோத் ராய்.

    தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்

  3. திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையால் பதற்றம்

    திரிபுரா

    பட மூலாதாரம், PINAKI DAS

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

    பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்துக் குழுக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.

    அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்களைக் கண்டித்து பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இந்த குழுக்கள் போராட்டம் நடத்தின.

    இம்மாத தொடக்கத்தில் வங்கதேசத்தில் ஆண்டுதோறும் நடக்கும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பந்தலில் குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன, நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

    திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான அஸ்ஸாமுடன் ஒரு குறுகியை சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி திரிபுராவில் நடைபெற்று வருகிறது.

    வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 10க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    எல்லையோர நகரமான பனிசாகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் ஒரு மசூதியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் பெரிய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    தொடர்ந்து படிக்க இங்கு கிளிக் செய்யவும்

  4. இத்தாலி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோதி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    நவம்பர் 1-ஆம் தேதி கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக இத்தாலி மற்றும் வாடிகன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.

    அக்டோபர் 29 முதல் 31 வரை ரோம் மற்றும் வாடிகனில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக மோதி தெரிவித்துள்ளார்.

    ரோமில் நடைபெறும் 16-ஆவது ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பெருந்தொற்று, நீடித்த வளர்ச்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.

  5. வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து 5 நெருப்புக் கோழிகள் மரணம், ஆ. விஜயானந்த்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து 5 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த 26 ஆம் தேதி கவிதா என்ற பெண் சிங்கம், உடல்நலக் குறைவாலும் வயது மூப்பு காரணமாகவும் இறந்தது. இதன் தொடர்ச்சியாக, 5 நெருப்புக் கோழிகள் இறந்ததை பூங்கா நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

    இதுதொடர்பாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப் பெரிய பூங்காக்களில் ஒன்று. இங்கு 180 இனங்களில் 2,400க்கும் மேற்பட்ட விலங்குகளை விஞ்ஞான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்தப் பூங்காவில் 19 வயதான கவிதா என்ற பெண் சிங்கம் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த அக்டோபர் 26 அன்று இறந்தது. இதையடுத்து, பூங்கா மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் கால்நடை பல்கலைக்கழக மருத்துவக் குழுவுடன் இணைந்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.மேலும், இந்தப் பூங்காவில் இயற்கை முறையில் நெருப்புக் கோழிகள் இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

    இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி உடல்நலக் குறைவால் 5 நெருப்புக் கோழிகள் திடீரென இறந்தன. இதுதொடர்பாக, நெருப்புக் கோழிகளுக்கு பூங்கா மருத்துவர்கள் நோய்த் தடுப்பு சிகிச்சையளிக்கும்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் கால்நடை பல்கலைக்கழக மருத்துவர்கள் உடனிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து வைரஸ், பாக்டீரியா மற்றும் நச்சு இயல் ஆய்வுக்காக நெருப்புக் கோழிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ரத்த மாதிரிகள் மற்றும் உடல் உறுப்புகள் ஆய்விலும், `நெருப்புக் கோழிகளுக்கு காலரா இல்லை' என்பது அறியப்பட்டது. மீதமுள்ள பறவைகளையும் அவற்றின் இருப்பிடத்தையும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று காரணமாக இரண்டு சிங்கங்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ஒரு பெண் சிங்கமும் 5 நெருப்புக் கோழிகளும் உயிரிழந்த சம்பவம், சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  6. ஷாருக் கான் மகனுக்கு போதைப்பொருள் வழக்கில் பிணை

    போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு பாம்பே உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

    மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் சுமார் 3 வார காலத்தை கழித்த பின்னர் அவர் பிணையில் வெளியாக உள்ளார்.

    இதற்கு முன்னதாக ஆர்யன் கானுக்கு இரண்டு முறை பிணை மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அவரைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்பு முழுமையான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ அவருக்கு பிணை வழங்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஆர்யன் கான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அவரிடம் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வாதிட்டனர்.

    அக்டோபர் 2-ம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற ஒரு சொகுசுக் கப்பலில் நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ ரெய்டு நடத்தியது. அப்போது அந்தக் கப்பலில் போதை பார்ட்டி நடந்துகொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

    aryan khan bail

    பட மூலாதாரம், Getty Images

  7. சுடப்பட்டவரின் உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? தேடி வரும் போலீசார்

    தேடல்

    தூத்துக்குடியில் கடந்த 15ம் தேதி என்கவுண்டரில் ரவுடி சுட்டுகொல்லப்பட்ட தோட்டாக்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி அருகே உள்ள கூட்டம்புளி பகுதியினை சேர்ந்த ரவுடி துரைமுருகன். இவர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில்; தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி முள்ளக்காடு உப்பள பகுதியில் ரவுடி துரைமுருகன் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

    இதனையடுத்து கடந்த 15-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் அடிப்படையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில் போலீசார் துரைமுருகனை தேடி முள்ளக்காடு உப்பள பகுதிக்கு சென்றனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் உயிரிழந்தார்.

    துரைமுருகன உடல் உடற்கூராய்வு செய்ப்ட்டது ஆனால் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் இல்லாததால்; சம்பவம் நடந்த இடத்தில் சுடப்பட்ட தோட்டாக்களை துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  8. ஐஐடியில் இடம்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவரின் கல்வி செலவை அரசு ஏற்கும்: மு.க.ஸ்டாலின்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    திருச்சியைச் சேர்ந்த பி.அருண் குமார் அரசு பள்ளியில் படித்து, ஜே.இ.இ (அட்வான்ஸ்) தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நிலையில், அவருக்கு ஹைதராபாத் ஐ.ஐ.டி.யில் பி.டெக் ரசாயன பொறியியல் படிக்க இடம் கிடைத்திருந்தது.

