பாலியல் வல்லுறவு புகார்: கோவை நீதிபதி முன்பு விமானப்படை அதிகாரி சரண்
தமது புகார் தொடர்பாக விமானப்படை சரியாக நடவடிக்கை எடுக்காததால் உள்ளூர் காவல் நிலையத்தில் தமது புகார் மீது விசாரணை நடத்தக் கோரும் கட்டாயம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக புகார் கொடுத்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
செப்டம்பர் 26ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் செப்டம்பர் 27ஆம் தேதி காலை மீண்டும் தொடங்கும். மேலதிக செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
ஜெர்மனியில் வாக்குப்பதிவு நிறைவு - புதிய தலைவர் தேர்வில் கடும் போட்டி
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஓலாஃப் ஷோட்ஸ், மைய இடதுசாரி சமூக ஜனநாயகவாதி கட்சி வேட்பாளர்
ஜெர்மனியில் ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு நாட்டின் தலைமை பதவிக்கு யார் வருவார் என்பதில் கடும் போட்டி காணப்படுகிறது.
அந்த நாட்டில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகவாதிகள் கட்சி சற்றே கூடுதலாக முன்னிலை வகிப்பதாக கூறுகின்றன.
அதன் வேட்பாளர் ஓலாஃப் ஷோட்ஸ், தேசம் மாற்றத்திற்காக வாக்களித்ததாகவும், அடுத்த அரசாங்கத்தை உருவாக்கி வழிநடத்த தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மற்றும் ஏங்கலா மெர்க்கலின் ஆதரவைப் பெற்ற ஆர்மீன் லேஷெட்டும் அடுத்த அரசாங்கத்தை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தான் எதிர்பார்ப்பது போல தமது கட்சிக்கு முடிவுகள் கிடைக்காத நிலையை தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலில் க்ரீன்ஸ் கட்சி மூன்றாவது இடத்திலும், லிபரெல் எஃப்டிபி கட்சி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன.
ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு மூன்று கட்சிகள் தேவைப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை நீளமான மற்றும் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜெர்மனியின் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய சில வாரங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற புதிய கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்ட நரேந்திர மோதி
பட மூலாதாரம், PIB PMO
படக்குறிப்பு, நாடாளுமன்ற கட்டட கட்டுமான பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி
அமெரிக்காவுக்கு ஐந்து நாட்கள் பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று டெல்லி திரும்பிய நிலையில், இன்று இரவு அவர் நாடாளுமன்ற புதிய கட்டட கட்டுமானப் பணிகளின் நிலையை நேரில் பார்வையிட்டார்.
இது தொடர்பான படங்களை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.
பட மூலாதாரம், PIB PMO
பட மூலாதாரம், PIB PMO
பட மூலாதாரம், PIB PMO
கோவை விமானப்படை பெண் அதிகாரியின் பாலியல் வன்கொடுமை புகார்: சரண் அடைந்த அதிகாரிக்கு நீதிமன்ற காவல்
பட மூலாதாரம், IAF
படக்குறிப்பு, விமானப்படை பயிற்சிக்கல்லூரி, கோயம்புத்தூர்
தமது பாலியல் புகார் மீது விமானப்படை சரியான நடவடிக்கை எடுக்காததால் சிவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கட்டாயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
29 வயதாகும் அந்த பெண் அதிகாரி கோவை விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
கோவை ரெட்ஃபீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் கடந்த 10ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற நிலையில், தன்னை ஃபிளைட் லெப்டிணன்ட் பதவியில்உள்ள அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த பெண் கூறியிருக்கிறார்.
இந்த மையத்தில் கடந்த மாதம்தான் விமானப்படையைச் சேர்ந்த 30 அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கியது.
அந்த பெண் அளித்த புகாரின்படி, விளையாட்டில் ஈடுபட்டபோது காயம் அடைந்த தான், மாத்திரையை உட்கொண்டு விட்டு தூங்கி விட்டதாகவும் கண் விழித்து பார்த்தபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரின்பேரில் கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரம்பநிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கைது செய்யப்பட்ட அதிகாரி, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புகார்தாரரான பெண் அதிகாரியை அதே விமானப்படை தளத்தில் பணியாற்றும் ஃபிளைட் லெப்டிணன்ட் பதவி வகிக்கும் ஆண் அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, தனக்கு எதிராக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி முன்பாக சரண் அடைந்தார்.
