காபூல் விமான நிலைய பாதுகாப்பை மீட்ட அமெரிக்க படையினர் - விமானங்கள் பறக்கத் தடை

காபூல் விமான நிலையத்துக்கு வந்த ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் விமானங்களில் ஏற முண்டியடித்ததால் காலை முதலே நிலைமை பதற்றமாக இருந்தது. இதனால் அமெரிக்க கூட்டுப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, மலேசியா: பிரதமர் மொஹிதின் யாசின் அமைச்சரவை முழுமையாக விலகியது, சதீஷ் பார்த்திபன்ஸ, மலேசியா

    மலேசியாவில் பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அமைச்சரவை முழுமையாகப் பதவி விலகியுள்ளது.

    இத்தகவலை புத்தாக்க துறையின் அமைச்சர் கைரி ஜமாலுதின் சற்று முன்னர் அறிவித்தார்.

    இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் மொஹிதின் யாசின் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  2. காபூல் விமான நிலையத்தில் தொடரும் குழப்பம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக விமானத்தை பிடிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் அங்கு குழப்பமான சூழல் நீடித்திருக்கிறது.

    இதனால் அமெரிக்க ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

    "எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. அவர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள்" என்று நேரில் பார்த்த ஒருவர் AFP யிடம் தெரிவித்தார்.

    விமான நிலையங்களில் மக்கள் ஓடும் ஏராளமான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கின்றன.

  3. ஆப்கானிஸ்தானில் இருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு புகைப்படம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    காபூல் நகரம் தாலிபன்களின் வசமாகியிருக்கும் நிலையில், இன்று காலையில் மாணவிகள் சிலர் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

    அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சுதந்திரத்தை அளிப்போம் என்றும், பெண் கல்விக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்றும் தாலிபன்கள் உறுதியளித்துள்ளனர்.

    ஆனால் இத்தகைய உறுதி மொழிகள் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. தாலிபன்களின் உறுதிமொழிகளை இப்போதை நம்பிவிட முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    இந்தக் குரல்களுக்கு மத்தியில் நம்பிக்கையளிக்கும் வகையிலான புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

  4. தூதரக அதிகாரிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்: அமெரிக்கா

    ஆப்கன்

    பட மூலாதாரம், Getty Images

    காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ஒவ்வொரு கட்டமாக அவர்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    விமான நிலையத்தை தங்களது பாதுகாப்பில் அமெரிக்க வீரர்கள் வைத்திருப்பதாகவும், வெளியேற விரும்புவோருக்கு வழி ஏற்படுத்தித் தருவதாகவும் கூறப்படுகிறது.

  5. காபூலில் "ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மக்கள்"

    தாலிபன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பணம் எடுப்பதற்காக வங்கியில் நீண்ட வரிசையில் நிற்கும் காபூல் மக்கள்

    தாலிபான்கள் காபூல் நகரை முற்றுகையிடத் தொடங்கியதுமே அங்குள்ள மக்களுக்கு அச்சம் ஏற்படத் தொடங்கிவிட்டது. சூறையாடல் மற்றும் கொள்ளையைத் தடுப்பதற்காக நகருக்குள் நுழைவதாக தாலிபன்கள் அறிவித்தனர்.

    அதற்குள்ளாகவே பல முக்கியப் பகுதிகளை விட்டு அரசுப் படைகள் வெளியேறத் தொடங்கிவிட்டன.

    அதன் பிறகு அல் ஜசீரா தொலைக்காட்சியில் அதிபர் மாளிகை தாலிபன்களால் முற்றுகையிடப்படும் காட்சிகள் வெளியாகின.

    காபூலுக்குள் தாலிபன்கள் புகுந்தது முதலே அதிபர் கானி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கானி வெளியேறிய பிறகுதான் தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

    அவர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருக்கலாம் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியது.

    நாட்டில் ரத்தம் சிந்தப் படுவதைத் தவிர்ப்பவதற்காகவே இந்தக் கடினமான முடிவை எடுத்ததாக தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.

    "வாள் மற்றும் துப்பாக்கியைக் கொண்டே தாலிபன்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் மரியாதையைக் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.