    ஒரு கூலித் தொழிலாளரின் மகனான அருண் குமாரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  9. இந்தியா கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையுமா?

    பிரிட்டனில் ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் தனது திட்டத்தை இந்தியா அறிவிக்கவுள்ளது.

    சீனா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் அதிகப்படியாக கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.

    இந்தியாவின் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெரும்பான்மையாக நம்பியிருக்கும் பொருளாதாரம் ஆகிய காரணங்களால் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை குறைக்க உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  10. கர்நாடக பள்ளியில் 32 மாணவர்களுக்கு கோவிட்

    கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தை சேர்ந்த கலிபீடு என்ற இடத்தில் உள்ள ஒரே பள்ளியை சேர்ந்த 32 மாணவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த பள்ளியை மாவட்ட ஆட்சியர் பி.சி.சதீஷ் பார்வையிட்டார்.

    தொற்று கண்டறியப்பட்ட எல்லா மாணவர்களுக்கும் அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. சீனாவின் பருவநிலை மாற்றக் கொள்கை குறித்து உலகம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

    சீனா இதில் வெற்றியடைவது ஏன் அவசியமானதாகவுள்ளது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடியதாக கூறி மூன்று மாணவர்கள் கைது

    cricket fans

    பட மூலாதாரம், Getty Images

    ஞாயிறன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றதை கொண்டாடியதாக கூறப்பட்டு காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்கள் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்கள் `இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை` மற்றும் `பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை` எழுப்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் மீது “பகைமையை தூண்டியது மற்றும் சைபர் பயங்கரவாதம்” போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றிப் பெற்றதை கொண்டாடியதாக கூறப்பட்டு முஸ்லிம்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருதில் இந்த ஆக்ரா கைது சமீபத்திய நடவடிக்கையாகவுள்ளது.

    இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்தியாவின் இந்த தோல்விக்கு பிறகு அணியில் உள்ள முஸ்லிம் கிரிக்கெட் விரரான முகமது ஷமி சமூக வலைதளங்களில் பெரிதும் தாக்கப்பட்டார். அவர் வேண்டுமென்றே பாகிஸ்தான் அணிக்கு ரன்களை வாரி வழங்கினார் என சமூக வலைதளங்களில் பலர் சாடினர். ஆனால் ஷமிக்கு ஆதரவாக இந்தியாவில் பல பிரபலங்கள் தங்களின் ஆதரவு கரங்களை நீட்டினர்.

  13. அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல் விலை

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.105.13 ஆகவும், டீசலின் விலை ரூ. 101.25 ஆகவுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?

    காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்?

    கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. அந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது என்றாலும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மிக மிக மோசமான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது.

    சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருந்தது. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துதல், கடல்நீரைக் குடிநீராக்கிப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் தாண்டி இந்த நிலைமை ஏற்பட்டது. இத்தனைக்கும் அதற்கு முந்தைய ஆண்டுகளில்தான் பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டிருந்தது சென்னை.

    2010ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாடோ, சென்னையோ இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதென்பது ஒரு வழமையான நிகழ்வாகிவருகிறது. 2011ஆம் ஆண்டின் இறுதியில் தானே புயல், அதற்குப் பிறகு நிலம் புயல், 2015ல் சென்னைப் பெருவெள்ளம், 2016ல் வார்தா புயல், 2017ல் ஒக்கி, 2018ல் கஜா, 2019ல் சென்னையின் கடும் தண்ணீர் வறட்சி, 2020ல் நிவர் புயல் என தொடர்ச்சியாக இயற்கைப் பேரிடர்கள் தமிழ்நாட்டை உலுக்கிவருகின்றன.

  15. இந்தியாவின் கொரோனா நிலவரம்

    இந்தியாவில் புதியதாக 16 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. `சீனாவின் ஏவுகணை சோதனை மிகவும் கவலையளிக்கிறது`: அமெரிக்காவின் உயர் ஜெனரல்

    சீனா ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது என்பது ஸ்புட்னிக் தருணத்தை நினைவுப்படுத்துவதாக தெரிகிறது என்று அமெரிக்க உயர் ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதான் பனிப்போரின் ஆயுத போட்டிக்கான காரணமாகவும் அமைந்தது.

    ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசிய ஜெனரல் மார்க் மிலி, சீனாவின் ராணுவம் வேகமாக விரிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    இம்மாத தொடக்கத்தில் சீனாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க ராணுவத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

    ஆனால் தாங்கள் எந்த ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை, அது விண்கலப் பரிசோதனை என்றே சீனா தெரிவித்துள்ளது.

    “இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை கவலையளிக்கும் ஒன்று. இது ஸ்புட்நிக் தருணத்தை போன்று உள்ளது. நாங்கள் இதை கவனித்து வருகிறோம்.” என மார்க் மிலி தெரிவித்துள்ளார்.

  17. நேயர்களுக்கு வணக்கம்!

    தமிழகம், இந்தியா மற்றும் உலகளவிலான முக்கிய செய்திகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    நேற்றைய நேரலை பக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.