இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மன்மோகன் சிங் உடல்நிலை தொடர்பாக பரவிய வதந்தி “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து பகிருவோம்,” என காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரனாவ் ஜா தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    பிரதமர் மன்மோகன் சிங்

    பட மூலாதாரம், Getty Images

  2. கடலூர் திமுக எம்.பி-க்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    திமுக எம்பி ரமேஷை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த வழக்கில், திமுக எம்பி ரமேஷை ஒரு நாள் காவலில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு கடலூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று பிற்பகல் அனுமதி அளித்தது.

    இதையடுத்து எம்பி ரமேஷிடம் சிபிசிஐடி போலீசார் மூன்று மணி நேரத்தில் விசாரணையை முடித்துவிட்டு, கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை முன்னிருத்தினர்.

    இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை அக்டோபர் 27ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

  3. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான ஜெர்சி வெளியீடு

    சில நாட்களில் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான ஜெர்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    ஜெர்சியில் இருக்கும் வடிவங்கள் ரசிகர்கள் அளித்த நூறு கோடி உத்வேகங்களால் உருவாக்கப்பட்டவை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. இலங்கை ஜனாதிபதி, பிரதமரை சந்தித்த இந்திய ராணுவ தளபதி

    இலங்கைக்கு அலுவல்பூர்வமான பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்தார்.

    கோட்டபாய ராஜபக்ஷ உடன் நரவனே
    படக்குறிப்பு, கோட்டபாய ராஜபக்ஷ உடன் நரவனே
    மஹிந்த ராஜபக்ஷ  உடன் நரவனே
    படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ உடன் நரவனே
  5. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்

    தி.மு.க. - 757

    அ.தி.மு.க. - 158

    சி.பி.ஐ. - 3

    சி.பி.எம். - 4

    பா.ஜ.க. - 8

    தே.மு.தி.க. - 1

    காங்கிரஸ் - 30

    ம.தி.மு.க. - 14

    அ.ம.மு.க. - 4

    பா.ம.க. - 35

    வி.சி.க. - 11

    சுயேச்சைகள் - 76

  6. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்:

    தி.மு.க. - 83

    காங்கிரஸ் - 6

    அ.தி.மு.க. - 1

    ம.தி.மு.க. - 1.

  7. தி.மு.க. பெற்ற வெற்றி, புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி - அ.தி.மு.க அறிக்கை

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி, புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதை சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்திக் காட்டுவோம் என்று அ.இ.அ.தி.மு.க அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதிமுகவின் முழு அறிக்கையை பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் படிக்கலாம்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. டி20 உலகக் கோப்பைக்கு சம்பளம் வாங்காமல் பணிபுரியும் தோனி

    இன்னும் சில நாள்களில் தொடங்க இருக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆலோசகராகப் பணிபுரிவதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்தவிதமான சம்பளமும் பெறவில்லை என்ற செய்தியைக் கேட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டிகளுக்கு கட்டணம் எதையும் பெறாமல் பணியாற்றுவதற்கு தோனி முன்வந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவ்ரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். இந்தத் தகவலை வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்திருந்தார்.

    dhoni t20 world cup

    பட மூலாதாரம், bcci / ipl

  9. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்

    தி.மு.க. - 69

    காங்கிரஸ் - 5

    ம.தி.மு.க. - 1.

  10. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்

    தி.மு.க. - 700

    அ.தி.மு.க. - 144

    சி.பி.ஐ. - 3

    சி.பி.எம். - 4

    பா.ஜ.க. - 7

    தே.மு.தி.க. - 1

    காங்கிரஸ் - 30

    ம.தி.மு.க. - 14

    அ.ம.மு.க. - 4

    பா.ம.க. - 32

    வி.சி.க. - 11

    சுயேச்சைகள் - 72.

  11. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: திமுக தொடர்ந்து முன்னிலை

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அணி மிக அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இதுவரை வெளியாகியுள்ள தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:

    ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்:

    தி.மு.க. - 685

    அ.தி.மு.க. - 142

    காங்கிரஸ் - 30

    ம.தி.மு.க. - 14

    வி.சி.க. - 10

    பா.ஜ.க. - 7

    சி.பி.ஐ. - 3

    சி.பி.எம். - 4

    தே.மு.தி.க. 1,

    அ.ம.மு.க. - 4

    பா.ம.க. - 32

    சுயேச்சைகள் - 71

    மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்:

    தி.மு.க. - 51

    காங்கிரஸ் - 4

    ம.தி.மு.க. - 1.

  12. மாறு அல்லது மடி: பிரிட்டனுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடும் எச்சரிக்கை

    வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    பிரிட்டனில் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்தனர்.

    தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காவிட்டால் “அது பிரிட்டனிலும் இப்போதோ பிறகோ நடக்கும்” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

    “மாறு அல்லது மடி” என்று அந்த அமைப்பின் தலைவர் எம்மா ஹோவார்ட் கூறியுள்ளார்.

    இப்படியான கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கும் தொனி பருவநிலை மாறுபாட்டு விளைவுகளுக்கு அரசை தயார்படுத்துவதற்காக வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    புதன்கிழமை இது வெளியிடப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்னரே அதன் உள்ளடக்கம் பிபிசிக்கு கிடைத்திருக்கிறது.

    இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள சுற்றுச்சூழல் துறை, பிரிட்டனை பருவநிலை மாறுபாட்டு விளைவுகளில் இருந்து காக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலைப் பக்கத்துக்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, எம். மணிகண்டன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்