அமெரிக்க தேர்தல் முடிவுகள் தொடர்பான தகவல்களை அறிய இப்போதுதான் நீங்கள் இந்த பக்கத்தில் இணைந்தீர்கள் என்றால், இதுதான் இதுவரை நடந்த சமீபத்திய முன்னேற்றங்கள்.
அதிபராக தகுதி பெற தேவைப்படும் தேர்தல் சபை (எலக்டோரல் காலேஜ்) வாக்குகள் 270 என்ற எண்ணை எட்டும் போட்டியில், டொனால்ட் டிரம்பை விட 17 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார் ஜோ பைடன்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தனக்கு முன்னிலை நிலவரம் தொடரும் வேளையிலும், தான்தான் வெற்றியாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ஜோ பைடன் தவிர்த்து வருகிறார். அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்வரை அமைதி காக்குமாறு அவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறார். ஆனாலும், முடிவில் தனக்கே வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெள்ளிக்கிழமை இரவு கட்சித் தொண்டர்களிடையே பேசியபோது பைடன் வெளியிட்டார்.
கோபத்தையும் ஆர்ப்பாட்ட உணர்வையும் பின்னுக்குத் தள்ளுமாறு கூறிய பைடன், நாம் எதிரெதிர் அணிகளில் இருக்கலாம் ஆனால், எதிரிகள் அல்ல என்றும் தெரிவித்தார்.
போர்க்கள மாகாணங்களில் டிரம்பை விட பைடனே தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கிறார்.
பென்சில்வேனியா: சமீபத்திய நிலவரப்படி பைடன் தற்போது 28,883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இந்த மாகாணத்தில்தான் அதிகபட்சமாக தேர்தல் சபை வாக்குகள் உள்ளன.
அரிசோனா: இந்த மாகாணத்திலும் டிரம்பை விட பைடன் 29,861 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
நெவாடா: ஜனநாயக கட்சி வேட்பார் 22,657 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
ஜோர்ஜா: இங்கு இரு வேட்பாளர்கள் இடையே 7,248 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர். அங்கு மெல்லிய இடைவெளி மட்டுமே நிலவுவதால், மறுவாக்குப்பதிவு நடக்கும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.