சென்னை மழையால் நீர் சூழ்ந்து காணப்படும் சாலைகள் - புகைப்படத் தொகுப்பு

சென்னை மழை
படக்குறிப்பு, சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் ஜி.பி. சாலை, புளியந்தோப்பு போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கிறது.
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் 72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கனமழை நவம்பர் 1ஆம் தேதியன்று பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி மாலை முதல் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னை மழை
படக்குறிப்பு, சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மழை
படக்குறிப்பு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு
சென்னை மழை
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வரும் 6-ஆம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மழை
படக்குறிப்பு, அதிகமாக மழைபெய்திருக்கும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை மழை
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஆவடியில் 17 செ.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னை மழை
படக்குறிப்பு, வடகிழக்கு பருவமழையையொட்டி அரக்கோணம், சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை மழை
படக்குறிப்பு, புதுப்பேட்டையின் முக்கிய சாலைகளில் நீர் தேங்கவில்லை என்றாலும் பக்கச் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கியிருக்கிறது.
சென்னை மழை
படக்குறிப்பு, சென்னை முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் மழையால் மரங்கள் சாய்ந்தன. அவை இயந்திரங்கள் மூலம் அறுத்து அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னை மழை
படக்குறிப்பு, சென்னையைப் பொறுத்தவரை நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது. எனினும் பெரும்பாலான முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை.
Banner
காணொளிக் குறிப்பு, சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: