ஆப்கானிஸ்தான் குறித்து உரையாடிய சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின்

சீனா, ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை செய்திகள் இத்துடன் நிறைவு பெறுகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் மீதான 3 சதவீத வாட் வரி குறைப்பிற்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

    புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விற்கப்படும் பெட்ரோல் மீதான 3% வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவை முடிவுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.43 குறையும். அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை புதுச்சேரியில் ரூபாய் 99.52 ஆகவும், காரைக்காலில் ரூபாய் 99.30 ஆகவும் குறையும்.

    இதனால் விலை நூறு ரூபாயை விட குறைந்துள்ளது.

  3. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட்

    சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையிலானோர் முற்றுகையிட்டபோது, அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.

    இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வேல்முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு, உளுந்தூர்பேட்டை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் 5 பேர் மட்டுமே ஆஜராகினர். சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்பட 9 பேர் ஆஜராகவில்லை.

    வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்பட 9 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சண்முகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  4. ஆப்கன் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு - முதல் இடம் பிடித்த மாணவி

    ஆப்கானிஸ்தானின் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காபூலை சேர்ந்த சுல்காய் என்ற இளம் பெண் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தங்களின் பிடியை இறுக்கியுள்ள நிலையில் வெளியாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பின் பெண்கள் மற்றும் சிறுமிகள் பள்ளி செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அச்சம் எழுந்துள்ளது.

    நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்து பேசியதற்காக 15 வயதில் தாலிபன்களால் சுடப்பட்டார். “பல பெண்கள் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பி அனுப்பப்படும் செய்திகள் வர தொடங்கின. பலர் 12,15 வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர்” என்று மலாலா தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. சீன அதிபர் ஷி ஜின்பிங் - ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைப்பேசியில் உரையாடல், கெர்ரி அலேன், பிபிசி மானிடரிங், சீன ஊடக ஆய்வாளர்

    சீனா மற்றும் ரஷ்யாவின் அதிபர்கள்

    பட மூலாதாரம், Mikhail Svetlov/ Getty Images

    சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளார்.

    இருநாட்டு தலைவர்களும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் சூழல் குறித்து ஆழமான உரையாடலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    சீனா, ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடா கொள்கையை சீனா பேணி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக அரசால் இயக்கப்படும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில், ஆப்கானிஸ்தானின் நிகழ்வுகள் ஷின் ஜியாங்கில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால், சீனாவின் தாலிபனை நோக்கிய பார்வை மாறும் என தெரிவித்திருந்தது

    ஆப்கானிஸ்தானில் உள்ள சீன தூதரகம் திறந்துதான் உள்ளது. ஆனால் நிலைமை மாறினால் தங்களின் நிலை குறித்து உடனடியாக தெரியப்படுத்தும்படி சீன தூதரகம் தனது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது.

    மேலும் தாலிபனுடன் “சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக” சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் மேற்கத்திய நாடுகளின் பங்கு குறித்து புதின் மற்றும் ஷி ஜின்பிங் இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்து ஊடகங்களில் தெரிவிக்கப்படவில்லை.

    சமீப நாட்களில் சீன ஊடகங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவ்வளவு எளிதாக வெளியே சென்றுவிட முடியாது என தெரிவித்திருந்தது.

    மேலும் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா பதற்றநிலையை உருவாக்கி வெளியேறுவதாக விமர்சித்தன.

  6. கேரளாவில் ஒரே நாளில் 31 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பு

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஓணம் பண்டிகையையொட்டி தளர்த்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிப்பு அளவு அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தணிந்து வரும் வேளையில், கேரளாவில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 215 கொரோனா உயிரிழப்புகளும் அந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளன. ஓணம் பண்டிகை நடைபெற்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி கேரளாவில் 17 ஆயிரத்து 106 பாதிப்புகளும் 83 உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

    மாநிலத்தின் மிக முக்கிய திருவிழாவான ஓணத்தையொட்டி பல மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு அம்மாநிலத்தவர்கள் வந்ததும், அங்கு அந்த நாளில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு காட்டப்பட்டதுமே இந்த மோசமான நிலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலமாக கேரளா விளங்கியது. அந்த அளவுக்கு அங்கு கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்பட்டன.

    இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை இந்த ஆண்டின் முதல் கால் பகுதிக்குப் பிறகு தீவிரமானபோது கேரளாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.

