ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமர் ஹஸன் அகுந்த்: தாலிபன் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் உள்ளிட்ட எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபன் தெரிவித்துள்ளது. எங்களுடைய தேச வளர்ச்சிக்கு உதவும் எல்லா நாடுகளுடனும் நாங்கள் சமூகமாக உறவைப் பேணுவோம் என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் இன்று இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
எங்களுடன் இன்றைய நேரலை பக்கத்தில் இணைந்திருந்ததற்கு நன்றி நேயர்களே. இத்துடன் இந்த பக்கத்தில் நேரலை தகவல்களை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
ஆப்கன் அரசில் பெண்களுக்கு இடமில்லையா? தாலிபன் விளக்கம்
ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லையா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இது இடைக்கால அமைச்சரவைதான். அமைச்சரவை நியமனங்கள் முழுமை பெறவில்லை," என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹித் பதிலளித்தார்.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களையும் விரைவில் தேர்வு செய்வோம் என்று அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆப்கானிஸ்தானில் இடைக்கால பிரதமராக ஹஸன் அகுந்த் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமராக மெளலவி ஹெபடுலா அகுந்த்ஸாதா என்பவரை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர் அகுந்த்ஸாதா.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தைச் சேர்ந்த இவர், தற்போது தாலிபன் அமைப்பின் சக்திவாய்ந்த ரெஹ்பாரி ஷூரா குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த குழுதான் மிக முக்கியமான விவகாரங்களில் முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டது.
தாலிபனை நிறுவியர்களில் ஒருவர் இந்த அகுந்த். போராளிகள் குழு தலைவர் என்பதை விட இவர் மத தலைவராகவே தாலிபன்களால் போற்றப்படுகிறார்.
தலைநகர் காபூலில் புதிய தற்காலிக அரசில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற தகவலை தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹித் இன்று இரவு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
அப்போது அவர், முறைப்படி புதிய அரசு அமையும்வரை இடைக்கால அரசில் இடம்பெறுவோரை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது என்று கூறினார். அதன் விவரம்:
பிரதமர் - முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தாலிபன் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமருடன் கூட்டாளியாக இருந்தவர்)
துணை பிரதமர்கள் - முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி
உள்துறை - சிராஜுதீன் ஹக்கானி (இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது)
இதில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானி, தாலிபன் போராளிகள் ஆயுதக்குழுவில் கடுமையான பயிற்சி பெற்ற ஹக்கானி குழுவை நிறுவியவரின் மகன் ஆவார். புதிய அமைச்சரவையில் உள்ளவர்களின் பின்னணியை அறிய இங்கே சொடுக்கவும்.
பட மூலாதாரம், UNKNOWN
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமராக தேர்வான முல்லா மொஹம்மத் ஹஸ்ஸன் அகூந்த் (முதல் வரிசையில் இடமிருந்து 3ஆவது)
இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்களுக்கு உதவிய துருப்பிடித்த ஸ்பூன்கள்
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, கில்போ சிறைச்சாலை
இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர்.
கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள் அதன் வழியாகத் தப்பியோடி உள்ளதாக கருதப்படுகிறது.
தங்கள் வயல்கள் வழியாக சிறைக் கைதிகள் தப்பி ஓடுவதைப் பார்த்த விவசாயிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இவர்களில் ஐந்து பேர் 'இஸ்லாமிக் ஜிகாத்' எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஹரியாணாவில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய நடவடிக்கையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.
ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
முன்னதாக விவசாயிகள் திட்டமிட்டிருந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தில் சுஷில் கஜ்லா என்ற விவசாயி காயம் அடைந்து உயிரி்ழந்ததாக விவசாயிகள் தரப்பு குற்றம்சாட்டினர்.
ஆனால், அந்த விவசாயி மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் 40 விவசாய சங்கங்கள் செயல்படுகின்றன.
அவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாகவே விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
அதைக் கண்டித்து ஹரியாமா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வழிகளில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: அனுபவ் ரவி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பட மூலாதாரம், KODANAD ESTATE
படக்குறிப்பு, கோடநாடு எஸ்டேட்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கோடநாடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது போல தோன்றுகிறது. அந்த வழக்கில் மேல் விசாரணை தேவை என புலனாய்வுத்துறை கோரும்பட்சத்தில் அதில் மனுதாரருக்கு என்ன பிரச்னை?" என்று கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அனுபவ் ரவியின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விவரம் மற்றும் வழக்கின் விரிவான பின்னணியை அறிய இங்கே சொடுக்கவும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புலமைப்பித்தனுடன் சசிகலா சந்திப்பு
சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புலவர் புலமைப்பித்தனை (86) சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி சென்னையில் காலமானபோதும் அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார் சசிகலா.
அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சசிகலாவின் கைக்கு அதிமுக சென்று விடாமல் இருக்க அவரை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்து வரும் வேளையில், அவர்களுடன் நெருங்கும் முயற்சியாக சசிகலாவின் சமீபத்திய அணுகுமுறை பார்க்கப்படுகிறது.
அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலம் முதல் அவருடன் கட்சிப் பணியாற்றியவர்களில் முக்கியமானவர் புலவர் புலமைப்பித்தன். சுமார் 49 ஆண்டுகளாக அதிமுகவில் உறுப்பினராக இருந்த அவர், ஜெயலலிதா காலமான பிறகு கட்சி நடவடிக்கையில் ஆர்வமின்றி ஒதுங்கி இருக்கிறார்.
காபூலில் துப்பாக்கி சூட்டுக்கு பிறகும் ஆயிரக்கணக்கில் திரளும் மக்கள்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆயிரக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் வசம் முழுமையாக வராத ஒரே பகுதியாக இருந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியை தாலிபன்கள் இன்று தங்கள் வசமாக்கிக் கொண்டதாக அறிவித்து அங்கு தங்களுடைய கொடியை ஏற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
ஆனால், தாலிபன்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக தேசிய எதிர்ப்பு முன்னணி எனப்படும் தாலிபன் எதிர்ப்பாளர்கள் குழுவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தாலிபன் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவதாகக் கூறி அந்த நாட்டுக்கு எதிராக ஆப்கானியர்கள் இன்று காபூல் நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு ஒரு இடத்தில் அதிபர் மாளிகையை நோக்கி மக்கள் பேரணியாக புறப்பட்டபோது அவர்களை கலைக்க தாலிபன் போராளிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இருந்தபோதும், துப்பாக்கி சூடு நடத்திய பிறகும் மக்கள் வீதிகளில் பெருமளவில் திறண்டு பேரணியாக செல்வதை பார்க்க முடிவதாகக் கூறுகிறார் அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.
வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூலில் தீவிரமான மக்கள் போராட்டம் - வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தாலிபன்கள்
பட மூலாதாரம், TOLO NEWS
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வீதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆப்கானியர்கள்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபன் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. அங்கு ஏராளமான பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் வீதிகளில் இறங்கி தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
"பாகிஸ்தானே... ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறு" என்றும் அவர்களில் பலர் கோஷமிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்றும் சிலர் முழக்கமிட்டனர்.
வேறு சிலர், "எங்களுக்கு சுதந்திரமான தேசம் வேண்டும், பாகிஸ்தானின் கைப்பாவை அரசு தேவையில்லை. பாகிஸ்தானே வெளியேறு," என்றும் கோஷமிட்டனர்.
அங்கு களத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் முடாஸ்ஸர் மாலிக், "ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால், அவர்களை கலைக்கும் விதமாக தாலிபன் போராளிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்," என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகள் பகிரப்பட்டன. அதில் பெருமாபாலானவை, காபூலில் ஏராளமான ஆப்கானியர்கள் திரண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடும் காணொளிகளாக இருந்தன. அந்த காணொளியில் இருந்தவர்கள், தாலிபன் எதிர்ப்பு கோஷத்தை முழங்கினர்.
தாலிபன் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹ்மத் மசூத் திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் காணொளியில் பெண்கள் பங்கெடுக்கும் போராட்டம், தங்களுடைய பலத்தின் அடையாளம் என்று கூறியிருந்தார்.
தாலிபன் எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் உள்ள பஞ்ஷீர் பகுதியை தாலிபன் தங்கள் வசமாக்கிக் கொண்டதாகக் கூறி அங்கு தங்களுடைய கொடியை பறக்க விட்ட நாளில் தாலிபன்களுக்கு எதிராக தலைநகர் காபூலில் மக்களின் போராட்டம் நடந்துள்ளதால் அது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பட மூலாதாரம், MK STALIN
படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளால் கேரளாவில் கொரோனா
அதிகரித்ததையடுத்தே எல்லா சமய விழாக்களுக்கும் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில்
விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டுமெனக்
கோரினார்.
இதற்குப்
பதிலளித்துப் பேசிய முதமலைச்சர் மு.க. ஸ்டாலின், கொரோனாவைக்
கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், "கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அதிக
அளவில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான கட்டுப்பாடுகளை செப்டம்பர் 30ஆம் தேதிவரை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில
அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அது குறித்துச்
சுட்டிக்காட்டியுள்ளது
கேரள மாநிலத்தில்
ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு அதிக அளவில் மக்கள்
கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தால்தான் அங்கே கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இன்றுவரை
கொரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாக தடுக்கப்படவில்லை.
இப்படி ஒரு
சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 15ஆம் தேதிவரை அனைத்து சமய விழாக்களையும் கொண்டாட கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்திக்கும் பொருந்தும்.