    ஆனால் நாட்டைக் கைவிட்டு அவர் வெளியேறிவிட்டதாக பிற அரசியல்வாதிகள் அஷ்ரப் கானியை விமர்சித்து வருகின்றனர்.

    காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்து கொண்டதுமே மக்கள் மனதில் பீதி குடியேறியது. தங்களது வாகனங்களையும் உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தனர்.

    ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக 22 வயதான மாணவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

    "என் கால்கள் வலிக்கின்றன, அவற்றில் கொப்புளங்கள் உள்ளன, நான் நிற்பதற்குக்கூட முடியாமல் இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.

    "நான் கிளம்பும்போது, ​என் குடும்பத்தைப் பற்றிய நினைவு என்னை வாட்டுகிறது. அவர்களுக்கு தப்பிக்க வழியே இல்லை. எனக்கு எந்த எதிர்காலமும் புலப்படவில்லை" என்றார் அவர்.

    அச்சத்தில் மக்கள் பணத்தை எடுக்க முற்பட்டதால் நாள் முழுவதும் வங்கிகளில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. ஏடிஎம் மையங்கள் நிரம்பியிருக்கின்றன.

    "மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சிலர் தப்பி ஓடுகிறார்கள் அல்லது வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்" என்று உள்ளூர் எம்பியான ஃபர்சானா கோச்சா பிபிசியிடம் தெரிவித்தார்.

    காபூல் நகரத்துக்குள் பெரிதாக சண்டை ஏதும் நடக்கவில்லை. பெரும்பாலும் ரத்தக் களரி ஏற்படாமலேயே தாலிபன்கள் நகரத்தின் பெரும்பகுதியைக் கைபற்றிவிட்டனர்.

    ஆயினும் கராபாக் மாவட்டத்தில் சண்டை நடந்ததாகவும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    யாரையும் கொல்ல மாட்டோம், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று பிபிசியிடம் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஷாஹீன் தெரிவித்தார். மக்கள் தங்களது உடைமைகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

  6. ஆப்கானிஸ்தானில் அச்சம், குழப்பத்துடன் புதிய விடியல்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பல்வேறு அதிரடியான திருப்பங்கள் நடந்து, தாலிபன்களின் கட்டுப்பாட்டில் நாடு சென்றுவிட்டதால் அங்கிருப்பவர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் புதிய நாளை எதிர்கொண்டிருக்கிறார்கள்

    எப்போது என்ன நடக்குமோ என்ற எண்ணத்திலேயே மக்கள் தங்களது இரவு நேரத்தைத் தூங்காமல் கழித்தனர்.

    தங்கள் சுதந்திரம் பறிபோவதாகவும், ஜனநாயக உரிமைகள் முடக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

    தங்களது குடும்பத்தினர் காபூலில் சிக்கியிருப்பதாக பலர் கூறுகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய உள்ளிட்ட சுமார் 60 நாடுகள் தங்களது குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அறிவுரை வழங்கியிருக்கின்றன.

    டாங்குகள், துப்பாக்கிகளுடன் தாலிபன்கள் காபூல் நகரின் முக்கியச் சாலைகளில் வலம்வந்து கொண்டிருக்கின்றனர்.

  7. மக்கள் கூட்டத்தால் காபூல் விமான நிலையத்தில் குழப்பம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றிவிட்டதால், அங்கிருக்கும் வெளிநாட்டினர் வெளியேற முயற்சித்துவருகின்றனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் கூடியதால் அங்கு குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

    அங்கு எந்தவிதமான பாதுகாப்பு சோதனைகளும் இல்லாத நிலையில், நேட்டோ படைகளில் எஞ்சியிருக்கும் வீரர்களைக் கொண்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தங்களது குடிமக்களையும் தூதரக அதிகாரிகளையும் முன்னுரிமை அடிப்படையில் வெளியேற்ற பல்வேறு வெளிநாடுகள் முயன்று வருகின்றன.

    செக்-இன் கவுன்டர்களில் போதுமான ஊழியர்கள் இல்லை. விமானங்களில் ஏறுவதற்கு மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம்.மணிகண்டன்.