கொரோனா குறித்த பிபிசி செய்திகளை எப்படி படிப்பது?
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது. நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிகச் செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களை ‘தியாகிகள்’ பட்டியலில் சேர்த்துள்ளது சீனா.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது. நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிகச் செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரை அலசுகிறது.
எகிப்தின் அதிபர் அப்துல் ஃபதா அல்சீசியின் மாளிகையை கோவிட்-19 நோயாளிகளை தனிமை படுத்தும் இடமாக மாற்ற வேண்டும் என ட்விட்டரில் கேட்கும் எகிப்து மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
பல மில்லியன் டாலர்களுக்கு பல மாளிகைகளை கட்டியிருக்கிறார் என சீசியின் மீது குற்றசாட்டு ஏற்கனவே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டவர் யாரையேனும் சாலையில் சந்தித்துள்ளோமா என அறியும் புதிய செயலியை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
சமஸ்கிருத மொழியில் 'உடல்நலத்திற்கான பாலம்' எனப்படும் 'ஆரோக்கிய சேது' என்னும் பெயர் கொண்டஇந்த செயலி, ப்ளூடூத் மற்று லொகேஷனை வைத்து நம் அருகில் இருக்கும் நபர் கோவிட்-19 தொற்று உள்ளவரா இல்லையா என்பதை கண்டறியும்.
நோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபரிடமிருந்து 6 அடி தொலைவில் உள்ளனரா என ஆராயும்.
இதை பயன்படுத்துபவருக்கு தொற்று பரவியிருந்தால் அல்லது அருகில் இருக்கும் யாருக்காவது தொற்று இருந்தால் அவர்களைப் பற்றிய தகவலை இந்த செயலி அரசுக்கு தெரியப்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 126 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 251 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த நபர் தங்கியிருந்த மருதானை பகுதியிலுள்ள ஒரு வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 208 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,116ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த 122 பேர் இன்று வீடு திரும்பினர். மலேசியாவில் குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 767ஆக அதிகரித்துள்ளது

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களை ‘தியாகிகள்’ பட்டியலில் சேர்த்துள்ளது சீனா.
அதில் கொரோனா தொற்று குறித்து முதன்முதலில் தெரிவித்த மருத்துவர் லீ வென்லியாங்கின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்னதாக அவர் வுஹானில் உள்ள சக மருத்துவர்களை இந்த கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்தார்.
அதன்பிறகு அவர் சர்வதேச கவனத்தை பெற்றார். ஆனால் அவர் ‘வதந்திகளை’ பரப்புவதாக சீன போலீஸாரால் எச்சரிக்கப்பட்டார். அதன்பிறகு அவரும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
நாளை முதல் தாய்லாந்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இரவு பத்து மணி முதல் காலை 4 மணி வரை இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு, கொரோனா தொற்று பரவலை தடுக்க அந்த நாடு எடுத்து வரும் சமீபத்திய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சுதந்திரத்தைக்காட்டிலும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் தெரிவித்துள்ளார்.
"நாம் முன்பைப் போல் வசதியாக உணராமல் இருக்கலாம். ஆனால் உயிர் பிழைப்பதற்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்க நமக்கு சமூக பொறுப்புணர்வு வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார் என்கிறது ராய்ர்ட்டர்ஸ் செய்தி முகமை.
செக் குடியரசு மற்றும் ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஆனால் அதுவே பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முகக்கவசம் அணியாமல் நடப்பது என்பது பெரிய தவறாக கருதப்படுவதில்லை.
டெல்லி மற்றும் இந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான மசூதி நிகழ்வு என்று இந்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு கூறும் தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் சுற்றுலா விசாவை ரத்து செய்வதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் விதிகளை மீறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பல விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்துக்கு பல வழித்தடங்களில் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4-11 தேதிகளில் 17 சர்வதேச விமானங்களை அந்த நிறுவனம் இயக்கவுள்ளது. அந்த விமானங்கள், இஸ்லாமாபாத்திலிருந்து லண்டன், மான்செஸ்டர், பர்மிங்காம் மற்றும் டொரண்டோ ஆகிய இடங்களுக்கு செல்லும் என பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் பிபிசி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் செய்தியாளர் சிகந்தர் கெமேனியிடம் உறுதிப்படுத்தியது.
தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இன்று இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
அவரின் உரை, ரஷ்ய தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு செய்யப்படும். அவரின் கடந்த வார உரையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஒரு வாரம் பணி ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ரஷ்யாவில் நேற்று 771 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,548 ஆக உயர்ந்துள்ளது.
சிலர் நாட்டில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாக அஞ்சுகின்றனர். கொரோனா தொற்று நெருக்கடியால் புதின் வீட்டிலிருந்தே பணிபுரிவதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
மாஸ்கோ மருத்துவமனையில் புதின் சந்தித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் புதினுக்கு கொரோனா தொற்று இல்லை.
“நிஜாமுதீனில் மதக் கூட்டம் நடந்த மசூதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2346 பேரில் 1810 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 536 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2346 பேரிடமும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்,” என டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், “டெல்லியில் தற்போது 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 108 பேர் நிஜாமுதின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். நிஜாமுதீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவர் உட்பட 4 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கியூபாவின் சுகாதார அமைப்பு குறித்து நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருக்கக்கூடும்.
அதுமட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் அந்நாட்டில், மக்கள்தொகை உடனான மருத்துவர்களின் விகிதம் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கியூபாவின் மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுவது குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில் அவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு சென்றனர்.
தங்கள் நாட்டிலும் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அங்கு 30,000 மருத்துவ மாணவர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது வெளிநாட்டினருடன் தொடர்பு வைத்திருந்தார்களா என்பதையும் கேட்டறிகின்றனர்.
இந்த மாணவர்கள் மீண்டும் மீண்டும் இந்த பணியை நாடு முழுவதும் தொடர்ந்து செய்கின்றனர்.
அதில் சிலர் நாள் ஒன்றுக்கு 300 குடும்பங்களை சந்திக்கின்றனர் என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை. இதுவரை கியூபாவில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP
அடுத்த சில வாரங்களில் கொரோனா தொடர்பான சோதனைகள், தொற்று இருப்பவர்களைக் கண்டறிவது, பாதிக்கப்படவர்களை தனிமைப்படுத்துவது, பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் இருப்பவர்களை தனிமைப்படுத்துவது ஆகியவற்றின் மேல் அரசின் கவனம் இருக்கும் என முதல்வர்களுடனான சந்திப்பில் கூறினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
மேலும் அவசியமான மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்து, மருத்துவ கருவிகள் ஆகியவை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் போன்றவை போதியளவு கிடைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் பிரதமர் மோதி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கிரீஸில் உள்ள குடியேறிகள் முகாமில், தஞ்சம் கோரும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த முகாமை சேர்ந்த பெண் ஒருவர் ஏதேன்ஸில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்நாட்டில் குடியேறி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை. அதன்பிறகு அந்த முகாமில் உள்ளவர்களை சோதனை செய்ய அதிகாரிகள் தொடங்கினர்.
ஏதேன்ஸிற்கு அருகில் உள்ள அந்த முகாமில் சுமார் 2500 பேர் வசிக்கின்றனர். தற்போது அந்த முகாம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சிப்போருக்கு நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. ஆனால் அங்குள்ள முகாம்கள் எப்போதும் அதிக கூட்ட நெரிசலுடன் காணப்படும்.
கோவிட்-19 காரணமாக நாட்டில் நிலவும் சூழல் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களையும் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோதி.
இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பிரதமருடன் இருந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஸ்பெயினில் வேலையற்றவர்களுக்கான சலுகைகளை பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிகை அதிக அளவில் உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொடர்பு கொண்டுள்ளனர்.
சமூக பாதுகாப்பிற்காக பணம் செலுத்தும் ஊதியம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 9 லட்சம் அளவிற்கு குறைந்துள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள்தான் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஸ்பெயினில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 104,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,387 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.