பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் ரூ. 500 கோடி கேட்டு மின் நிறுவனம் நோட்டீஸ்
தமிழ்நாடு மின்வாரியம், மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பிஜிஆர் எனர்ஜி ஆகியோரை ஒன்றாக இணைத்து ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் வேறு ஒருவரும் 500 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
திராவிடத்தின் கொள்கை என்ன? - இல்லம் தேடி கல்வி திட்ட விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
“இல்லம் தேடி கல்வி” போன்ற திட்டங்கள் தான் திராவிடத்தின் கொள்ளை என்று இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து விழா மேடையில் பேசிய முதல்வர் இத்திட்டம் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
"இல்லம் தேடி கல்வி என்பது சாதாரண திட்டம் அல்ல. திட்டங்களை போல இதுவும் ஒரு திட்டம் என சொல்லிவிட முடியாது. திட்டம்தான் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்ற போகிறது. இதன் மூலமாக நூற்றாண்டு காலமாக மாணவர்களுடைய வெளிச்சம் பரவி இருக்கும். நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாக கொண்டு சேர்த்தது ஆரம்பக் கால திராவிட இயக்கம். திராவிடம் என்றால் என்ன என்று கோமாளிகளும், அதைப்பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் திராவிடத்தின் கொள்கை என்பதை மறந்து விடக்கூடாது," என்றார் அவர்.
"கொரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்ட அதிகப்படியான முயற்சிகளை மாணவர்கள் செய்தாக வேண்டும். பள்ளி நேரத்தில் மட்டுமே மாணவர்களை பழைய நிலைக்கு மாற்ற முடியாது அதன் காரணமாகவே பள்ளி முடிந்த பிறகு கூடுதல் நேரத்தில் இந்த பயிற்சிகளை கொடுக்க இருக்கிறோம். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படையான கொள்கை. அந்த அடிப்படை நோக்கங்களை அடைய பெரும் புரட்சிகளை நடத்தி இருக்கிறது” என்று அவர் பேசினார்.
டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக் கோப்பை முதல் பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.
முதலில் ஆடிய வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹீம் 29 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மில்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ஆர்யன் கானுக்கு இன்றும் பிணை இல்லை
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கானின் மகனுக்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை. பிணை மனு மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.
ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படாத நிலையிலும் அவருக்கு இன்னும் பிணை வழங்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் மூவர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு அமைப்பான நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் வழக்கறிஞர்கள் நாளை பிணை மனுவை எதிர்த்து நாளை வாதிட உள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இலங்கையின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியில் தமிழர்கள் இல்லை
இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. 10 சிங்களவர்களும், நான்கு முஸ்லிம்களும் இந்த செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ள பின்னணியில், ஒரு தமிழ் பிரதிநிதி கூட இதில் இல்லை.
ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இடம் அளிக்கப்படாதது மற்றும் அதன் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி பதில் அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தரப்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்படும் விவகாரங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது ஒரு மிகப்பெரிய நடவடிக்கை; இதன் மூலம் உண்மை வெளிவரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நாங்கள் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பினோம். இன்று உச்சநீதிமன்றம் அதன் கருத்தை வெளியிட்டு நாங்கள் எதைக் கூறினோமோ அதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது.
நாங்கள் மூன்று கேள்விகள் கேட்கிறோம். உளவு பார்க்கும் மென்பொருளை பயன்படுத்த ஒப்புதல் அளித்தது யார்? யாருக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டது? வேறு நாடுகளுக்கு நமது மக்கள் குறித்த தகவல்களை அணுக முடியுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
மமதா பதாகைகள் கிழிப்பு - திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் கோவா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இம்முறை போட்டியிடுகிறது.
பரப்புரைக்காக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கோவா வரவுள்ள நிலையில், அவரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பல பதாகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்கிறது பிடிஐ செய்தி முகமை.
இது பாரதிய ஜனதா கட்சியின் சகிப்புத்தன்மை இன்மை என்று திரிணமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
முதியவர்கள் அயோத்தி செல்ல டெல்லி அரசு நிதியுதவி
முதியவர்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும் மத தலங்களின் பட்டியலில் அயோத்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தமிழக மீனவர்கள் இருவரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு, பிரபுராவ் ஆனந்தன்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சென்ற மீன்பிடி படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கியது.
இதில் ஒருவர் மீனவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய இரு மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை சட்டவிரோதமாக இலங்கைக்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து முகாம்களில் தங்க வைத்தினர்.
வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
மனித குலத்திற்கு எதிரான குற்றம், தொடர்ந்து பரப்பிய போலிச் செய்திகளால் அதிபர் மீது சட்ட நடவடிக்கை
பிரேசிலின் செனட் கமிட்டி (நாடாளுமன்றக் குழு) அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது சட்டபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இந்த கமிட்டியின் தலைவர் செனட்டர் ஒமர் அசிஸ், பொல்சனாரூ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பிரேசிலில் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சுயாதீன விசாரணை அமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்கவுள்ளார்.
சயீர் பொல்சனாரூ தன் மீது எந்த குற்றமும் இல்லை எனத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
பிரேசிலில் கொரோனா பெருந்தொற்றால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் கொரோனா தொற்று உயிரிழப்புகள் அதிகம்.
புதுச்சேரியில் 1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறப்பு, நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனிடையே கொரோனா தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட மூன்று நாட்களிலும் நவம்பர் 8 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
சுழற்சி முறையில் நடைபெறும் இந்த வகுப்புகள் அனைத்தும் அரை நாள் மட்டுமே இயங்கும். மேலும் பெற்றோர்கள் சுய விருப்பத்திற்கேற்ப மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், வருகைப் பதிவேடு கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும். அனைத்து பள்ளிகளும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
என்னுடைய ட்வீட் தவறு என்று நிரூபித்தால்..” - நவாப் மாலிக்
மகராஷ்டிராவின் மாநில அமைச்சர் நவாப் மாலிக்,
தேசிய நார்கோடிக்ஸ் பீரோவின் மண்டல இயக்குநர் வாங்கடே குறித்து டிவிட்டரில் இட்ட பதிவு
தவறு என்று நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக வாங்கடே போலி பிறப்பு சான்றிதழை பயன்படுத்தி
அரசுப் பணியில் சேர்ந்ததாக மாலிக் குற்றம் சுமத்தியிருந்தார்.
“நான் ட்வீட் செய்த பிறப்பு சான்றிதழ் அல்லது
`நிக்கா நாமா` தவறு என்று
அவர்கள் நிரூபித்தால், நான் அரசியலில்
இருந்தே விலகிறேன். என்னுடைய பதவியையும் ராஜினாமா செய்கிறேன். நான் அவரை ராஜினாமா செய்ய
வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், சட்டப்படி, அவர் அவருடைய வேலையை இழப்பார்", என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளதாக
ஏ.என்.ஐ முகிமை தெரிவித்துள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் தான் இலக்கு
வைக்கப்படுவதாகவும் வாங்கடே முன்னர் தெரிவித்திருந்தார்.
கேரளாவில் அதிகமான தொற்று பதிவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 451 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
585 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கேரளாவில் மட்டும் 7 ஆயிரத்து 163 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, பெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
பெகாசஸ் வேவு பார்ப்பு வழக்கில் சுயாதீனமான குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறி இந்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர்.
இந்திய உச்ச நீதிமன்றம் இந்த விவரம் தொடர்பாக மூவர் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் ஜோஷி மற்றும் தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு எட்டு வார காலத்தில் தமது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்.
ஒருவரின் தனியுரிமை மீது கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகள் அரசமைப்பு சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரமணா இன்று தீர்ப்பு வழங்கும்போது கூறினார்.
கள்ளக்குறிச்சி பட்டாசுக் கடை தீ விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு, நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடையில்
ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்
குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகர
பகுதியில் உள்ள பிரதான சாலையில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை
உள்ளது. இந்த ஜவுளிக்கடைக்கு பின்புறம் பட்டாசு கடையை இயக்கி வருகிறார். குறிப்பாக
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை மற்றும் குடோனில் ஏராளமான பட்டாசுகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில்
திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையிலிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர
சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் சிதறியது.