அப்போது விமானப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவகாரங்களில் விசாரணை நடத்த காவல் துறைக்கு வரம்பு இல்லை என்று குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், விமானப்படை நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை என்பதாலேயே காவல்துறையின் உதவியை நாடியதாக கோவை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து சரண் அடைந்த ஆண் அதிகாரியை உடுமலைப்பேட்டை சிறையில் நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.
குலாப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கிற குலாப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.
இந்தப் புயலை ஒட்டி தெற்கு ஒடிஷா, வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில் தற்போது, ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. வட ஆந்திரப் பிரதேசம், தெற்கு ஒடிஷாவின் கலிங்கப்பட்டினம் - கோபால்பூர் இடையே 75-85 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
படக்குறிப்பு, ராஜசேகர்
கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாகக் கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட ஐந்து பேர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தமிழ், தெலுங்கில் நடிக்கும் புதிய படம் - அறிவிப்பு வெளியானது
நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு தனது 66வது படமாக வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் அல்லு அர்ஜூன், ராம் சரண், மகேஷ் பாபு, பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை இயக்கி வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் வம்சி தமிழில் கார்த்தி, நாகார்ஜூனா நடித்த 'தோழா' படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது நடிகர் விஜயின் அடுத்த படமாக உருவாக இருக்கும் 'தளபதி 66' தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகும். இது இயக்குனர் வம்சியின் ஆறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்திய மகளிர் அணி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இன்று (செப் 26, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி, 26 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகள் நடைபெறுமென திட்டமிடப்பட்டது.
3 ஒரு நாள் போட்டிகளில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றது. இன்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை இரு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, ஆஸ்திரேலியாவின் 26 தொடர் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இரு அணிகளுக்கு மத்தியிலான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
மலையேறிய மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய இந்திய பிரதமர் மோதி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் 81ஆவது மன்கீ பாத் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை) ஒளிபரப்பானது. அதில் உலக நதிகள் தினத்தை அனைவரும் நினைவுகூர வேண்டும் என்றும், இந்தியாவுக்கும் நதிகளுக்கும் பாரம்பரியமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறினார்.
மேலும், சில தினங்களுக்கு முன் 8 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஓர் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது. அந்த அணி சியாச்சின் பனிமலையில் 15,000 அடி உயரத்தில் இருக்கும் ‘குமார் போஸ்ட்’ என்கிற இடத்தை அடைந்துள்ளனர். இது சக இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான விஷயம் என பாராட்டினார்.
அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்திய பிரதமர் மோதி நாடு திரும்பினார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தன் மூன்று நாள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, நாடு திரும்பிவிட்டதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
அவருக்கு கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பாலம் தொழில்நுட்ப விமான தளத்தில் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான நட்பு புதிதல்ல, அவர்கள் இருவருக்கு மத்தியில் பழைய உறவு இருக்கிறது. அதை அமெரிக்க அதிபரும் ஆமோதித்துள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே பி நட்டா கூட்டத்தில் பேசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சோமாலியாவில் அதிபர் மாளிகைக்கு அருகில் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி
பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை, சோமாலியாவின் தலைநகரான மொகடிசூவில், அதிபர் மாளிகைக்கு அருகில், ஒரு தற்கொலை குண்டுதாரி கார் வெடித்ததில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
குறைந்தபட்சமாக எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட காவல் துறை முதன்மை அதிகாரி முகாவியே அஹ்மத் முடே பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு, ஒரு சிறிய செய்தி அறிக்கை மூலம் இஸ்லாமிய ஆயுதமேந்திய கடும்போக்குவாதிகள் குழுவான அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.
அதிபர் மாளிகையை நோக்கிக்குச் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றை தாக்க இலக்கு வைக்கப்பட்டிருந்தது
காவலர்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது வெடிகுண்டு வெடித்ததாக, சம்பவத்தைப் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
லா பால்மா தீவில் விமான சேவைகள் ரத்து - தீவிரமடையும் எரிமலை வெடிப்பு
பட மூலாதாரம், Reuters
கடந்த சில தினங்களாக ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தற்போது கும்ரே வியெகா எரிமலையின் வெடிப்பு தீவிரமடைந்து வருவதால், லா பால்மா தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கும்ரே வியெகா எரிமலை வெடிப்பினால் இதுவரை 350 வீடுகள் அழிந்துள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை சூழ்ந்துள்ளது.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபம் செய்தியாளர் அ.தா.பாலசுப்ரமணியன், விக்னேஷ் அ, கெளதமன் முராரி.