    கேரளா

    பட மூலாதாரம், KERALA HEALTH DEPARTMENT

    படக்குறிப்பு, கேரளாவின் இன்றைய காெரோனா வைரஸ் பாதிப்பு நிலையை விளக்கும் படம்
  7. அக்டோபரில் 12-17 வயதினருக்கு சைகோவ் டி

    அக்டோபர் மாதம் சைகோவ்-டி தடுப்பு மருந்து 12-17 வயதினருக்கும் வழங்கப்படும் என தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் , கோவிட் செயற்குழு தலைவர் என்.கே.அரோரோ ஏன்எனஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    அதற்கு முன்பு உடல் நல பாதிப்புகள் கொண்ட குழந்தைகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்ட பின்னர் தடுப்பு மருந்து வழங்கப்ப்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,

    அதேபோன்று பள்ளிகள் கட்டம் கட்டமாக திறக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    பள்ளிகளிலும் ஆசிரியர், ஓட்டுநர் உட்பட அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இந்தியா கொரோனா தடுப்பு மருந்து இயக்கம்: 60 கோடி டோஸ்களை கடந்தது

    இந்தியாவில் 60கோடி டோஸ்களுக்கு மேல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. சீன பள்ளிகளில் ’ஷி ஜின்பிங் கொள்கைகள்’ அறிமுகம்

    china

    பட மூலாதாரம், Getty Images

    சீனாவில் ஷி ஜின்பிங்கின் அரசியல் கொள்கைகள் அந்நாட்டின் தேசிய பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    'ஷி ஜின்பிங்கின் கொள்கைகள்' பதின்ம வயதினர் மார்க்சிய கொள்கைகள் குறித்து அறிந்து கொள்ள உதவும் என நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த கொள்கைகள் ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் முதல் கற்பிக்கப்படும்.

    2018ஆம் ஆண்டு சீனாவின் அரசியலமைப்பில் 'ஷி ஜின்பிங்கின் கொள்கைகள்' சேர்க்கப்பட்டன. அப்போதிலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள இளைஞர் அமைப்புகளிடம் இந்த கொள்கைகள் குறித்து அறிமுகம் செய்யப்படுகின்றன.

    இந்த ஷி ஜின்பிங் கொள்கை என்பது கம்பூனிஸ கொள்கையை பறைச்சாற்றும் 14 கொள்கைகளை கொண்டது.

    “ஆரம்பக் கல்வியில் நாட்டிற்கான அன்பு குறித்து போதிக்கப்படும். மேலும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோஷியலிசம் ஆகியவற்றின் மேல் அன்பு உருவாவது போல ஆரம்பக் கல்வி அமையும். நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்கென அடிப்படை அரசியல் புரிதல்களை வளர்த்துக்கொள்ளும் விதத்தில் கருத்தியல் அனுபவம் மற்றும் ஆய்ந்து அறிதல் ஆகியவை போதிக்கப்படும்” என்று குளோபல் டைமஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  10. ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

    afghanistan

    பட மூலாதாரம், Reuters

    ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டிற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தியுள்ளது உலக வங்கி.

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது அந்நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை பாதிக்கும் எனவும் குறிப்பாக பெண்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் எனவும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியை சர்வதேச நாணய நிதியம் தற்காலிகமாக நிறுத்திய பிறகு உலக வங்கியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில் அமெரிக்காவில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கியின் சொத்துக்களை அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

    “ஆப்கானிஸ்தானில் உள்ள எங்களின் திட்டத்துக்கான நிதியுதவியை நாங்கள் நிறுத்தியுள்ளோம். எங்களின் சர்வதேச கொள்கைக்கு ஏற்ப ஆப்கானிஸ்தானின் சூழலை கண்காணித்தும் மதிப்பீடு செய்தும் வருகிறோம்.” என உலக வங்கியின் செய்திதொடர்பாளர் பிபிசியிடம் பேசினார்.

    வெள்ளிக்கிழமையன்று, உலக வங்கியின் ஊழியர் ஒருவர், காபூலில் உள்ள தங்களின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டு பாகிஸ்தானில் தங்க வைத்துள்ளதாக தெரிவித்தார்.

  11. கொரோனா: பிகாரில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் திறப்பு

    நிதிஷ் குமார்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நிதிஷ் குமார், பிகார் மாநில முதல்வர்

    பிகாரில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்புநிலை போல செயல்பட அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்த பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளார்.

