ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ராவுக்கு முதலிடம்
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே தகுதித் தொலைவையும் தாண்டி பல மீட்டருக்கு அப்பால் ஈட்டியை எறிந்து வியக்கவைத்தார்.
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற 83.05 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீச வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிந்தது. நீரஜ் சோப்ரா வீசிய தொலைவு 86.65 மீட்டர்.
இந்த அபாரமான எறிதல் மூலம் ஏ பிரிவில் அவருக்கு முதலிடம் கிடைத்தது. ஜெர்மனி மற்ரும் ஃபின்லாந்து வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூடப் பெற்றதில்லை. பிடி உஷா, மில்கா சிங் போன்ற வலிமையானவர்களால்கூட பதக்கம் வெல்ல முடியவில்லை.