பிகாரில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்புநிலை போல செயல்பட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்த பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், கடைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், தோட்டங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை போலவே திறக்கலாம் என்று நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், திரையரங்குகள், கிளப்புகள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள், உணவு விடுதிகள் போன்றவை ஐம்பது சதவீத இருக்கைகளுடன் இயக்கலாம் என்றும் பிகார் அரசு கூறியுள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட முழுமையாக தளர்வு நிலைக்கு வந்தாலும், மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.