கொரோனா வைரஸ்: இந்தியாவில் 200-ஐ தாண்டியது உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று தாக்கியவர்கள் எண்ணிக்கை 16,00,427 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா வைரஸ் சிகிச்சை

    கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.

    கொரோனா வைரஸ் சிகிச்சை

    பட மூலாதாரம், Getty Images

  2. பாதிப்பு எண்ணிக்கை - புதிய உச்சம்

    உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

    அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி வெள்ளி காலை 7.02 மணி நிலவரப்படி 16,00,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    இவர்களில் கால் பங்கிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 4,65,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  3. ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 50 லட்சம் கோடி நிவாரணத் தொகை அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு 500 பில்லியன் யூரோ (சுமார் 41 லட்சம் கோடி இந்திய ரூபாய்) நிவாரணத் தொகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.

    ப்ரசெல்ஸில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்தைகளின் முடிவில், யூரோ க்ரூப்பின் தலைவர் மரியோ சென்டனொ இதனை அறிவித்தார்.

    எனினும் இத்தொகை ஐரோப்பிய மத்திய வங்கி கேட்டதைவிட குறைந்த தொகையே ஆகும்.

    ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார திட்டம் இது என பிரான்ஸ் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ் நிதி அமைச்சர்

    பட மூலாதாரம், Getty Images

  4. தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?

    தமிழ்நாட்டில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 96 பேரில் 84 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.

    மீதமுள்ள 12 பேரில் மூன்று பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள். 8 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மீதமுள்ள ஒருவர் மருத்துவர்.

    தனியார் மருத்துமனையில் பணியாற்றிவந்த இவருக்கு நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

  5. நேற்றைய நிலவரம் - சில முக்கிய செய்தித் துளிகள்

    • கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.
    • கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நாவின் ஆய்வறிக்கை கூறுகிறது.
    • தமிழ்நாட்டில், வியாழன்று மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.
    • கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு வியாழன் மாலை தெரிவித்துள்ளது.
    • வியாழன் மாலை வரை அவர்களில் 477 பேர் குணமடைந்துள்ளனர், 169 பேர் இறந்துள்ளனர்.
    • மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • சீனாவுக்கு பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    coronavirus news
  6. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் உலகளாவிய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நேற்றுவரை நடந்தவற்றின் செய்திகளைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.