You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்த வாரம் அய்மன் அல் ஜவாஹிரி, சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன், இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொடைக்கானல் காடுகள், பாரா பேட்மின்டன் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
அன்புச் செழியன் கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி?
சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஃபைனான்சியர்களின் மிக சக்தி வாய்ந்த நபராக அன்புச்செழியன் பார்க்கப்படுகிறார்.
அய்மன் அல் ஜவாஹிரி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர்.
எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர். மே 2011 இல் அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல்-காய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கப்பல்
யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவை அதிக கண்காணிப்பை மேற்கொள்ளத் தூண்டியிருக்கிறது. இந்த கப்பலின் வருகையானது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்திய ஊடகங்கள் மாத்திரமன்றி, தென் இந்திய அரசியல்வாதிகளும் கூறுகின்றனர்.
கொடைக்கானல் காடுகள் பசுமை பாலைவனமாகிறதா?
கொடைக்கானல் மலையிலுள்ள சோலைக் காடுகளில் இருந்து வைகை மட்டுமல்ல காவிரிக்கும் தண்ணீர் செல்கிறது என்பது நிறைய பேர் அறிந்திராத உண்மை.
18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அந்நிய ஆக்கிரமிப்பு மரங்கள், தற்போது 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
உத்வேகம் தரும் வீராங்கனை அமுதா
தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா இன்று பாரா பாட்மின்டன் போட்டி உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் ஒரு சர்வதேச வீராங்கனையாக இவர் மாறியது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்