கோவிட்-19: உலகை விளக்கும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், AFP

பட மூலாதாரம், EPA
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை மே 4ஆம் தேதி முதல் தளர்த்தப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவில் முடக்கநிலை தொடர்பாக என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், AFP

பட மூலாதாரம், EPA
கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்ச நிலையை பிரிட்டன் கடந்துவிட்டதாக அந்த நாட்டின் வாராந்திர தரவு சுட்டிக்காட்டுகிறது.
பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரம் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், “நாம் இன்னும் அபாயத்திலிருந்து மீளவில்லை. நாம் மென்மேலும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது” என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.


கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள உயர்நிலை பள்ளிகள், ஷாங்காய் நகரத்திலுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் பல வாரங்களுக்கு பிறகு இன்று மீண்டும் செயல்பட தொடங்கின.
கொரோனா வைரஸ் பரவலால் சீனா முழுவதும் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் இணையதளம் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வந்த சூழ்நிலையில், கடந்த மாதம் முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
கோவிட்-19 நோய்த்தொற்றின் முதலாவது மையப்புள்ளியாக விளங்கிய சீனாவின் வுஹான் நகரில் மே 6ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,34,549 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக 3,16,404 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரத்து 861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 கோடியே 33 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைப் பொறுத்தவரை, கடந்த 16ஆம் தேதி முதல் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
"ஊரடங்கு உத்தரவால் மேற்கு வங்க மாநில மக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த நெருக்கடி நிலையில் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்றும் அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிறகு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு மாத இடைவேளைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பணிக்கு திரும்பினார்.
ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பிறகு கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் பிரிட்டனில் நோய்த்தொற்று பாதிப்பை உறுதிசெய்யும் பரிசோதனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், போரிஸ் ஜான்சன் பணிக்கு திரும்பியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலின் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் பணப்புழக்க அழுத்த நிலையை தடுப்பதற்காக 50,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி உதவியை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
புனித ரமலான் மாதத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் தளர்வுகளை மேற்கொள்வது ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள நாட்டின் சுகாதார கட்டமைப்பை கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு மருத்துவர்கள் வலியுறுத்தியதை அடுத்து இந்த எச்சரிக்கையை அந்த நாட்டு அரசு விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 12,500க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,018 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தில் இதே நாளில் பதிவான நோய்த்தொற்றை விட குறைவு.
ஜெர்மனியில் இதுவரை 1,55,193 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; 5,750 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் அமலில் உள்ள முடக்க நிலையில் கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வரும் அனைத்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை என்று ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கூட்டத்திற்கு முன்னதாகவே கேரளாவின் பரிந்துரைகள் எழுத்து வடிவில் பிரதமருக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட தீவு நாடான சிங்கப்பூர், தற்போது ஆசியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் தொடக்கக் கட்டத்தில் முன்மாதிரி நாடாக கருதப்பட்ட சிங்கப்பூரில் தற்போது கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம், 100 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்து ஆசிய கண்டத்தில் அதிகபட்ச நோய்த்தொற்றுகளை கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது.
சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மத்தியில் நோய்த்தொற்று பரவுவது கண்டறியப்பட்ட உடன் அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கப்பூர் அரசு கூறுகிறது
குறிப்பாக சிங்கப்பூரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுள்ள தெற்காசியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் விடுதிகளில் இந்த நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூரில் புதிதாக 931 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள். அதில் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்கள் வெறும் 15 பேர் மட்டுமே.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 48 பேர் இறந்துள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மஹராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8068-ஆக அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பல்கேரியா நாடு கொரோனா தொற்று சமயத்தில் மக்களைக் கண்காணிக்க ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்தும் சோதனையை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.
சோஃபியாவில் வாழும் 50 பேருக்கு இந்த கருவி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடமாட்டம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பல நாடுகள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மக்கள் வீட்டில் இருக்கின்றனரா, ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கின்றனரா எனக் கண்காணிக்கும் சோதனையை நடத்தி வருகின்றன.

பட மூலாதாரம், COMARCH
கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடு தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவில் முடக்கநிலை அமலில் இருந்து வருகிறது. முதலில் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
முதல்முறையாக நாட்டில் முடக்கநிலை அமல்படுத்துவதற்கு முன்னதாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 20-ஆம் தேதியன்று ஆலோசனை நடத்தினார்.
அதேபோல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தான் நடத்திய ஆலசோனை கூட்டத்தில், அனைத்து மாநிலங்களும் முடக்கநிலை அமல்படுத்துவதற்கு அளித்த ஒத்துழைப்புக்கு மோதி நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மார்ச் 24 முதல் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது சில இடங்களில் படிப்படியாக தளர்த்துவதா போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஞாயிற்றுகிழமை மாலை 5 மணி நிலவரப்படி 26917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 20177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படுகிறது.
7 வாரங்களுக்கு பிறகு, வரும் மே 4ஆம் தேதி முதல் இத்தாலியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க முகக்கவசங்களோடு சிறு குழுக்களாக செல்லலாம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
பூங்காக்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று இத்தாலியில் 260 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில், கடந்த மார்ச் 14-க்கு பிறகு, இது தான் அந்நாட்டில் ஒருநாளில் நிகழ்ந்த குறைந்த அளவு மரணங்களாகும்.
இத்தாலியில் இதுவரை 26, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலியில் தான் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.
தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.