பாஜக கூட்டணி எத்தனை இடங்களில் முன்னிலை?

பட மூலாதாரம், ANI
காலை 10.30 மணி நிலவரப்படி, டேட்டா நெட் வழங்கியுள்ள தகவலின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 299 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசின் ‘இந்தியா’ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 43 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி 36 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. பிகாரில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியில் 17 இடங்களிலும் ‘இந்தியா’ கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி, 542 தொகுதிகளில் 457 தொகுதிகளுக்கான ஆரம்பகட்ட முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. அதில், பாஜக 209 இடங்களிலும் காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
சமாஜ்வாதி கட்சி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் 80 இடங்களில் 79 தொகுதிகளுக்கான முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன. இவற்றில், பாஜக 40 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
குஜராத் மாநிலத்தில் பாஜக 25 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.






