அமெரிக்க அதிபர் தேர்தல்: 120 ஆண்டுகளில் அதிக வாக்குப்பதிவு; தாமதமாகும் முடிவுகள்

அமெரிக்க தேர்தலில் வெற்றியை தக்க வைக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஆட்சியைப் பிடிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கவனிக்க வேண்டிய முக்கிய மாகாணங்கள், ஆன்டனி ஸர்ச்சர், வட அமெரிக்கா பிபிசி செய்தியாளர்

    அமெரிக்காவில் நள்ளிரவைக் கடந்த நிலையில் நடக்கும் வாக்குப்பதிவில், பல மாகாணங்களில் தனக்கு முன்னிலை வாய்ப்புகள் இருப்பதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவிப்பதாக பிபிசி செய்தியாளர் ஆன்டனி ஸர்ச்சர் கூறுகிறார்.

    இந்த தேர்தலில் அதிபர் பதவியை தக்க வைக்க தேவைப்படும் மேஜிக் எண் 270 வேண்டுமெனில், டொனால்ட் டிரம்புக்கு ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகிய மாணாங்களின் வாக்குகள் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் பைடனுக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    இதற்கிடையே, விர்ஜீனியாவில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், இங்கு எப்போதுமே குடியரசு கட்சிக்கு சாதகமாகவே ஆரம்பநிலை முன்னிலை நிலவரம் இருப்பது வழக்கம். இங்குள்ள வாஷிங்டன் டி.சி ஜனநாயக கட்சிக்கு சாதகமானவர்களை அதிகம் கொண்டுள்ளதால் அதன் முடிவையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

  2. டிரம்புக்கு மீண்டும் கைகொடுக்குமா விஸ்கான்சின்?

    விஸ்கான்சின் மாகாணத்தில் வெற்றி பெறுவது ஏன் அவசியம்?

    அமெரிக்காவின் தொழிற்துறை மாகாணமான விஸ்கான்சின் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஹிலாரி கிளின்டனுக்கு அதிர்ச்சியளிக்கும் தோல்வியைத் தந்து டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தது.

    இந்த மாகாணத்தின் 10 தேர்தல் சபை வாக்குகளும் அதிபர் பதவியில் அமர தேவைப்படும் 270 வாக்குகள், டிரம்புக்கு கிடைக்க உதவின.

    ஆனால், அந்த வெற்றி கடும் போட்டிக்கு இடையே கிடைத்தது. முந்தைய தேர்தலில் வெறும் 0.7 சதவீத அளவிலேயே டிரம்ப் வெற்றி பெற்றார்.

    விஸ்கான்சின் மாகாணத்தில் அரை மணி நேரத்துக்கு முன்புதான் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    wisconsin
  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, பைடனுக்கு நியூயார்க்கில் வெற்றி வாய்ப்பு

    ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு நியூயார்க்கில் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. அதிபர் டிரம்பின் முன்னாள் வசிப்பிட மாகாணமான நியூயார்க், கடந்த 30 ஆண்டுகளாக ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் நியூயார்க் வெற்றி வாய்ப்பை ஹிலாரி கிளின்டனிடம் டிரம்ப் இழந்தார். சமீபத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விவகாரத்திலும் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோவுடன் டிரம்ப் இணக்கமாக இல்லை.

    BIDEN

    பட மூலாதாரம், Getty Images

  4. பல இடங்களில் நிறைவடையும் கட்டத்தில் வாக்குப்பதிவு

    பல மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது.

    அரிசோனா, கொலராடோ, கான்சாஸ், லூயிசியானா, மிஷிகன், நெப்ராஸ்கா, நியூ மெக்ஸிகோ, நியூ யார்க், வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, டெக்சாஸ், விஸ்கான்சின், வியோமிங் ஆகியவற்றில் வாக்குப்பதிவு நிறைவடையவிருக்கிறது.

    இதில் அரிசோனாவில் பைடனுக்கு சாதகமான நிலை உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. 38 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட டெக்சாஸ் பைடனுக்கு சாதகமாக இருந்தால், டிரம்பின் வெற்றி வாய்ப்பு சிக்கலாகலாம்.

