அமெரிக்க தேர்தல்: பென்சில்வேனியாவில் பைடன் முன்னிலை, ஜோர்ஜாவில் மறு எண்ணிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்றான ஜோர்ஜாவில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அதிபர் டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும்', ஜூபைர் அகமது, பிபிசி செய்தியாளர்

    டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு திரும்பினாலும் சரி அல்லது ஜோ பைடன் புதிய அதிபராக நுழைந்தாலும் சரி - இந்தியாவுடனான அந்நாட்டு உறவுகளில் அதிக மாற்றம் இருக்காது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான இணக்கமான உறவைப் பார்க்கும்போது, பைடன் அமெரிக்காவின் அதிபரானால், உறவுகள் அப்படியே இருக்குமா என்ற கேள்விகள் எழலாம்.

    ஆனால் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களுக்கும், அமெரிக்காவின் அடுத்த அதிபரைப் பற்றி அதிக உற்சாகமோ கவலையோ இல்லை.

    'அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும்'

    பட மூலாதாரம், PRADEEP GAUR / MINT VIA GETTY IMAGES

  2. பென்சில்வேனியா: டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

    தேர்தல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, ஃபிலடெல்பியா உள்ளிட்ட நகரங்களில் அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாகக் கூறி, வீதியில் இறங்கி டிரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

    பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை ஏற்க அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி பால் டைமண்ட்டிடம், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்களின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று டிரம்ப் தரப்பு சார்பில் கூறப்பட்டது. குடியரசு கட்சியினர் மட்டுமின்றி ஜனநாயக கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை பகுதிக்குள் நுழையவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

    இந்த விவகாரத்தில் ஏன் கட்சிப் பார்வையாளர்களை அனுமதிக்காமல் விட்டனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிபதி டைமண்ட் தெரிவித்தார்.

    இதே சமயம், குடியரசு கட்சியினருக்கு வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி மறுக்கப்படவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சமூக இடைவெளி விதிகளை காரணம் காட்டி தமது கட்சியினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று குடியரசு கட்சி சார்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

  3. அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

    ஒட்டுமொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், எப்படி நடக்கும், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி, என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

  4. நெவாடாவில் 3,062 மோசடிகள்: குடியரசு கட்சியினர்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    நெவாடாவில் 3,062 வாக்குப்பதிவு மோசடிகள் நடந்துள்ளதாக வில்லியம் பார் என்ற அமெரிக்க அட்டர்னி ஜெனரலிடம் குற்றப்புகாரை குடியரசு கட்சியினரை பதிவு செய்திருக்கிறார்கள்.

    மாகாணத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் குடியேறியவர்களும் இந்த தேர்தலில் வாக்குரிமை செலுத்தியதாக குடியரசு கட்சியினர் தெரிவித்திருக்கிறார்கள்.

  5. பைடன்: "டிரம்பின் வாக்கு எண்ணிக்கை கூற்றை எதிர்க்க வேண்டும்"

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், சில நிமிடங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக பதிவிட்ட ட்வீட்டுகளில், "பல மாகாணங்களில் சட்ட நடவடிக்கை மூலம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் தடுத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    சமீபத்திய ட்வீட்டில், டிரம்பின் முயற்சிக்கு பதிலடி தர வரலாற்றில் இல்லாத வகையில், மிகப்பெரிய தேர்தல் நடைமுறையை பாதுகாக்கும் முயற்சிக்காக நாங்கள் கூடியிருக்கிறோம். எங்களுக்கு உங்களுடைய உதவி தேவை என்று கூறியுள்ளார்.

    வாக்குகள் எண்ணப்படும் வேளையில், பென்சில்வேனியா, ஜோர்ஜா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்பின் முன்னிலை நிலவரம் குறைந்து கொண்டே வருகிறது.

  6. "ஜேம்ஸ் பேக்கர்" போன்ற நபரை தேடும் டொனால்ட் டிரம்ப்

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, 2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஜேம்ஸ் பேக்கரின் படம். ஃபுளோரிடா மாகாணத்தில் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை நடக்க இவரது நடவடிக்கை உதவியது

    டிரம்ப் பிரசாரக்குழுவினர், முக்கிய மாகாணங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க "ஜேம்ஸ் பேக்கர்" போன்ற நபரை தேடி வருகிறது.

    2000ஆம் ஆண்டு ஃபுளோரிடா மாகாணத்தில் மறுவாக்குப்பதிவு நடக்க காரணமான சட்டப்போராட்டங்கள் மற்றும் அரசியல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கியவர் ஜேம்ஸ் பேக்கர். அதனால்தான் அதிபர் பதவியை ஜார்ஜ் டபிள்யூ புஷ் பெற முடிந்தது.

