கொரோனா வைரஸ்: ‘’கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்’’ - மும்பையில் மக்களுக்கு உத்தரவு

உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,000 லட்சத்தை கடந்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்?

    இப்போதிருந்து 6 மாதத்தில், ஓராண்டில், 10 ஆண்டுகளில் நாம் எங்கே இருப்போம்?

    அன்புக்குரியவர்களுக்கு, பலவீனமான நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?

    கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்?

    பட மூலாதாரம், Getty Images

  2. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5000-ஐ கடந்தது

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

    இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 149 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள் எவை தெரியுமா?

    உலகமே கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கோவிட்-19 தொற்றை எதிர்கொண்டுள்ள நிலையில் சில பிராந்தியங்களுக்குள் இன்னும் கொரோனா வைரஸ் நுழையவே இல்லை என்று அவற்றின் அரசுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவை எந்தப் பிராந்தியங்கள் என்று தெரிவிக்கிறது இந்தக் காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  4. இலங்கை கொரோனா பாதிப்பு நிலவரம்

    உயிரிழப்பு : 06

    பாதிக்கப்பட்டோர் : 185

    குணமடைந்தோர் : 42

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் : 137

    மருத்துவமனையில் கண்காணிக்கப்படுவோர் : 255

  5. மருத்துவர்களை கைது செய்த பாகிஸ்தான்

    கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது போதிய பாதுகாப்பு கருவிகள் இல்லை என்று குவெட்டா நகரில் போராடிய 50கும் மேலான மருத்துவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

    அவர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்டவை கிடைக்கும் வரை காவலில் இருந்து வெளியேறப்போவதில்லை என்று அந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    3,800க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடாக உள்ளது.

  6. இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா?

    இந்தியாவில் சரிபாதிக்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் விவசாயத்தில் இருந்து வருகிறது. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, காய்கறி, பால் ஆகியவற்றை உலகில் அதிக அளவு உற்பத்தி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    இப்போது வேளாண் நடவடிக்கைகளை நிறுத்துவது விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கும் என்பதைத் தாண்டி உணவுப் பாதுகாப்பையே இது பாதிக்கும் என்ற அபாயம் இருக்கிறது.

  7. தமிழ்நாட்டில் 66,431 பேர் வீட்டுக் கண்காணிப்பின் கீழ்

    தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 66431 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    253 பேர் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். 27, 416 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை முடித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே 17 கொரோனா தொற்று ஆய்வகங்கள் உள்ள நிலையில், மேலும் 2 ஆய்கவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5305 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

  8. அனுமதி திடீர் ரத்து - காரணம் என்ன?

    கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த 13 வகையான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு நேற்று மாலையில் அனுமதி அளித்திருந்த தமிழக அரசு, தற்போது அந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா நோய் தொற்று காரணமாக, தொடர்ச்சியான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

  9. இலங்கைக்கு மருந்து அனுப்பிய இந்தியா

    இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்கு பத்து டன் மருந்தை அனுப்பி வைத்துள்ளது இந்தியா.

    இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் இந்த மருந்து வகைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

  10. அமெரிக்காவில் 1731 பேர் பலி

    நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 731 பேர் பலியாகி உள்ளனர். இவ்வளவு மரணங்கள் ஒரே நாளில் பதிவாவது நியூயார்க்கில் இதுவே முதல்முறை.

    நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,489. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 12,722 பேர் உயிரிழந்து உள்ளனர்; 398,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1736 பேர் இறந்துள்ளனர். அங்கு கோவிட்-19 காரணமாக ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

    New York

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, சிறைகளில் நெரிசலை குறைக்க நியூ யார்க் நகரில் 1100க்கும் மேலான கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  11. கொரோனா: அரபு நாடுகளில் என்ன நிலவரம்?

    இந்திய மற்றும் இலங்கை தொழிலாளர்கள் கணிசமான அளவு பணியாற்றும் சௌதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்றின் நிலை என்ன என்பதை விளக்கும் பிபிசி தமிழின் சிறப்புக் காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  12. காணொளிகளை தடை செய்யும் யூடியூப்

    கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம்.

    அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது.

    கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது.

    இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது.

    இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த காணொளியை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து காணொளிகளையும் நீக்குகிறது.

    கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப்

    பட மூலாதாரம், Getty Images

  13. 10,000 பேர் இறந்த மூன்றாவது நாடு

    கோவிட்-19 தொற்றின் காரணமாக 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ். அங்கு மார்ச் 1ஆம் தேதி முதல் இதுவரை 10,328 பேர் இறந்துள்ளனர்.

    மார்ச் 15 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு முடக்கநிலை அமலில் உள்ளது.

  14. வுஹான் நகர மக்களுக்கு புதிய அனுமதி

    கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தொற்று இல்லை என்று, சீன அரசின் செல்பேசி செயலி மூலம், உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வெளியூர் செல்லலாம்.

    திங்களன்று கொரோனா காரணமாக எந்த மரணமும் நிகழவில்லை என்று செவ்வாயன்று சீன அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஜனவரி 23ஆம் தேதிக்கு பிறகு அந்நகரவாசிகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

    சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடந்த வாரம் அங்கு தொடங்கியது.

    ஹூபே மாகாணத்தில் உள்ள, 1.1 கோடி மக்கள்தொகை இந்த நகரம்தான் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய இடமாக கருதப்படுகிறது.

    Coronavirus: People of Wuhan allowed to leave after lockdown

    பட மூலாதாரம், AFP

  15. வணக்கம் நேயர்களே!

    வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் உலகளாவிய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நேற்றுவரை நடந்தவற்றின் செய்திகளைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.