  5. டிரம்ப் ஆலோசகர்: "ஃபுளோரிடாவை இழந்தால் ஆட்டம் முடிந்தது"

    அமெரிக்க அதிபரின் அலோசகரிடம் சிபிஎஸ் ஊடகம் பேசியபோது, அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

    அவர் தன்னிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரிகள், போர்க்கள மாகாணங்களான மூன்று இடங்களிலும் எட்டும் தூரத்திலேயே வெற்றி இருப்பதாக கூறியுள்ளனர் என குறிப்பிட்டார். ஒருவேளை ஃபுளோரிடா பைடனுக்கு போனால், ஆட்டம் முடிந்தது. ஆனால், அது டிரம்புக்கு சாதகமாக அமைந்தால் ஆட்டம் விறுவிறுப்பாகும் என்று அவரது ஆலோசகர் தெரிவித்தார். எண்ணப்பட்ட 93% வாக்குகளில், ஃபுளோரிடாவில் டிரம்புக்கு 51 சதவீதமும் பைடனுக்கு 49 சதவீதமும் சாதகமான நிலவரம் உள்ளது.

    டிரம்ப்

    பட மூலாதாரம், EPA

  6. ஃபுளோரிடாவில் டிரம்புக்கு சாதகமாகும் நிலவரம், ஆன்டனி ஸர்ச்சர், பிபிசி வட அமெரிக்க செய்தியாளர்

    அமெரிக்காவின் கிழக்குக்பகுதியில் பாதி இடங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதில் ஃபுளோரிடாவில் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் வட அமெரிக்கா பிபிசி செய்தியாளர் ஆன்டனி ஸர்ச்சர்.

    ஓஹையா மாகாணத்தில் ஆரம்பநிலையிலேயே ஜோ பைடனுக்கு முன்னேற்றம் நிலவுகிறது. கடந்த தேர்தலில் இங்கு ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பை இழந்தார். பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் பைடனின் வெற்றி வாய்ப்பு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

    ஜோர்ஜாவிலும், வடக்கு கரோலைனாவிலும் கடும் போட்டி நிலவினாலும் டிரம்பின் வெற்றிக்கு சாதகமாகவே தொடக்க நிலவரம் உள்ளது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, டிரம்புக்கு மேற்கு விர்ஜீனியாவில் வெற்றி வாய்ப்பு

    டொனால்ட் டிரம்ப் மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பு நடந்த நான்கு தேர்தல்களிலும் குடியரசு கட்சிக்கு சாதகமான முடிவுகளே காணப்பட்டன. முந்தைய தேர்தலில் டிரம்ப் 5 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாகாணத்தில் வென்றார்.

    TRUMP

    பட மூலாதாரம், Getty Images

  8. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. அடுத்த அமெரிக்க அதிபரிடம் இந்தியா என்ன எதிர்பார்க்கும்?

    சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில், மிக அரிதான ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஐந்து பேருக்கு அமெரிக்க குடியுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அது.

    அந்த ஐந்து பேரில் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட மென்பொருள் ஆக்குநர் சுதா சுந்தரி நாராயணன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இளஞ்சிவப்பு நிற சேலையில் இருந்த அவரது முகம் புன்னகையால் பூத்திருந்தது. புதிதாக வாங்கிய அமெரிக்க குடியுரிமை சான்றிதழை கையில் பெருமையோடு ஏந்தியிருந்தார் அவர்.

    ஆகஸ்ட் 25ம் தேதி, குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. "கட்சி சார்புடன் செய்யப்பட்ட நாடகம்" என்று அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த நிகழ்வை, இந்திய ஊடகங்கள் பெருமிதத்தோடு பதிவு செய்தன.

    தங்கள் நாட்டில் பிறந்த ஒருவர் அமெரிக்கர் ஆகும் நிகழ்வை, அதிபர் தாமே முன்னின்று நடத்துவது குறித்தப் பெருமிதம் அது.

