தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆனந்தக் கண்ணன் மரணம்
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்தக்கண்ணன் புற்றுநோயால் இறந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 48.
சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் சன் மியூசிக், SS மியூசிக் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பார்வையாளர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்.
தொலைக்காட்சி மட்டுமல்லாமல், 'சிந்துபாத்' சீரியல், 'சரோஜா', 'அதிசய உலகம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
Bile Duct Cancer என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (ஆகஸ்ட் 16) இரவு காலமாகியிருக்கிறார்.
இந்த செய்தியை இயக்குநரும், அவரது நண்பருமான வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.