வளரும் நாடுகளுக்கு கூடுதலாக 500 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசி மருந்து: ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images
வளரும் நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஃபைசரின் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட 11 பில்லியன் டோஸ்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இந்த எண்ணிக்கையில் 40 சதவீத அளவை எட்டுவதை குறைந்தபட்ச இலக்காக உலக சுகாதார அமைப்பு கொண்டுள்ளது.
ஆனால், அப்போதும் இந்த இலக்கு நிறைவேறுமா என்பது சாத்தியமற்று உள்ளது. உலகின் செல்வந்த நாடுகள் பலவும் அவற்றின் மக்கள்தொகையில் பாதி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளன. குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் வெறும் இரண்டு சதவீத அளவில்தான் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தரவு கூறுகிறது.
வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதில் 140 மில்லியன் டோஸ்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன என்கிறார் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் பிபிசி செய்தியாளர்