    Trump

    பட மூலாதாரம், Getty Images

  10. கமலா ஹாரிஸ் போன்று அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த ஐந்து தமிழர்கள்

    அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாகியுள்ளது.

    தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண், அமெரிக்க தேர்தல் களத்தில் இருப்பது குறித்து பலரும் கமலா ஹாரிஸை பாராட்டி வருவதோடு, பெருமையும் கொள்கின்றனர்.

    கமலா ஹாரிஸை போன்று வேறு சில தமிழர்களும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த இடத்தில், அதிகாரம் மிக்கவர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.

    அதில் ஒரு சில நபர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    கமலா ஹாரிஸ் போன்று அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த ஐந்து தமிழர்கள்

    பட மூலாதாரம், MICHAEL COHEN / GETTY

  11. எலக்டோரல் காலேஜ் என்றால் என்ன?

    'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகளை ஒருவர் எந்த அளவுக்கு கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர். இந்த எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்தல் சபையில் மக்கள் பிரதிநிதிகள் சபை சேர்ந்த 435 பேர், பிரதிநிதிகள் சபையில் இல்லாத கொலம்பியா மாவட்டத்தின் 3 உறுப்பினர்கள், செனட் சபையின் 100 உறுப்பினர்கள் என மொத்தம் 538 இடங்கள் உள்ளன. இந்த உறுப்பினர்கள் தங்களுடைய மாகாணத்தில் மக்கள் பெரும்பான்மையாக வாக்குரிமை செலுத்திய வேட்பாளருக்கே வாக்களிக்க முடியும். செனட் சபை உறுப்பினர்களும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, டிரம்புக்கு இண்டியானாவில் வெற்றி வாய்ப்பு

    அதிபர் டொனால்ட் டிரம்ப் இண்டியானாவில் வெற்றி பெறும் வாய்ப்பில் இருக்கிறார். இது துணை அதிபர் மைக் பென்ஸின் சொந்த மாகாணம். வழக்கமாக இங்கு குடியரசு கட்சிக்கே வெற்றி கிடைக்கும். ஆனால், 2008இல் நடந்த தேர்தலின்போது பராக் ஒபாமாவுக்கு வெற்றி கிடைத்தது. இண்டியானாவில் 11 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன.

    Donald Trump

    பட மூலாதாரம், Getty Images

  13. வணக்கம் நேயர்களே!

    அமெரிக்க தேர்தல் தொடர்பான தகவல்களை டெல்லியில் உள்ள பிபிசி தமிழ் சேவை தொகுத்து வழங்குகிறது. அவை குறித்த விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள, இந்த பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

    US Election

    பட மூலாதாரம், Getty Images

  14. அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்: 5 முக்கிய தகவல்கள்

    இந்த நேரலை இத்துடன் முடிகிறது. இனி நவம்பர் 4, புதன்கிழமை , இந்திய /இலங்கை நேரப்படி காலை 5 மணிக்கு மேல் தொடரும்.

    அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகளை இந்தப் பக்கத்தின் கீழுள்ள உள்ளடக்கங்களில் விரிவாகப் படிக்கலாம்.

    நன்றி நேயர்களே!

    trump vs biden US election 2020

    பட மூலாதாரம், Getty Images / BBC

  15. களத்தில் உள்ள போட்டியாளர்கள்

    கடந்த 230 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அதிபர் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் மட்டுந்தான் இதுவரை சுயேச்சை வேட்பாளராக இருந்து அந்த பதவியை அடைந்த ஒரே நபர்.

    ஆம், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளே ஆக்கிரமித்து வருகின்றன.

  16. 'எந்த விளையாட்டுக்கும் இடமில்லை ' - டிரம்ப்

    தேர்தல் நாளான செவ்வாயன்று, ஃபாக்ஸ் நியூஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளைவிட கையாள்வதற்கு மிகவும் கடினமான நாடு அமெரிக்காதான் என்று கூறினார்.

    முடிவுகள் தெளிவாக தெரியவரும்போது தான் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என்றும், இதில் எந்த விளையாட்டுக்கும் இடமில்லை என்றும் தெரிவித்தார்.

    தாம் முன்னிலை வகிப்பதாகத் தோன்றினால், வாக்குப்பதிவு நாளின் இரவிலேயே டிரம்ப் தாம் வெற்றி பெற்றதாக அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்பட்டது.

    செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், "அது பெண்களுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாக இருக்கும்," என்று டிரம்ப் அப்பேட்டியில் குறிப்பிட்டார்.

  17. மெலானியா டிரம்ப் வாக்களித்தார்

    அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பால்ம் பீச்சில் இன்று வாக்களித்தார்.

    டிரம்ப் தம்பதி ஓராண்டுக்கு முன் நியூ யார்க்கில் இருந்து ஃபுளோரிடாவுக்கு தங்கள் வீட்டை மாற்றியது.

    மெலானியாவின் கணவர் டிரம்ப் ஒரு வாரத்துக்கு முன்னரே வாக்களித்தபோது, அவருடன் சேர்ந்து ஏன் வாக்களிக்காவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''இன்று தேர்தல் நாள்; இன்று வாக்களிப்பதற்காக நான் இங்கு வந்தேன்," என்று மெலானியா கூறினார்.

    First Lady Melania Trump

    பட மூலாதாரம், Reuters

  18. அடுத்த அதிபரிடம் இந்தியா என்ன எதிர்பார்க்கும்?

    வெற்றி பெறுவது டிரம்பாக இருந்தாலும், ஜோ பைடனாக இருந்தாலும், அடுத்த அதிபரால் இந்தியாவுக்கு என்ன செய்ய முடியும்?

  19. கோவிட்-19 உள்ளவர்கள் நேரில் வாக்களிக்க அனுமதி

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

    கோவிட்- 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நேரடியாக வந்து வாக்குகளை செலுத்த விரும்பினால் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர்கள் தெரிவிக்க வேண்டும் .

    அவர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் வாக்கை செலுத்துவதற்கு முன்பும், பின்பும் சோப் அல்லது சேனிடைசர் கொண்டு கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பிறரிடமிருந்து குறைந்தது 6 அடி தூரம் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, நேரடியாகச் சென்று வாக்களிக்காமல் இருப்பதற்கான மாற்று வழிகளை ஆராயுமாறும் வாக்காளர்களிடம் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கேட்டுக்கொண்டது.

    அதிக கூட்ட நெரிசல் இருக்க வாய்ப்பு உள்ள நேரத்தை தவிர்க்குமாறும்,வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் செலவு செய்வதை தவிர்ப்பதற்காக ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுமாறும் அந்த அமைப்பு வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    us election coronavirus

    பட மூலாதாரம், Reuters

  20. கஞ்சா, கருக்கலைப்பு - உள்ளூர் சட்டங்கள் மீதும் வாக்கெடுப்பு

    அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இவற்றுடன், வெவ்வேறு மாநிலங்களில் சில குறிப்பிட்ட சட்டங்கள் தொடர்பான வாக்கெடுப்புகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    • பொழுதுபோக்கு மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமானதாக ஆக்குவது குறித்து பல அமெரிக்க மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
    • கொக்கைன் போன்ற போதைப்பொருளை குறைந்த அளவில் வைத்துக் கொள்வதை குற்றமற்ற தாக்குவது குறித்து ஓரிகன் வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
    • கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றுவது தவிர்த்த காரணங்களுக்காக 22 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை தடை செய்வது குறித்து கொலோராடோவில் நடக்கும் தேர்தலில் முடிவு செய்யப்படும்.
    • சிறையில் இருப்பவர்கள் பணத்தை கொடுத்து பிணை பெறுவதற்கு பதிலாக, சந்தேக நபர்கள் சிறையில் இருந்து பிணையில் வந்தால் உண்டாகும் ஆபத்துகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் பிணை வழங்குவது குறித்த வாக்கெடுப்பும் கலிஃபோர்னியா வாக்காளர்கள் முன்பு முன்வைக்கப்பட்டுள்ளது.
    • இது போல வெவ்வேறு மாநிலங்களில் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.