கொரோனா வைரஸ்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

ஊரடங்கு தற்போது நடைமுறையில் இருப்பதால், தோட்டக்கலைத் துறையின் 500 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தாராவியில் மேலும் இருவருக்கு பாதிப்பு

    மும்பையில் உள்ள தாராவி பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தாராவியின் பளிகா பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வேறு யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தாராவியில் மட்டும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. மருத்துவமனைகள் முடக்கம்

    இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய நகரங்களில் இருக்கும் மூன்று மருத்துவமனைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

    மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதால் தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மருத்துவமனைகள் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த மருத்துவமனைகளில் சில நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மருத்துவமனையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மும்பையில் உள்ள ஜாஸ்லோக் மருத்துவமனையில் சுமார் 10திற்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வோக்ஹார்ட் என்ற மருத்துவமனையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    டெல்லியில் மாநில புற்றுநோய் மையத்தில் பணியுரியும் 50 மருத்துவ ஊழியர்களை தங்களை தானே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவர்கள், செலிவியர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  3. தமிழகத்தில் ஒரு மாதத்தில் நடந்த மாற்றங்கள் என்னென்ன?

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுஇருப்பதுமார்ச் 7ம் தேதி முதன்முதலில் தெரியவந்தது. அப்போது ஒரே ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது ஒரு மாதம் ஆகிறது. இதுவரை621 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  4. இந்தியா முழுவதும் சிகிச்சையில் 3,981 பேர்

    செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 4,421 என்று ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

    அவர்களில் 325 பேர் குணமடைந்துள்ளவர்கள் மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளவர்களும் அடக்கம்.

    இதுவரை 114 பேர் இறந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 3,981.

    மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று மாநிலங்களாக உள்ளன.

  5. அழுகிய பிணங்கள் சாலையில் வீசப்படும் அவலம்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  6. தன்னைத் தானே 'முட்டாள்' என்று கூறிய அமைச்சர்

    சுமார் இரண்டு வார காலமாக முடக்கநிலையில் இருக்கும் நியூசிலாந்தில் நேற்று 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த இரண்டு வாரங்களில் இதுதான் குறைவான எண்ணிக்கையாகும்.

    முடக்கநிலை அமலில் உள்ளபோது 12 மைல் தூரம் வேன் ஓட்டி, தன் குடும்பத்தினருடன் கடற்கரை சென்ற நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் டேவிட் கிளார்க், விதிகளை மீறியதற்காக தன்னைத் தானே முட்டாள் என்று கூறியுள்ளார்.

    அவர் பதவி விலக முன்வந்தாலும், நடப்பு அவசர நிலை கருதி பதவியில் நீடிக்கிறார்.

    New Zealand's health minister

    பட மூலாதாரம், Getty Images

  7. மரணம் நிகழாத முதல் நாள்

    கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் நேற்று எந்த உயிரிழப்பும் நிகழவில்லை.

    ஜனவரி மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கோவிட்-19 தொற்றால் உண்டான மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிடத் தொடங்கியது முதல், கொரோனா வைரஸ் காரணமாக மரணம் நிகழாத முதல் நாளாக நேற்று (திங்கள்கிழமை) உள்ளது என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

    நேற்று சீனாவில் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 32 பேரும் வெளிநாடுகளில் இருந்து அங்கு வந்தவர்கள்.

    கொரோனா வைரஸால் 81,740 பேர் பாதிக்கப்பட்ட சீனாவில் 3,300க்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

    Coronavirus: China

    பட மூலாதாரம், Getty Images

  8. தினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரிக்கும் தமிழ் பெண்கள்

    கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளின் இயக்கமின்றி அமைதி நிலவுகிறது.

    ஆனால், எல்லா மாவட்டங்களிலும் பகலிலும், இரவிலும் தையல் இயந்திரங்களில் வேலைசெய்யும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்ன தைக்கப்படுகிறது. யார் தைக்கிறார்கள்?

  9. பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை

    கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    Coronavirus: Boris Johnson moved to intensive care

    பட மூலாதாரம், Reuters

  10. தமிழகத்தில் தற்போதைய நிலவரம்

    தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது திங்களன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.

    கொரோனா வைரஸ், கோவிட்-19 நோய்த்தொற்று
  11. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் உலகளாவிய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நேற்றுவரை நடந்தவற்றின் செய்திகளைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.