ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல் மாநிலம் ஒடிஷா.
ஏப்ரல் 30ஆம் தேதிவரை ரயில் மற்றும் விமான சேவைகளை இயக்க வேண்டாம் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
ஒடிஷாவில் கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.