கொரோனா வைரஸ் : தி.மு.கவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 581,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கென்யாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஈஸ்டர் கொண்டாட்டம், பலர் கைது

    கென்யாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஈஸ்டர் கொண்டாட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    கென்யாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி பலர் ஈஸ்டர் விடுமுறையைக் கொண்டாட பார்களில் கூட்டமாகக் கூடி மது அருந்தினர்.

    இதனால் அங்குக் காவல் துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். கைதானவர்களில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நீதிபதி ஒருவரும் அடங்குவர்.

    கென்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை காத்திருக்கிறது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

  2. ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தலாம்

    ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தலாம்

    பட மூலாதாரம், Getty Images

    ஆப்கானிஸ்தானில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், உலகளவில் கொரோனாவால் பேரழிவை சந்திக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

    போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானில் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாததால், 80திற்கும் மேற்பட்ட ஆஃப்கன் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    தொண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் பல நெருக்கடிகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியாமல் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுவரை கொரோனா பரிசோதனைகள் மிக குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாலிபான்களின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆஃப்கன் மக்கள் தொகையில் சரிபாதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்பதால், அங்கு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. சமீபத்தில் இரானிலிருந்து வெளியேற்றப்பட்ட 1000 பேர் ஆஃப்கனில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். ஆனால் அவர்களுக்கு கொரோனா குறித்த பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  3. இந்திய பிரதமர் நரேந்திர மோதி முழு உரை

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோதி உரையாற்ற தொடங்கினார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி முழு உரையையும் படிக்க. இங்கே கிளிக் செய்யவும்

  4. இந்திய பிரதமர் நரேந்திர மோதி: மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

    மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மோதி தெரிவித்தார்.

  5. கொரோனா சர்வதேச நிலவரம் என்ன?

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

    உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 581,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

    கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல ஏறுமுகம் காணுகிறது.

    சீனாவில் ஒருகட்டத்தில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாகப் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதற்கு முந்தைய தினம் இது 108 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைதான் கடந்த ஐந்து வாரங்களின் அதிகம்.

    சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவர்கள் என்கிறது அந்நாட்டு சுகாதாரத் துறை.

    புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 89 பேரில் 86 பேர் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்கிறது சீனா.

    சரி சர்வதேச அளவில் கொரோனா தொடர்பாக நடந்த பிற செய்திகளை இங்கே காண்போம்.

    • நியூயார்க்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தை கடந்தபோதிலும், முடக்கப்பட்ட நகரங்களை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கத் துவங்கியுள்ளது அந்நாடு.
    • நியூயார்க, நியூ ஜெர்ஸி உள்ளிட்ட ஆறு அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்கள் முடக்க நிலையைத் திரும்பிப் பெறுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இந்தோனீசிய கிராமத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரங்களில் தன்னார்வலர்கள் சிலர் பேய் போல உடை அணிந்து பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்தோனேசீயாவின் ஜாவா தீ வில் தன்னார்வலர்கள் சிலர் இரவு நேரத்திலும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
    • பிரிட்டனில் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள தொடக்கநிலையை இந்த வாரம் திரும்பப் பெறுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாகப் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், முடக்க நிலை வைரசை கட்டுப்படுத்த உதவியுள்ளது. ஆனால் வைரஸ் பரவும் எண்ணிக்கையில் முழுமையாகச் சரிவு ஏற்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
    • கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் தொடக்கநிலையை படிப்படியாகக் குறைத்து வருகின்றனர். அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு நிற்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் சடலத்தை புதைக்க அனுமதிக்காமல் எகிப்தில் நைல் நதிக்கரைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் தடை கோரினர். கொரோனாவால் உயிரிழப்போரின் சடலத்தை புதைத்தால் அந்த கிராமம் முழுவதும் தொற்று பரவும் என அவர்கள் நம்பினார்கள். சடலங்களை புதைக்க மறுத்த குற்றத்திற்காக 23 பேரை எகிப்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அந்நாட்டு பிரதமர் ''அவமதிக்க தக்க இழிவான'' சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.
    • கனடாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பாதி பேர் முதியோர் காப்பகங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000த்தை நெருங்கியுள்ளது.
    • வடக்கு நெதர்லாந்தில் உள்ள தீ அணைப்பு வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை 137 தீ அணைப்பு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.
  6. காலை 10 மணிக்கு இந்திய பிரதமர் மோதி உரை

