தமிழகத்தில் தொற்று குறைந்த
காரணத்தினாலேயே மதுபான கடைகளை திறக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி அளித்ததாக அமைச்சர் செந்தில்
பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை
சந்தித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்
பாலாஜி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்தது
குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில்
வரும் 14ஆம் தேதியில் இருந்து தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தொற்று
அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி இல்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
“கொரோனா பாதிப்பு
உச்சத்தில் இருந்த போதிலும் கர்நாடகாவில்
மதுபானகடைகள், தடையின்றி செயல்பட்டது. ஆனால் தமிழகத்தில்ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு தான் இருந்தது .தொற்று
குறைந்த காரணத்தினாலேயே மதுபான கடைகளை திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின்
நலனில் முதல்வர் அக்கரை செலுத்தி வருகிறார்” என்று அவர் தெரிவித்தார். .
தமிழகத்தில்
27 மாவட்டங்களிலும் உள்ள மதுபான கடைகளில் கிருமிநாசினி
கொடுக்கப்பட்டுகாவல்துறை உதவியுடன் பாதுகாப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுபானம்
வாங்க வருவோர், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளி விட்டு தான் வாங்கிச் செல்ல வேண்டும்
என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இருந்து, தொற்று குறையாமல் உள்ள 11 மாவட்டங்களில் மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழகத்தில்
மதுபான கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது
ஏன்? என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தான்
இந்த போராட்டங்களை நடத்துகிறது என்று
அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.