நன்றி நேயர்களே!
இன்று இந்த நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணைந்திருந்த நேயர்கள் அனைவருக்கும் பிபிசி தமிழின் நன்றி.
மீண்டும் நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க, ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என் வி ரமணா கூறியுள்ளார்.
இன்று இந்த நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணைந்திருந்த நேயர்கள் அனைவருக்கும் பிபிசி தமிழின் நன்றி.
மீண்டும் நாளை வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம்.
இந்த இரவு இனியதாகட்டும்.
அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் புதுப்பிக்கவல்ல எரிசக்திக் களம் குறித்து ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் வில்மரை சந்தித்துப் பேசினார். மெல்லிய ஃபில்ம் தொழில்நுட்பம் மூலம் சூரிய விசை மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் குறித்து அவர் பிரதமர் மோதியிடம் விளக்கினார். இந்தியாவை இந்த தொழிலில் உலக விநியோக சங்கிலியில் இணைப்பது குறித்தும் அவர் பேசினார் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடோப் நிறுவனத்தின் தலைவர் ஷாந்தனு நாரயெனை இன்று சந்தித்தார். மேலும் இளைஞர்களுக்கு ஸ்மார்ட் கல்வியை வழங்குவதற்கான தொழில்நுட்ப மேம்படுத்துதல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் உள்ள யூரி அருகே உள்ள ராம்பூர் செக்டாரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தங்கள் டிவிட்டர் பதவில் கூறியுள்ளது ஏ.என்.ஐ.
இந்த மூவரும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்து அண்மையில் இந்தியப் பக்கத்துக்கு ஊடுருவி வந்தவர்கள் என்றும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து மூலம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஐந்து, பிஸ்டல்கள் எட்டு, கையெறி குண்டுகள் எழுபது ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்ததாக கூறியுள்ளது ஏ.என்.ஐ.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்தியதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர் தாமும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன?

கரீபிய நாடான ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைத்திக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டனர்.
போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் என்ற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.
டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் தொடங்கியது.
அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க - மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர்.
கொலம்பியா - பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Reuters
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க, ஒரு தனி தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என் வி ரமணா கூறியுள்ளதாக என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த குழுவில் இணைய சில நிபுணர்கள் சொந்த காரணங்களை முன்னிட்டு மறுத்ததாகவும், எனவே தான் நிபுணர் குழு அமைப்பது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்க தாமதமானதாக கூறியுள்ளதாக பார் அண்ட் பெஞ்ச் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு காரணங்களால் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது இந்திய அரசு.

பட மூலாதாரம், Getty Images
பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் மார்செலோ க்வெரோகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
அவர் செவ்வாய்கிழமை, பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரோவை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் ஐநா பொது சபைக்கு அழைத்து வந்த சில மணி நேரங்களுக்குப் பின் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், அவர் நியூ யார்க்கிலேயே தனிமைபடுத்தலில் இருப்பார் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற அரசு தரப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது வேறு யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES
அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
பூஸ்டர் டோஸ் பெறுபவர்கள் இரண்டாம் தவணை தடுப்பு மருந்து பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் ஊக்குவிக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து பூஸ்டர் டோஸ் எனப்படும்.

பட மூலாதாரம், AFP / GETTY
பிரிட்டனில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு ஏற்பட்டிருப்பதாக பிபிசியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டஜன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அப்படிப்பட்ட இரண்டாவது தரவு கசிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட தரவுக் கசிவு தொடர்பான விவகாரத்தில், பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சலில், சில மின்னஞ்சல்கள் மற்றும் 55 நபர்களின் பெயர்களை எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருந்தது.முதல் மின்னஞ்சல் தரவுக் கசிவில், பிரிட்டனில் குடியேற விரும்பும் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு (அவர்களில் பலர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது) தவறுதலாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஒரு முழு விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறினார். முதல் தரவுக் கசிவுக்கு ஒரு தீர்வு காணப்படுவதற்குள் தற்போது இரண்டாவது மின்னஞ்சல் தரவுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் செய்தியாளர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.
நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே கிளிக் செய்யவும்