    காலை 10 மணிக்கு இந்திய பிரதமர் மோதி உரை

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதிலும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (ஏப்ரல் 14), முடிவடையும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஏப்ரல் 14) காலை 10 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அண்மையில் அதிகரித்த வண்ணமுள்ளது.

    நேற்று மாலை வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9,352-ஆக உயர்ந்த நிலையில், உயிரிழப்பு 308-ஆக அதிகரித்தது.

    விரிவாகப் படிக்க:

  7. இந்திய பொருளாதாரம்: 8 லட்சம் கோடி வரை இழப்பு

    இந்திய பொருளாதாரம்: 8 லட்சம் கோடி வரை இழப்பு

    பட மூலாதாரம், Getty Images

    தேசிய ஊரடங்கு மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு ரூ.7 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை பாதிப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. விமானம், கப்பல், ரயில், பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. மருந்து, மளிகை, காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வங்கிகள், முக்கிய அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. தேசிய ஊரடங்கால் நாட்டில் 70 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. ஏற்றுமதி முதலீடு முற்றிலும் தடைப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

    இந்த 21 நாள் தேசிய ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ரூ.7 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்யூட் மதிப்பீடு மற்றும் ஆய்வு நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவில், ஊரடங்கால் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக ரூ.35,000 கோடி அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த முழு அடைப்பால் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், கட்டுமான தொழில்கள், சிறு தொழில்களை நம்பி இருப்போர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-21 நிதியாண்டில் 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை இருக்கும் என்று உலக வங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது கடந்த 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதமாகும்.

    - இவ்வாறு அந்நாளிதழ் விவரிக்கிறது.

  8. கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்க வரை நடப்பது என்ன? சில தகவல்கள், உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது.

    கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்க வரை நடப்பது என்ன?  சில தகவல்கள்

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனாதொடர்பாகசர்வதேச அளவில் அண்மையில் நடந்த அனைத்து தகவல்களையும் இங்கே தொகுத்துள்ளோம்.

    விரிவாகப் படிக்க இங்கேக்ளிக்செய்யுங்கள்:

  9. நேற்றைய முக்கிய தகவல்கள்

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்காவில்கொரோனாவைரஸின்பாதிப்பு ‘உச்ச நிலையை நெருங்கி வருவதாக’ அந்த நாட்டின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் நோய்த்தடுப்பு மையத்தின் இயக்குநர் ராபர்ட்ரெட்பீல்டு,அமெரிக்கதொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,கொரோனாவைரஸ்பாதிப்பு அந்த நாடு முழுவதும் ‘நிலைப்பட்டு வருவதாக’ கூறியுள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில்கொரோனாவைரஸ்பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைபத்தாயிரத்தைகடந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் நியூயார்க்கில் 671 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் ஆண்ட்ரூகியூமோதெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவில்கொரோனாவைரஸ்பாதிப்பு இன்று புதியஉச்சத்தைத்தொட்டுள்ள நிலையில், நாட்டில் நிலைமை மோசமாகி வருவதாக அதிபர்விளாடிமிர்புதின்தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெல்ஜியத்தில்கொரோனாவைரஸ்பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,903ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 303 பேர் உயிரிழந்துள்ளனர்.

  10. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே,

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    கொரோனா தொடர்பாக சர்வதேச அளவில் நடக்கும் அனைத்து தகவல்களையும் நேரலையாக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றை நேரலை தொடங்குகிறது.

    நேற்றைய தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்