    அவரைப்போன்ற சட்ட நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் நபரை டிரம்ப் தரப்பு தேடி வருகிறது.

    அமெரிக்க செனட் சபையில் டிரம்பை பதவி நீக்க ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த தீர்மானம் மீதான விசாரணையில் அவருக்காக வழக்கறிஞர் ஜே செகுலோ ஆஜரானார். அவர் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞராகவும் செயல்பட்டார்.

    ஆனால், பேக்கர் இது பற்றி என்ன கூறுகிறார்? அவரே ஏன் இப்போது டிரம்புக்காக ஆஜராக முடியாது? இந்த கேள்வியை பேக்கரிடம் கேட்டால், "2000ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறு" என்று பதில் அளித்தார்.

    "இதில் ஒரு விஷயம். வாக்குகள் எண்ணப்பட்டன, எண்ணப்படுகின்றன, எண்ணப்பட்டு வருகின்றன - இப்போது அதை எண்ணி முடிக்கும் கட்டம் வந்து விட்டது." என்று பேக்கர் குறிப்பிட்டார்.

    "வாக்குகளை எண்ண வேண்டாம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஒரு ஜனநாயகத்தில் அப்படியொரு முடிவை எடுப்பது மிகவும் கடினம்," என்று பேக்கர் தெரிவித்தார்.

  7. "விஸ்கான்சின் மறுவாக்கு எண்ணிக்கையை டிரம்ப் தரப்பு கோரவில்லை"

    தேர்தல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, விஸ்கான்சின் மாகாணத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் தேர்தல் அலுவலர்கள்

    விஸ்கான்சின் மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கையை டிரம்ப் பிரசாரக்குழு கோரவில்லை என்று அந்த மாகாணத்தின் தேர்தல் துறை உயரதிகாரி மீகன் வூல்ஃப் தெரிவித்துள்ளார்.

    இந்த புதிய முன்னேற்றம், இது தொடர்பாக முன்பு வெளிவந்த தகவல்களுடன் முரண்பட்டுள்ளது.

    விஸ்கான்சின் மாகாணத்தில் ஜோ பைடன், விளிம்பில் முன்னிலை வகிப்பதாக முன்பு கூறப்பட்டது. போர்க்கள மாகாணங்கள் சிலவற்றில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி டிரம்பின் பிரசாரக்குழு நீதிமன்றத்தை நாடியுள்ளன.

    ஆனால், தனது மாகாணத்தில் அத்தகைய அலுவல்பூர்வ கோரிக்கை டிரம்ப் குழு தரப்பில் இருந்து வரவில்லை என்று மீகன் வூல்ஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    வாக்குப்பதிவின் முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் தொடர்பாக நாங்கள் சான்றிதழ் தரும்வரை அத்தகைய கோரிக்கையை அவர்களால் வைக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அந்த முறையீட்டை தாக்கல் செய்ய இது சரியான நேரமில்லை என்றும் மீகன் கூறினார்.

  8. டிரம்பின் உரை ஒளிபரப்பை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள், ஆன்டனி ஸர்ச்சர், பிபிசி வட அமெரிக்கா செய்தியாளர்

    வியாழக்கிழமை இரவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு தேர்தல் முடிவுகள் தொடர்பாக உரையாற்றினார். ஆனால், அவர் உரையை நிறைவு செய்யும் முன்பாகவே அதை மூன்று அமெரிக்க தனியார் ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன.

    நிகழ்வின் முக்கியமான கட்டத்தில் ஊடகங்களின் இந்த செயல்பாடு முன்னெப்போதும் நடந்திராத ஒன்றாக கருதப்படுகிறது.அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக அதிபர் சுமத்தும் மோசடி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்று உள்ள நிலையில், அவரது புகார் தொடர்பாக தீவிரமாகும் கவலைகள், வாக்கு எண்ணிக்கை கணக்கீட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கலாம் என்பதன் பிரதிபலிப்பாக ஊடகங்களின் நடவடிக்கை கருதப்படுகிறது.

    ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடக தளங்கள், அதிபர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிடும் தேர்தல் தொடர்பான தகவல்களை எச்சரிக்கை குறிப்புடன் வெளியிட்டு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அவற்றுக்கு இணையானதாக அமெரிக்க தனியார் ஊடக செயல்பாடு கருதப்படுகிறது.

  9. அமெரிக்க தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்

    மொத்தம் உள்ள 537 தேர்தல் சபை வாக்குகளில், 270 எடுத்தால் வெற்றி.

    அந்த வகையில் தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 253 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளார்.