    மேலும், கடைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், தோட்டங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை போலவே திறக்கலாம் என்று நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். எனினும், திரையரங்குகள், கிளப்புகள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள், உணவு விடுதிகள் போன்றவை ஐம்பது சதவீத இருக்கைகளுடன் இயக்கலாம் என்றும் பிகார் அரசு கூறியுள்ளது.

    பொதுமுடக்க கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட முழுமையாக தளர்வு நிலைக்கு வந்தாலும், மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பிகார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. மதன் ரவிச்சந்திரன், வெண்பா பாஜகவில் இருந்து நீக்கம்: கட்சி மேலிடம் நடவடிக்கை

    பாரதிய ஜனதா கட்சியில் இருந்து யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலையை சந்தித்து கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்," என்று கூறப்பட்டுள்ளது.

    "இதேவேளை,பாஜகவின் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகளை தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. பஞ்சாப் மாநில தேர்தல்: முதல்வர் அமரிந்தர் சிங் தலைமைக்கு காங்கிரஸ் மேலிடம் ஆதரவு

    பஞ்சாப் மாநில தேர்தல்

    பட மூலாதாரம், Amarinder Singh

    படக்குறிப்பு, கேப்டன் அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர்

    பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையில் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்று அதன் மேலிட தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

    அந்த மாநிலத்தில் அமரிந்தர் சிங்கின் தலைமைக்கு எதிராக ஒரு பிரிவு கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். இதனால், அங்கு உள்கட்சி நெருக்கடி தீவிரமானது.

    இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அமரிந்தர் சிங்கை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நி்லையில், பஞ்சாப் மாநில காங்கிரஸில் உள்ள நிலைமையை அறிவதற்காக அம்மாநில காங்கிரஸின் அதிருப்தி தலைவர்களுடன் பேச கட்சியின் மேலிட பார்வையாளர் ஹரிஷ் ராவத் அனுப்பி வைக்கப்பட்டார்.

    அவர் பல தரப்பட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மாநில தேர்தலை அமரிந்தர் சிங் தலைமையிலேயே எதிர்கொள்ள கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

  14. ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த 78 பேரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு

    ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பியுள்ள 78 பேரில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் விதிகளின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை வந்திறங்கியவர்களில் வைரஸ் கண்டறியப்பட்ட 16 பேரும் அதற்கான அறிகுறியற்றவர்களாக இருந்தனர். எனினும் பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் மூன்று சீக்கிய மத குருக்களும் அடங்குவர். சீக்கியர்கள் புனிதமாக கருதப்படும் மத நூல்கள் அடங்கிய கட்டுகளை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க வந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அந்த நூல்கள் கட்டில் ஒன்றை தமது தலையில் சுமந்தபடி விமான நிலைய வளாகத்தில் கொண்டு வந்தார்.

    அதை சுமந்து வரும் காணொளியை ஹர்தீப் சிங் பூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    இந்த நிலையில், அவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் இதுநாள்வரை 228 இந்திய குடிமக்கள் உள்பட 626 பேர் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    அதில் 77 ஆப்கன் சீக்கியர்களும் அடங்குவர். மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அந்த நாட்டில் பணியாற்றி வந்த இந்திய தூதரக ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. அவர்களின் மீட்பு பணிகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேரடியாக மேற்கொண்டு வருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. கோலாகலமான விழாவுடன் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கின

    பாராலிம்பிக்

    பட மூலாதாரம், Getty Images

    கோலாகலமான விழாவுடன் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இந்திய வீரர்கள் பங்குபெறும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன

    தொடக்கவிழா நிகழ்வுகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

    விழாவின்போது கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய பணியாளர்கள் ஜப்பானிய தேசியக் கொடியை ஏந்தி வந்தனர்.

    ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியைக் கொடியை தன்னார்வலர் ஒருவர் ஏந்தி வந்தார்.

    தொடக்க விழாவில் 714 பேர் பங்கேற்றனர். இவர்களில் 166 பேர் கேட்கும் திறன் குறைபாட்டை கொண்டவர்கள்.

    டோக்யோ பாராலிம்பிக்கில் 162 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 4400 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    22 விளையாட்டுகளில் மொத்தம் 539 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

  16. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பகுதியில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.