'அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும்', ஜூபைர் அகமது, பிபிசி செய்தியாளர்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு திரும்பினாலும் சரி அல்லது ஜோ பைடன் புதிய அதிபராக நுழைந்தாலும் சரி - இந்தியாவுடனான அந்நாட்டு உறவுகளில் அதிக மாற்றம் இருக்காது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான இணக்கமான உறவைப் பார்க்கும்போது, பைடன் அமெரிக்காவின் அதிபரானால், உறவுகள் அப்படியே இருக்குமா என்ற கேள்விகள் எழலாம்.
ஆனால் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களுக்கும், அமெரிக்காவின் அடுத்த அதிபரைப் பற்றி அதிக உற்சாகமோ கவலையோ இல்லை.