You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; பிரிட்டனில் மேலும் 600 பேர் உயிரிழப்பு

சர்வதேச அளவில் கொரோனாவால் இதுவரை 1,202,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,753 பேர் மரணம் அடைந்துள்ளனர். 246,457 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பிரிட்டனில் ஒன்பது நாட்களில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை

    கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க ஒன்பதே நாட்களில் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி இருக்கிறது பிரிட்டன்.

    சீனா கட்டிய மருத்துவமனை போல அல்ல இது. கிழக்கு லண்டனில் மாநாடுகள், கண்காட்சிகள் நடக்கும் எக்செல் கண்காட்சி மையத்தைத் தற்காலிக மருத்துவமனையாக மாற்றி உள்ளது பிரிட்டன் அரசு.

    இந்த மருத்துவமனையில் நான்காயிரம் படுக்கை வசதிகள் இருக்கும். 87, 328 சதுரடி கொண்ட இந்த மருத்துவமையை உருவாக்க 9 நாட்கள் ஆகி இருக்கிறது. இங்கு 80 வார்டுகள் உள்ளன். ஒவ்வொரு வார்டிலும் 42 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  2. கொரோனா வைரஸ் தொற்று உடைய தப்லிகி ஜமாத்தை சேர்ந்த ஒருவர் போலீஸ் மீது எச்சில் துப்பினாரா? #BBCFactCheck

    மார்ச் மாதத்தில் டெல்லியில் தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

    இந்த தொற்று காரணமாக இறந்த 56 பேரில், 15 பேர் தப்லிகி ஜமாத்துடன் இணைந்தவர்கள். கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2000 பேருடன் 400 பேர் தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடையவர்கள்.

    ஆனால் இந்த விவகாரம் வெளிவந்த பிறகு, சமூக ஊடகங்களில் மேலும் பல கருத்துகள் வெளியாகின்றன.

    விரிவாகப் படிக்க:

  3. கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?, வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?

    கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

    விரிவாகப் படிக்க: