பூஜா: 9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி - மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பூஜா - மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். நம்பிக்கை இழந்து குடும்பம் தேடுதலை நிறுத்திய பிறகும் மீண்டு வந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் இந்த சிறுமி. 9 ஆண்டுகளாக நடந்தது என்ன? எப்படி தப்பினார் இந்த சிறுமி?

அன்று தன் அப்பாவை பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்தார் பூஜா கௌட். ஆனால், வீட்டில் அப்பா இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியாது. இவர் காணாமல் போயிருந்த கால இடைவெளியில் காலமாகியிருந்தார் தந்தை.

2013ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பூஜா, காணாமல் போனார். தாய் தந்தையுடன் மும்பையில் வசித்து வந்த ஒன்றாம் வகுப்பு சிறுமி 'ஐஸ்கிரீம்' வாங்கித் தந்து கடத்தப்பட்டுள்ளார் என்று பின்நாட்களில் தெரியவந்தது.

ஏழு வயதில் 2013ஆம் ஆண்டு காணாமல் போனவர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, 16 வயதில் வீடு திரும்பியுள்ளார்.

இவரது தாயார், பூனம் கௌட், தனது மகளின் நினைவாக இரவு பகலாக அழுதுகொண்டே இருந்தார். ஆனால், திடீரென்று தன்மகள் திரும்பிவந்ததும் அந்த தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "என் மகள் கிடைப்பாள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், அவளது அப்பா இறந்த பிறகு நம்பிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டது. காரணம், அவளை தேட இனி யாரும் இல்லை.

ஆனால், இப்போது நடந்திருப்பது கடவுளின் கருணை. ஒருவேளை என் மனைவி தனியா இருகிறாள், எனவே, என் மகளை அனுப்பி வை என்று அவர் மேலே போய் சண்டை போட்டிருப்பார் என்கிறார் தாயார் பூன.

பூஜா, அவரை கடத்தியவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடத்தில், 35 வயதான பிரமிளா தேவேந்திராவும் வேலை செய்து வந்தார். ஒரு நாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் இளமையில் கடத்தப்பட்டதாக பிரமிளாவிடம் சொன்னார் பூஜா.

பூஜாவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார் பிரமிளா தேவேந்திரா.

இதன் பிறகு என்ன நடந்தது?

இவர்கள் என் அம்மா-அப்பா இல்லை என்று முன்பே பூஜா சொல்வாள். இவர்கள்தான் என் பெற்றோர் என்று யூட்யூபில் ஒரு வீடியோவைக் காட்டினாள். எனக்கு தெரிந்த பெண் ஒருவரை அந்த இடத்துக்கு அனுப்பி, அவளது பெற்றோரின் செல்போன் நம்பர் வாங்க முயற்சி செய்டேன். ஒருவழியாக, ரஃபிக் என்பவருடைய எண்ணுக்கு லைன் கிடைத்தது. ரஃபீக்

பல வருடங்களாக, பூஜா குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர்.

9 ஆண்டுகள் என்ன நடந்தது?

தனக்கு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரித்தார் பூஜா. "அன்று, எனக்கு ஒருவர் ஐஸ்கிரீம் கொடுத்தார். பின்னர் பேருந்தில் ஏற்றிவிட்டார். நான் அழுதுகொண்டே இருந்தேன். மூன்று நாட்களில், என்னை கோவாவுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ராய்ச்சூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நான் சேர்க்கப்பட்டேன்.

ஆரம்பத்தில் நன்றாகவே இருந்தது. பின்னர், அவர்களுக்கு (சேர்க்கப்பட்ட இல்லம்) மகள் பிறந்ததும், நடத்தை மாறிவிட்டது. என்னை உருட்டுக் கட்டையால், காலால், சப்பாத்தி கட்டையால் அடிப்பார்கள். தலைமுடியை இழுத்து உருட்டுக் கட்டையால் அடிக்கும்போது முதுகில் இருந்து ரத்தம் வழியும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, பூஜாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தற்போது ஹாரி மற்றும் சோனி டிசூஸா என்பவர்கள் மீது மும்பை நகர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பூஜாவை தாக்கிய சோனி டிசூஸாவை கைதுசெய்யுமாறு பூஜாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், கடத்தியவர்கள் பூஜாவை எடுத்துச்சென்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். பின்னர் அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களின் நடத்தை மாறியதாக நினைக்கிறேன் என்கிறார் மூத்த காவல் ஆய்வாளர் மிலிந்த் குர்டே.

பூஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடந்துபோன 9 ஆண்டுகள் திரும்பி வராது. ஆனால் பிரமிளாவால் பூஜா மற்றும் அவரது தாயின் வாழ்க்கையை முற்றிலும் மாறியுள்ளது. இப்போது பூஜா தனது புதிய வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளார்.

தயாரிப்பு - கிஞ்சல் பாண்டியா-வாக்

படத்தொகுப்பு - அரவிந்த் பரேக்கர்

1px transparent line

கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும்

மனிதர்கள் இறப்பது ஏன்?

சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.

அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள

மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள

உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?

ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

1px transparent line

இந்த வீடியோவையும் பாருங்க

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: