கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்; மோதியை பாராட்டிய பில்கேட்ஸ், தமிழக செய்திகள் என்ன?

பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக (நெகடிவ்) மாறியது அமெரிக்க பெட்ரோலிய எண்ணெய் விலை.

    இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்திய மாநிலங்கள் இரண்டு நாட்களுக்கு ராபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பற்றோருக்கான நல உதவிகள் கேட்டு 517,000 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார்.

    கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிவரும் இந்த சூழலில் கடுமையான பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐ. நாவின் உலக உணவு திட்டப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பிறகு அடுத்த வாரத்திலிருந்து ஊரடங்கு உத்தரவை தளர்த்த இருப்பதாக நியூசிலாந்து அரசு நேற்று அறிவித்தது.

  2. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்திதான் தொடர்ந்து இணைந்திருங்கள்.