    பிபிசி
  10. பென்சில்வேனியா வாக்குகள்: டிரம்பின் புகாரை நிராகரிக்க வலியுறுத்தல்

    தேர்தல்

    பட மூலாதாரம், Reuters

    பென்சில்வேனியாவில் அஞ்சல் வழியில் பதிவான வாக்குகள் எண்ணும் நடவடிக்கையை மூன்று நாட்களுக்கு நீடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக டிரம்பின் பிரசாரக்குழு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மாகாணத்தின் ஜனநாயக கட்சித் தலைவர்களும் தலைமை தேர்தல் அதிகாரி கேத்தி பூக்வாரும் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் டிரம்ப் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டை நியாயப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்றும் டிரம்பின் வழக்கை விசாரிப்பது, அஞ்சல் வழியில் வாக்குகளை பெற்றவர்களுக்கு புறமப்பானதாக அமையும் என்று பூக்வார் கூறியுள்ளார்.

  11. "முதுகெலும்பில்லாத கட்சிக்காரர்கள்" - கோபத்தில் டிரம்பின் மகன்

    பென்சில்வேனியா, ஜோர்ஜாவில் பெரும்பாலான வாக்குகளைப் பெறலாம் என்ற டிரம்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், டிரம்புக்கு ஆதரவாக அவரது சொந்த கட்சிக்காரர்கள் கூட வாய் திறக்க மறுத்து வருவதாக அவரது மகன் எரிக் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

    குடியரசு கட்சியினர் எங்கே? கொஞ்சமாவது முதுகெலும்புடன் இருங்கள். இந்த மோசடிக்கு எதிராக குரல் கொடுங்கள். நீங்கள் ஆடுகளாக இருந்தால் நமது வாக்காளர்கள் உங்களை என்றும் மறக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. டிரம்பின் நம்பிக்கை மாகாணங்களின் நிலை என்ன?

    பென்சில்வேனியாவில் டிரம்பின் நிலவரம் கீழ்நோக்கி செல்வதாக முன்பே பிபிசி கூறியிருந்தது. அதேநிலை தற்போது போர்க்கள மாகாணமான ஜோர்ஜாவிலும் நடக்கிறது.

    அங்கு டிரம்புக்கும் பைடனுக்கும் இடையே நெருக்கமான போட்டி காணப்படுகிறது. இரு தரப்பும் 3,500 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே இருக்கிறார்கள்.

    இதுவரை, டிரம்புக்கு 49.4 சதவீத வாக்குகளும் பைடனுக்கு 49.3 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

    இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பைடனை விட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று டிரம்ப் முன்னிலை வகித்தார்.

  13. தேர்தல் நடைமுறைகளை குறை கூறும் டிரம்ப் - அவரது புகார் என்ன?

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாததால் இறுதி முடிவுகளை அறிய முடியாத நிலை நிலவுகிறது. இந்த தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி என குடியரசு கட்சியைச ்சேர்ந்த டொனால்ட் டிரம்பும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கும் புகார்களை பார்ப்போம்.

    • அமெரிக்க தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறும் டிரம்ப்பை பொருத்தவரை, நியாயமாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டால், தான்தான் உத்தேச வெற்றியாளர் என்று கருதுகிறார். ஆனால், தேர்தல் நடைமுறை மோசடி தொடர்பாக அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்கவில்லை. இதுவரை எண்ணப்பட்டு வரும் வாக்குகள் அனைத்தும் சட்டப்பூர்வமற்ற வாக்குகள் கிடையாது. அவை அஞ்சல் வழியில் பதிவான வாக்குகள். வழக்கமான நடைமுறைப்படியே அவை கடைசியாக எண்ணப்பட்டு வருகின்றன.சில பயனுள்ள தகவல்கள்
    • கடந்த சில மாதங்களாகவே அஞ்சல் வழி வாக்குகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டிருக்கிறார். தேர்தல் பரப்புரை கூட்டங்களிலும் அஞ்சல் வழி வாக்குகளை மோசடியான வாக்குகள் என்று அவர் அழைத்தார். அமெரிக்காவில் தேர்தல் மோசடிக்கான விகிதம் என்பது 0.0009% என்றவாறே உள்ளது என்று பிரென்னென் சென்டர் ஃபார் ஜஸ்டிஸ் என்ற ஆய்வு அமைப்பு, 2017ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.
    • அஞ்சல் வாக்குகள் என்பது, பெரும்பாலும் ஜோ பைடனுக்கு சாதகமாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம், தனது தேர்தல் பரப்புரையில் ஆதரவாளர்களிடமும் பொதுமக்களிடமும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அஞ்சல் வழியில் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.