தமிழ்நாட்டில் புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று; மேலும் 6 பேர் பலி

தமிழ்நாட்டில் இதுவரை 9,909 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    நன்றி நேயர்களே!

    பட மூலாதாரம், Getty Images

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ்: இன்று என்னவெல்லாம் நடந்தது?, முக்கிய தகவல்களின் தொகுப்பு

    கொரோனா வைரஸ்: இன்று என்னவெல்லாம் நடந்தது?

    பட மூலாதாரம், Getty Images

    சர்வதேச அளவில் மாலை நிலவரப்படி கொரோனாவால் 5606925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 350,876 பேர் பலியாகி உள்ளனர், அதிகபட்சமாக அமெரிக்காவில் 98929 பேரும், பிரிட்டனில் 37,1300 பேரும், இத்தாலியில் 32,955 பேரும் பலியாகி உள்ளனர் என்கிறது ஜான் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள். கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கபப்ட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும்,பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம்.

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், 170 உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767ஆக உள்ளது. 83004 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    தென் அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான பிரேசிலில் மரண எண்ணிக்கை ஐந்து மடங்கு உயரும் என கணிக்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதிக்குள் 125,000 பேர் பிரேசிலில் பலியாவார்கள் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இப்போது வரை அங்கு 24,500 பேர் பலியாகி உள்ளனர். கோவிட் 19 தொற்றை மிக மோசமாக பிரேசில் அதிபர் சயீரு பொல்சினாரூ கையாள்வதாக பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

    இலவசமாக அல்லது குறைந்த விலையில் மருத்துவ வசதி வழங்க இயலும் தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுங்கள் என இந்தியஉச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. சச்சின் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கோரி உள்ளது நீதிமன்றம்.

    மூட்டழற்சி, மலேரியா காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசு நிறுத்திவைத்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த பரிசோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் நேற்று, மே 26ஆம் தேதி, தெரிவித்தது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) கோவிட்-19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கொரோனாவுக்குப் பிறகு உலகில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. 9/11 நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகில் புதிய அத்தியாயம் தொடங்கியதாக குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்குப் பிறகு ஏற்படப் போகும் மாற்றம் புதிய புத்தகமாக இருக்கப் போகிறது என்றார். கோவிட்-19 உலகத் தொற்றின் பாதிப்பு குறித்து பொது சுகாதார வல்லுநர்கள் ஆஷிஷ் ஜா, ஜான் ஜிசெக் ஆகியோருடன் உரையாடினார் ராகுல்காந்தி. அந்த உரையாடலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கடுமையான ஊரடங்கை இந்தியா அமல்படுத்தினால் அதன் பொருளாதாரம் நாசமாகும் என்று அப்போது ஜிசெக் குறிப்பிட்டார்.

    கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைகளிலிருந்து மீள ஐரோப்பிய ஆணையம் 750 பில்லியன் ஈரோகளை ஒதுக்கி உள்ளது.தனது கார் தொழிற்சாலைகளை மீட்க 8 பில்லியன் ஈரோக்களை ஒதுக்கீடு செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கொரோனாவால் அந்நாட்டின் கார் தொழிற்சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாடு ஹைட்ராக்ஸிக்ளோரோக்யூன் மருந்து வழங்குவதையும் நிறுத்தி உள்ளது.

    இந்திய அரசு தரும் தகவல்களின்படி தற்போது வரை இந்தியாவில் கொரோனாவுக்காக 930 சிறப்பு மருத்துவமனைகளும், 158747 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளும், அவசரநிலை சிகிச்சை பிரிவில் 20355 படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் 69076-ம் உள்ளன. மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல் 2362 கொரோனா சிறப்பு சுகாதார நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கு 132593 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளும், அவசரநிலை சிகிச்சை பிரிவில் 10903 படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் 45562-ம் உள்ளன

    பிரிட்டன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் லயஸான் குழு முன்பு இன்று காணொளி காட்சி மூலம் ஆஜரானார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஜான்சனிடம் கேட்டனர்.குறிப்பாக கொரோனா தடுப்பில் அரசு எடுத்த நடவடிக்கைகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்களுக்கான தண்டனை, ஜக்கிய ராஜ்ஜிய நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு என பல்வேறு கேள்விகளை குழு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர்.

    மலேசியாவில் திடீரென கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக சில தரப்பினர் கவலை தெரிவித்திருந்த நிலையில், இன்று புதிதாக வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களாகக் குறைந்தது. 15 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இதுவரைபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,619ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,083 ஆகவும்உள்ளதுஎனசுகாதாரஅமைச்சின்பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை 115ஆக நீடிக்கிறது.

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வரும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இன்று ஒரே நாளில் அங்கு 533 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876ஆகஅதிகரித்தது. இதுவரை நோய்வாய்ப்பட்டவர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், அதாவது 16, 435 பேர் குணமடைந்துள்ளனர்.

  3. கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலைக்கு என்ன காரணம்?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  4. லயஸான் குழு: போரிஸ் ஜான்சனிடம் சரமாரி கேள்வி

    லயஸான் குழு: போரிஸ் ஜான்சனிடம் சரமாரி கேள்வி

    பிரிட்டன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் லயஸான் குழு முன்பு இன்று காணொளி காட்சி மூலம் ஆஜரானார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஜான்சனிடம் கேட்டனர்.

    குறிப்பாக கொரோனா தடுப்பில் அரசு எடுத்த நடவடிக்கைகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்களுக்கான தண்டனை, ஜக்கிய ராஜ்ஜிய நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு என பல்வேறு கேள்விகளை குழு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர்.

  5. பெண் பணியாளர்களை இழிவு படுத்திய கென்ட், கொதித்தெழுந்த நெட்டிசன்கள், மன்னிப்பு கேட்ட நிறுவனம்

    பெண் பணியாளர்களை இழிவு படுத்திய கென்ட்

    பட மூலாதாரம், Getty Images

    வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர்களை இழிவுபடுத்துவது போல விளம்பரம் வெளியிட்ட கென்ட் நிறுவனம், கடும் எதிர்ப்புக்குப் பின் மன்னிப்பு கோரியுள்ளது.

    மாவு பிசையும் இயந்திரம் ஒன்றுக்கு அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தில், "ரொட்டிக்கு மாவு பிசைய பெண் பணியாளர்களை அனுமதிக்கிறீர்களா? அவர்களின் கைகளில் தொற்று இருக்கலாம். அதனால் எங்கள் நிறுவனத்தின் இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள்," என கென்ட் நிறுவனம் கூறியிருந்தது.

    இதற்கு சமூக ஊடகத்தில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: மோதி

    கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய பிரதமர் மோதி இலங்கை பிரதமர் ராஜபக்‌ஷவுக்கு உறுதி அளித்துள்ளார்.

    ராஜபக்‌ஷவுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோதி இதனை தெரிவித்துள்ளார்.

    ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளிக்கும் தரவுகளின்படி, 1319 பேர் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 10 பேர் பலியாகி உள்ளனர்.

  7. கொரோனா செய்திகள் 6

  8. கொரோனா வைரஸ் - சர்வதேச நிலவரம்

  9. 3 வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வரும்: சிங்கப்பூரின் புதிய நம்பிக்கை

    3 வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வரும்: சிங்கப்பூரின் புதிய நம்பிக்கை

    பட மூலாதாரம், Getty Images

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வரும் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இன்று ஒரே நாளில் அங்கு 533 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,876ஆகஅதிகரித்தது. இதுவரை நோய்வாய்ப்பட்டவர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், அதாவது 16, 435 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், சிங்கப்பூரில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. தங்கு விடுதிகளில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் அளிக்கத் துவங்கியுள்ளது என தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறியதாக சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

    நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அடுத்த 3 வாரங்களில் நூறுக்கும் கீழாக பதிவாகக்கூடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    R0 எனப்படும் கிருமிப் பரவல் விகிதமானது சிங்கப்பூரில் 0.5 விழுக்காடாக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டும் நிபுணர்கள், இதை நல்ல அறிகுறி என்கின்றனர்.

  10. கொரோனா வைரஸ்: சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா?

    கொரோனா வைரஸ்: சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படாதா?

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம்.

  11. சட்டவிரோத குடியேறிகளை மனிதாபிமானத்துடன் நடத்துக, மலேசிய அரசுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

    மலேசியாவில் திடீரென கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக சில தரப்பினர் கவலை தெரிவித்திருந்த நிலையில், இன்று புதிதாக வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களாகக் குறைந்தது. 15 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். இதுவரைபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,619ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,083 ஆகவும்உள்ளதுஎனசுகாதாரஅமைச்சின்பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை 115ஆக நீடிக்கிறது.

    மலேசியஅரசு பாகுபாடு காட்டுவதில்லை: மூத்த அமைச்சர்

    இதற்கிடையே மலேசிய குடிநுழைவு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகள் மத்தியில் வைரஸ் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அத்தொழிலாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இவ்வாறு வலியுறுத்தியதை அடுத்து இது விவதாப் பொருளாகியுள்ளது.

    இதற்குப் பதிலளித்துள்ள மூத்த மற்றும் தற்காப்பு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி, சட்டவிரோத குடியேறிகள் அல்லது பணிக்கு உரிய விசா வைத்துள்ள தொழிலாளர்கள் என்று மலேசிய அரசு பாகுபாடு பார்ப்பதில்லை என்றும், அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்விஷயத்தில் மலேசிய அரசைக் குறை கூறுவது நியாயமற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

    "குடிநுழைவு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய்த் தொற்றியோர் என கண்டறியப்பட்டவர்கள் மிக அழகானது என குறிப்பிடப்படும் செர்டாங் வேளாண் பூங்காவில் உள்ள மையத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

    "அங்கு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளன. மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. சட்டத்தை மீறிய அவர்களை சிறையில் அடைக்கக்கூட மலேசிய அரசு விரும்பவில்லை. பத்திரமாக தாய் நாட்டுக்கு அனுப்பவே விரும்புகிறது," என அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

    கோவில்களில் திருமணம் நடத்த வேண்டாம்: இந்து சங்கம் வேண்டுகோள்

    மலேசியாவில் நிபந்தனையுடன்கூடியபொதுநடமாட்டக்கட்டுப்பாட்டுஆணைஅமலில்இருக்கும் வேளையில் இந்து ஆலயங்களில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இதை மீறி அண்மையில் இரண்டு கோவில்களில் திருமணங்கள் நடந்ததாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், கோவில்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்பதில் கோவில் நிர்வாகங்கள் உறுதியாகஇருக்கவேண்டும்என மலேசிய இந்து சங்கம் கூறியுள்ளது.

    உரிய தகவல் தெரிவிக்காமல் இவ்வாறு நடைபெற இருந்த இரண்டு திருமணங்களை இந்து சங்கம் தடுத்து நிறுத்தியதாக அதன் தலைவர் மோகன்ஷான் தெரிவித்துள்ளார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாட்டில் புதிதாக 817 பேருக்கு கொரோனா

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டிற்குள் 678 பேருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 139 பேருக்கும் இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 508 பேர். பெண்கள் 309 பேர்.

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை சோதனை செய்ய 70 சோதனைச் சாலைகள் இயங்கிவரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,231 பேருக்கு இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மாநிலத்தில் 4,42,970 பேருக்கு இந்த சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் 567 பேர் மருத்துவமனையிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 9909 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 8500 பேர் இருக்கின்றனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உள்ளது.

    உயிரிழந்த ஆறு பேரில் ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்ற ஐந்து பேர் ராஜீவ் காந்தி அரசுதலைமை மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நான்கு பேருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இருந்தன.

    இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 558 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுவரை சென்னையில் மட்டும் 12,203 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 31 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 14 பேருக்கும் திருவள்ளூரில் 40 பேருக்கும் திருவண்ணாமலையில் 13 பேருக்கும் இந்நோய்த் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 86 பேருக்கு இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில் தலா ஒரு கொரோனா நோயாளி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    coronavirus tamilnadu
  13. கொரோனா வைரஸ்: சில கற்பிதங்கள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. கொரோனா வைரஸ்: இந்தியாவின் சுகாதாரவசதிகள்

    இந்திய அரசு தரும் தகவல்களின்படி தற்போது வரை இந்தியாவில் கொரோனாவுக்காக 930 சிறப்பு மருத்துவமனைகளும், 158747 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளும், அவசரநிலை சிகிச்சை பிரிவில் 20355 படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் 69076-ம் உள்ளன. மருத்துவமனைகள் மட்டும் அல்லாமல் 2362 கொரோனாசிறப்பு சுகாதார நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கு 132593 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளும், அவசரநிலை சிகிச்சை பிரிவில் 10903 படுக்கை வசதிகளும், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகள் 45562-ம் உள்ளன.

  15. கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

    கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைகளிலிருந்து மீள ஐரோப்பிய ஆணையம் 750 பில்லியன் ஈரோகளை ஒதுக்கி உள்ளது.தனது கார் தொழிற்சாலைகளை மீட்க 8 பில்லியன் ஈரோக்களை ஒதுக்கீடு செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கொரோனாவால் அந்நாட்டின் கார் தொழிற்சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாடு ஹைட்ராக்ஸிக்ளோரோக்யூன் மருந்து வழங்குவதையும் நிறுத்தி உள்ளது.

  16. கொரோனா வைரஸ்: அசாம் நிலவரம் என்ன?

    அசாம் கொரோனா தொற்று எண்ணிக்கை 714 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டுமே அங்கு 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. கொரோனா : சிறப்பு ரயில்க:

    பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து கொண்டு இதுவரை 1337 ரயில்கள் உத்தர பிரதேசம் வந்துள்ளதாக உத்தர பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. கொரோனா ஆறு முக்கிய தகவல்கள்

    கொரோனா ஆறு முக்கிய தகவல்கள்

    பட மூலாதாரம், Getty Images

    • சர்வதேச அளவில் மாலை நிலவரப்படி கொரோனாவால் 5606925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 350,876 பேர் பலியாகி உள்ளனர், அதிகபட்சமாக அமெரிக்காவில் 98929 பேரும், பிரிட்டனில் 37,1300 பேரும், இத்தாலியில் 32,955 பேரும் பலியாகி உள்ளனர் என்கிறது ஜான் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள். கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கபப்ட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும்,பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம்.
    • இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், 170 உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767ஆக உள்ளது. 83004 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
    • தென் அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான பிரேசிலில் மரண எண்ணிக்கை ஐந்து மடங்கு உயரும் என கணிக்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதிக்குள் 125,000 பேர் பிரேசிலில் பலியாவார்கள் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இப்போது வரை அங்கு 24,500 பேர் பலியாகி உள்ளனர். கோவிட் 19 தொற்றை மிக மோசமாக பிரேசில் அதிபர் சயீரு பொல்சினாரூ கையாள்வதாக பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
    • இலவசமாக அல்லது குறைந்த விலையில் மருத்துவ வசதி வழங்க இயலும் தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுங்கள் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. சச்சின் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கோரி உள்ளது நீதிமன்றம்.
    • மூட்டழற்சி, மலேரியா காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசு நிறுத்திவைத்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த பரிசோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் நேற்று, மே 26ஆம் தேதி, தெரிவித்தது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) கோவிட்-19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    • கொரோனாவுக்குப் பிறகு உலகில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. 9/11 நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகில் புதிய அத்தியாயம் தொடங்கியதாக குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்குப் பிறகு ஏற்படப் போகும் மாற்றம் புதிய புத்தகமாக இருக்கப் போகிறது என்றார். கோவிட்-19 உலகத் தொற்றின் பாதிப்பு குறித்து பொது சுகாதார வல்லுநர்கள் ஆஷிஷ் ஜா, ஜான் ஜிசெக் ஆகியோருடன் உரையாடினார் ராகுல்காந்தி. அந்த உரையாடலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கடுமையான ஊரடங்கை இந்தியா அமல்படுத்தினால் அதன் பொருளாதாரம் நாசமாகும் என்று அப்போது ஜிசெக் குறிப்பிட்டார்.
  19. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்திய பிரான்ஸ்

    மூட்டழற்சி, மலேரியா காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசு நிறுத்திவைத்துள்ளது.

    பல நாடுகளில் நடைபெற்று வந்த பரிசோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் நேற்று, மே 26ஆம் தேதி, தெரிவித்தது.

    ஹைட்ராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) கோவிட்-19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மருந்தை உட்கொள்வதாக கூறியிருந்தார்.

    ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா தொற்றை குணமாக்கும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

    hydroxychloroquin for coronavirus treatment

    பட மூலாதாரம், Reuters

  20. உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு - வரைபட வடிவில்

    உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

    coronavirus world numbers

    பட மூலாதாரம், Getty Images