நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை சுமார் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் தொடர்பாக உலகம் முழுவதிலும் இருந்து இன்று வெளியான முக்கிய செய்திகளை சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
உலக நாடுகள் பலவும் படிப்படியாக முடக்க நிலையை தளர்த்தி வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டுதலை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதன்படி, கிரிக்கெட் வீரர்கள் எப்படி பயிற்சியில் ஈடுபட வேண்டும், அவர்களது உடல்நிலையை கண்காணிப்பது எப்படி,
சமூக விலகலை பயிற்சியின்போதும் போட்டிகளின்போதும் பயணங்களின்போதும் உறுதிசெய்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விளக்கும் வழிகாட்டுதலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
எனினும், எந்தெந்த நாடுகளில் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் ஐ.சி.சி. வெளியிடவில்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அதன் தாக்கம் பெரியளவில் இல்லாமல் சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வரிசையில் தற்போது டென்மார்க்கும் இணைந்துள்ளது. தற்போது அங்கு அருங்காட்சியகங்கள், கலைக் கூடங்கள், உயிரியல் பூங்காக்கள் மட்டுமின்றி திரையரங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. எனினும், சமூக விலகல் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விடுமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.
மேலும், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இன்றும் டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயினை (HCQ) பயன்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத பகுதிகளில் பணிபுரிந்து வரும் நோய்த்தொற்று அறிகுறியற்ற சுகாதார மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு இந்த மருந்தின் பயன்பாட்டை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் பிரிட்டனில் தவித்து வருபவர்களின் விசா வரும் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 24ஆம் தேதிக்கு பிறகு விசா காலம் நிறைவுற்று, பயணக் கட்டுப்பாடுகள் அல்லது சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் காரணமாக தாயகத்துக்கு செல்ல முடியாதவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது தற்காலிக விசாக்களில் பிரிட்டனில் தங்கியுள்ளவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு விரைந்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 614 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதிய நோயாளிகளில் நான்கு பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள். பெரும்பாலானவர்கள் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் 30,426 பேர் பாதிக்கப்பட்டதாகவும், நேற்று வரை 12,108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 என்றும் அந்த அமைச்சு உறுதி செய்துள்ளது.
பாலர் பள்ளி ஊழியர்கள் சிலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, இம்மாதம் 15ஆம் தேதி முதல் பாலர் பள்ளி ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10,400 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து ஊழியர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் பரிசோதனைகள் செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜூன் 2ஆம் தேதி முதல் பாலர் பள்ளிகள் இயங்கும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் 846 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்திய நிலவரம், உலக நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 786 நபர்களில், 95 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
786 நபர்களில் 569 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.
மலேசிய பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்த அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனை வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமருக்கு கோவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதியான போதிலும், இன்று தொடங்கி அடுத்த 14 நாட்களுக்கு பிரதமர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் தேதி புதன்கிழமை, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற சந்திப்பில் அக்குறிப்பிட்ட அதிகாரியும் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதையடுத்து தங்கள் வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமருடனான அனைத்து சந்திப்புகளின் போதும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட அனைத்து சுகாதார விதிமுறைகளும் உறுதியாக கடைபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் இன்றைய நிலவரம்:
இதற்கிடையே மலேசியாவில் இன்று புதிதாக 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,137ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மலேசியாவில் கோவிட்-19 நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவே உள்ள இணைப்பில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பயணிப்பது போல ஒரு காணொளி சமூக வலை தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வட இந்தியப் பெண் தொழிலாளி ஒருவர் ரயிலில் இடம் கிடைக்காமல் இவ்வாறு பயணிக்கிறார் என்று கூறிப் பகிரப்படும் காணொளில் பார்ப்பவர்களை ஒருவேளை கண்கலங்க வைத்திருக்கலாம்.
இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நான்கு பேர் இன்று உயிரிழந்ததையும் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 846 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 7,128ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை கேரளாவில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்.
எனினும், இன்று நோய்த்தொற்று உறுதியானவர்களில் 17 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 21 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும் கேரளா வந்தவர்கள் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 216ஆக அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிசெய்யும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இது நான்காவது முறை.
இந்தியாவில் இன்று பிற்பகல் 1 மணி வரை 27,55,714 சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட18,287 சோதனைகளும் அடக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை உறுதிசெய்யும் கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பணி தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த 6-8 வாரங்களில் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கருவிகளை உற்பத்தி செய்யும் திறனை நாடு அடையுமென்றும் மத்திய அரசின் கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்தை அளிக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த ஆர்சனிகம் ஆல்பம் 30 சி கொரோனாவுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது?
இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்கும் திட்டத்தை எகிப்து அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை மாதம் முதல் அடுத்த ஓராண்டிற்கு எகிப்து குடிமக்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு சதவீதமும், ஓய்வூதியத்தில் இருந்து அரை சதவீதமும் கழிக்கப்படும்.
மாதம் 125 டாலர்களுக்கும் குறைவான மாத வருமானம் உள்ளவர்கள் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றை சேர்ந்தவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் தேதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை சனிக்கிழமை (23) இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் நாடு தழுவிய ஊரடங்கு, எதிர்வரும் செவ்வாய்கிழமை (26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் காணப்படுகின்ற கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ந்தும் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதவியேற்றுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப்போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று மதியம் முதல் விமான பயணச்சீட்டுகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் வரும் மே 25 முதல் ஆகஸ்டு 25 வரையிலான மூன்று மாதகாலத்திற்கு நாடு முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8,428 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தெற்கு சூடானில் பத்து மத்திய அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெற்கு சூடானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பணிக்குழுவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் தவிர்த்து அந்த குழுவின் உறுப்பினர்களாக இருந்த மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிபிசியிடம் பேசிய அந்த நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மைக்கேல் மக்குய் கூறினார்.
எனினும், தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று அவர் மேலும் கூறினார்.
சில தினங்களுக்கு முன்னர், தெற்கு சூடானின் துணை அதிபர் ரிக் மச்சார், அவரது மனைவி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images