அப்போது அருகே இருந்த இனிப்புக்கடையில் வைக்கப்பட்ட
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த கடைக்கு அருகே இருந்தவர்கள்
தீயில் சிக்கியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்து பட்டாசுக் கடையில் வெடித்ததில்
அருகருகே இருந்த ஜவுளிக்கடை, இனிப்புக்கடை,
டீக்கடை,
செல்போன் கடைகளில் தீ பரவத் தொடங்கியது.
தீ விபத்து குறித்து தகவலறிந்ததும்
சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம்
உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில்
சிக்கி காயமடைந்தவர்களை மீட்பு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தீ விபத்தில் சிக்கிய கடைகள் இடிந்து
விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல் துறையினர்
ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தன்று பட்டாசுகள் வெடித்து
சிதறியதால் கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பகுதி
பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது பட்டாசு மற்றும் இனிப்பு கடை
அருகே இருந்தவர்கள் மீது பட்டாசு வெடித்து சிதறியதில் 5 பேர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 10 பேர் காயம்
காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி
ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக் ஆகியோர்
நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்
செந்தில்குமார் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் நேரில்
பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்துபிபிசி தமிழிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹூல் ஹக்,"துணிக்கடைக்கு பின்புறம் இருந்த பட்டாசுக்
கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் மூலம் துணிக்கடையில் தீப்பரவியதில் தீ
விபத்து மேலும் அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசுக் கடை மற்றும்
ஜவுளிக்கடை முழுவதுமாக எறிந்துவிட்டது. மேலும் அருகே இருந்த செல்போன் கடை உட்பட
மூன்று கடைகளுக்கு தீ பரவியதால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக பட்டாசுக் கடையை கடந்த 10 ஆண்டுகளாக உரிய அனுமதியுடன் கடை உரிமையாளர்
நடத்தி வருகிறார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் எவ்வாறு தீ விபத்து
ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,"
எனக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஐந்து
லட்ச ரூபாய்நிவாரண உதவி
வழங்கவும், தீவிர
சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
பட மூலாதாரம், ANI
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று
வெற்றி பெற்ற பாகிஸ்தான், அடுத்ததாக நியூசிலாந்து
அணியையும் வீழ்த்தியுள்ளது.
செவ்வாயன்று நடைபெற்ற இந்த போட்டியில்
நியூசிலாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான்
அணி.
கடந்த
மாதம் பாகிஸ்தான் சென்றிருந்த நியூசிலாந்து அணி கடைசி நிமிடத்தில் பாதுகாப்பு
காரணங்களுக்காக ஆட்டத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், நேற்றைய போட்டியிலும்
டாஸ் வென்றார். பின் நியூசிலாந்து அணியை பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டது
பாகிஸ்தான் அணி.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 134 ரன்களை
எடுத்திருந்தது.
எந்த
ஒரு நியூசிலாந்து அணி வீரரும் 30 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. பாகிஸ்தான் பந்து
வீச்சாளர் ஹரிஸ் ரெளஃப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
135 ரன்கள்
இலக்கு என்பது பாகிஸ்தானுக்கு சற்று எளிதானதாகவே இருந்தது. எட்டு பந்துகள்
மீதமிருக்கும் நிலையில்,ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் இலக்கை அடைந்தது.
இதனை
தொடர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடன் வரும் வெள்ளிக்கிழமையன்று விளையாடவுள்ளது.
5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து - எஃப்டிஏ ஆதரவு
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசுக் குழு ஒன்று ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பு மருந்தை
ஐந்து வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
அமெரிக்க உணவு
மற்றும் மருந்து நிர்வாகக் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் இதனை ஆதரித்துள்ளனர்
இதன்மூலம் ஒரு சில வாரங்களில் இதற்கான அனுமதி வழங்கப்பெறும்.
