ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமராக மெளலவி ஹெபடுலா அகுந்த்ஸாதா என்பவரை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர் அகுந்த்ஸாதா.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தைச் சேர்ந்த இவர், தற்போது தாலிபன் அமைப்பின் சக்திவாய்ந்த ரெஹ்பாரி ஷூரா குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த குழுதான் மிக முக்கியமான விவகாரங்களில் முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டது.
தாலிபனை நிறுவியர்களில் ஒருவர் இந்த அகுந்த். போராளிகள் குழு தலைவர் என்பதை விட இவர் மத தலைவராகவே தாலிபன்களால் போற்றப்படுகிறார்.
தலைநகர் காபூலில் புதிய தற்காலிக அரசில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற தகவலை தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹித் இன்று இரவு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அப்போது அவர், முறைப்படி புதிய அரசு அமையும்வரை இடைக்கால அரசில் இடம்பெறுவோரை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது என்று கூறினார். அதன் விவரம்:
பிரதமர் - முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தாலிபன் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமருடன் கூட்டாளியாக இருந்தவர்)
துணை பிரதமர்கள் - முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி
உள்துறை - சிராஜுதீன் ஹக்கானி (இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது)
பாதுகாப்பு - முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் (இவர் தாலிபன் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்)
வெளியுறவு - மெளலவி ஆமிர் கான் முட்டாக்கி
நிதி- முல்லா ஹிதாயத் பத்ரி
நீதித்துறை - அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி
தகவல் துறை - கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா
இதில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானி, தாலிபன் போராளிகள் ஆயுதக்குழுவில் கடுமையான பயிற்சி பெற்ற ஹக்கானி குழுவை நிறுவியவரின் மகன் ஆவார். புதிய அமைச்சரவையில் உள்ளவர்களின் பின்னணியை அறிய இங்கே சொடுக்கவும்.