பொது இடங்களில்
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் இருக்கிறதே தவிர, தனி நபர்களைப் பொருத்தவரை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி தங்கள்
இல்லங்களிலே கொண்டாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் தவறாகப்
புரிந்துகொள்ள வேண்டாம்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்
காலங்களில் நிவாரணத் தொகையாக 5,000
ரூபாய்
வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 ஆயிரம் பேர் சிலை
செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளதால், இந்த மூன்றாயிரம் பேருக்கும் நிவாரணத்
தொகையானது, ஐந்தாயிரம் என்பதற்குப் பதிலாக பத்தாயிரம்
ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, "நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்" - மெஹ்பூபா முஃப்தி
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முஃப்தி தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தற்போது இயல்புநிலையில் இல்லை என்று தன்னிடம் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் ஆளும் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், அதே அக்கறையை அது காஷ்மீரிகள் மீது வேண்டுமென்றே காட்ட மறுக்கிறது. காஷ்மீரில் இயல்புநிலை இல்லை என்று உள்ளூர் நிர்வாகத்தினர் என்னிடம் கூறுகின்றனர். அப்படியென்றால், மத்திய அரசு இயல்புநிலை இருப்பதாக போலியாக கூறி வருவது வெளிப்பட்டு விட்டது," என்று மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
செப்டம்பர் 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் கடத்தப்பட்டது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யும் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். 15 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.
தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய பல நாடுகளுக்குள் புகுந்து அமெரிக்கா நீண்ட போர்களை நடத்தியிருக்கிறது. வலுவான உளவாளிகள் உலகின் பல பகுதிகளிலும் பதுங்கியிருக்கிறார்கள். படை விமானங்கள், நவீன போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிகள் என சிறந்த ஆயுதங்கள் இருக்கின்றன.
இவ்வளவு வலிமை வாய்ந்த நாட்டை அதிரச் செய்த நாள் செப்டம்பர் 11. நூறு ஆண்டுகள் ஆனாலும் மறைந்தபோகாத வடுக்களை தந்துவிட்டுச் சென்ற நாள். விமானத்தை ஆயுதமாகவும் அதில் நிரப்பப்பட்ட எரிபொருளை வெடிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை உலகம் புரிந்து கொண்ட நாள்.அந்த காக்குதல் சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் வழங்கும் தொடரின் இரண்டாம் கட்டுரையை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
பெகாசஸ் வழக்கு விசாரணை
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு சொந்தமான பெகாசஸ் எனும் உளவு மென்பொருளைக் கொண்டு இந்தியாவில் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 13ஆம் தேதிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பெகாசஸ் வேவு பார்ப்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பெகாசஸ் பட்டியலில் இருந்தவர்கள் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.
ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.
நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பட மூலாதாரம், bbc
சடங்குகளில் பங்கேற்ற சிறுமிகள் - குழந்தைகள் ஆணையம் தலையீடு
மழை வர வைப்பதற்காக ஆறு சிறுமிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் நடந்த இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
தவளை ஒன்று கட்டப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றை அந்த ஆறு சிறுமிகளும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு செல்வதை அந்த காணொளிகள் காட்டுகின்றன.
சிறுமிகளை நிர்வாணமாக்கி இவ்வாறு செய்யப்படும் சடங்குகள் கடவுளின் மனதை குளிர்வித்து அந்த பகுதிக்கு மழையை உண்டாக்கும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
இந்த சம்பவம் நிகழ்ந்த கிராமம் அமைந்துள்ள தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இது குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு குழந்தைகள் பாதுகாப்புக்கான இந்தியாவின் தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தாலிபன் ஆட்சியில் ஆப்கன் மக்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?
வெளிநாட்டுப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாகாணங்களைச் சேர்ந்த நான்கு பேர் பிபிசியிடம் பேசினார்கள்.
அடிப்படைச் சுதந்திரத்தை இழந்து உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடகிழக்கே அமைந்துள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் திங்களன்று தாலிபன்கள் தங்களது கொடியை ஏற்றியுள்ளனர்.
கொடியேற்றுவதைக் காட்டும் காணொளி என்று கூறி ஒரு காணொளியும் தாலிபன் தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி எனும் கிளர்ச்சிக் குழு, தாலிபன் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மட்டும் தாலிபன்களின் வசம் வராமல் இருந்தது.
தற்போது அந்த இடத்தையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
எனினும் தாங்கள் முக்கியமான நிலைகள் அனைத்திலும் இன்னும் இருப்பதாகவும் தொடர்ந்து சண்டையிடுவோம் என்றும் ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் அகமது மசூத் வலியுறுத்தியுள்ளார்.
மலைப் பாங்கான பிரதேசமான பஞ்ஷீர் பள்ளத்தாக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மிகச்சிறிய மாகாணங்களில் ஒன்றாகும்.
காணொளிக் குறிப்பு, தாலிபன்கள் வெளியிட்ட காணொளி
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் சிறப்பு நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குவது விக்னேஷ். அ