செப்டம்பர் மாதம்
5-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்து ஏற்றது என தனது ஆராய்ச்சி
தரவுகள் தெரிவிப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவில்
ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பு மருந்து
செலுத்தும் பணி தொடங்குவதற்கு மேற்கொண்டு உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின்
அதிகாரப்பூர்வ அனுமதியும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அனுமதியையும் பெற
வேண்டும்.
இந்த அனுமதியை
வரும் நவம்பர் 2ஆம் தேதியன்று வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பொருள் அடுத்த
நாளே தடுப்பு மருந்து செலுத்து பணி தொடங்கும் என்பதாகும்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் ரூ. 500 கோடி கேட்டு மின் நிறுவனம் நோட்டீஸ், முரளிதரன் காசி விஸ்வநாதன், பிபிசி தமிழ்
தமிழ்நாடு மின்வாரியம், மின்வாரியத்
துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பிஜிஆர் எனர்ஜி ஆகியோரை ஒன்றாக இணைத்து ஊழல்
குற்றச்சாட்டு சுமத்திய பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் வேறு ஒருவரும்
500 கோடி ரூபாய்
இழப்பீடாக வழங்க வேண்டுமென பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக, பா.ஜ.கவின்
மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது
ஊழல் புகார்களைச் சுமத்தி ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுவந்தார். அதன்
தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி மேலும் ஒரு ட்விட்டர் பதிவை அவர்
வெளியிட்டார். அதில் "கோபாலபுரம் - பிஜிஆர் எனர்ஜி - தமிழ்நாடு மின் வாரியம்
- செந்தில் பாலாஜி ஆகியோர் கைகுலுக்கிக் கொள்வதைப் போல ஒரு வரி
எழுதப்பட்டிருந்தது. "இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்...விடை எளிதில்
புரியும்!" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அந்த ட்வீட்டில்
குறிப்பிடப்பட்ட பிஜிஆர் எனர்ஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் தனது
வழக்கறிஞர் மூலம் கே. அண்ணாமலை என்பவருக்கும் செல்வகுமார் என்பவருக்கும் நோட்டீஸ்
ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் அக்டோபர் 21ஆம் தேதி
அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவு அவதூறாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, செல்வகுமார்
என்பவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு குறித்தும் கூறப்பட்டுள்ளது.
பிஜிஆர் எனர்ஜிக்காக தமிழ்நாடு மின்வாரியத்தை
எதிர்த்து தி.மு.க. எம்பியான வில்சன் வாதாடியதாக செல்வக்குமார்
குறிப்பிட்டிருந்தார். இதன் ஒரு பகுதியை அண்ணாமலை வெளியிட்டிருப்பதை இந்த நோட்டீஸ்
சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, தி.மு.க. எம்.பியான வில்சன் வாதாடியது புதிய
அரசு பதவியேற்பதற்கு முன்பாக நடந்த விஷயம் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக, பிஜிஆர்
நிறுவனத்தை மோசமாகச் சித்தரித்ததாலும் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம்
என்றும் அதற்கு உதவ செந்தில் பாலாஜி முயல்கிறார் என்றும் ட்வீட்டிலும் செய்தியாளர்
சந்திப்பிலும் கூறியது, நிறுவனத்திற்கு சொல்ல முடியாத அளவுக்கு
இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகக் இந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கே.
அண்ணாமலையும் செல்வகுமார் என்பவரும் சேர்ந்து தங்களது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட
சேதத்திற்கு இழப்பீடாக 500 கோடி ரூபாயை வழங்க வேண்டுமென்றும் மேலும்
மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் இனிமேல் இந்த நிறுவனம் குறித்து எந்தக்
கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட தகவல் சமூக
வலைதளங்களில் வெளியானதும் கே. அண்ணாமலை மேலும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான்! தி.மு.க. அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை! நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது சந்திப்போம்! #ResignEBMin" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வகுமார் என்ற பதிவரும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
நேயர்களுக்கு வணக்கம்!
தமிழகம், இந்தியா
மற்றும் உலகளவிலான முக்கிய செய்திகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.