You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு; உயிரிழப்பு 111ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 52,71,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் 3 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்: திணறும் பிரேசில்

    பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக 965 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22,013 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சனிக்கிழமை அன்று 16,508 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 347,398 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொற்று எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.

    கொரோனா பிரச்சனையை கையாள அதிபர் சயீர் பொல்சனாரூ சரியான நடவடிக்கை எடுக்காததே, இங்கு கொரோனா பூதாகரமாக அதிகரிக்க காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

  2. கொரோனா: செளதி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் - வளைகுடா நாடுகளில் என்ன நடக்கிறது?

  3. ஜெர்மனி: பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

    ஜெர்மனியில் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஜெர்மனியில் பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த மே 10 பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்றும், மரண எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது. இதனால் பொது முடக்கத்தை தளர்த்தும் முடிவை அரசு எடுத்தது

    ஜெர்மனியில் இதுவரை 177,850 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 8,216 பேர் இறந்துள்ளனர்.

  4. நியூயார்க்கில் முதல் முறையாக 100 குறைவான கொரோனா மரணம்

    கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நியூயார்க்கில் 84 பேர் இறந்துள்ளனர் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார்.

    சனிக்கிழமை அன்று மரண எண்ணிக்கை 109ஆக இருந்தது.

    அமெரிக்காவில் கொரோனாவுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இங்கு ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட 1000 பேர் கொரோனாவால் இறந்தனர்.

  5. இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6767 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 147 பேர் இறந்துள்ளனர்.

    தற்போது இந்தியாவில் இருக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 1,31,958

    குணமடைந்தவர்கள்: 54,440

    இறந்தவர்கள்: 3867

  6. உலகளவில் 3,40,000 பேர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 52,71,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

    உலகெங்கும் 3 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவில் மட்டும் இதுவரை கொரோனாவால் 97 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

  7. நேற்று நடந்தவை - சில முக்கிய தகவல்கள்

    • கொரோனா பெருந்தொற்று காரணமாக, உலகில் 8 கோடி பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • வரும் ஜூலை மாதம் முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயினுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
    • இந்தியாவில் மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட உள்ள நிலையில், ஆகஸ்டு மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் என இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்
    • தமிழகத்தில் நேற்று மேலும் 759 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512ஆக உயர்ந்துள்ளது.
    • சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
  8. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லியில் இருந்து அபர்ணா ராமமூர்த்தி மற்றும் புதுவையிலிருந்து நந்த குமார் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.