BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
படக்குறிப்பு, ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
பிரசுரிக்கப்பட்டது

வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.

பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில், இந்த வாரம் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது, அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் இருந்த 46 சடலங்கள், கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் உள்ள தொடர்பு, கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான் ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

ஏக்நாத் ஷிண்டே பின்னணி என்ன?

ஏக்நாத் ஷிண்டே
படக்குறிப்பு, ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர மாநில அரசியலில் இப்போது மைய இடத்துக்கு வந்துள்ள ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சிவசேனை கட்சி எம்எல்ஏக்களை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும்வரை அந்த மாநிலத்தின் கேபினட் அமைச்சராக இருந்தார்.

மகாராஷ்டிரா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிராவின் கோப்ரி-பச்பகாடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், Alt News

படக்குறிப்பு, முகமது ஜுபைர்

Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்தனர்.

ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர் என்று ஆல்ட் நியூஸின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - என்ன நடந்தது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்

அமெரிக்க கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்

அமெரிக்கா

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.

ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளில் அவர்களைச் சந்தித்து, ஏற்றிச் செல்ல அடிக்கடி லாரிகளைப் பயன்படுத்துகின்றனர்.

கொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு?

ரத்த வங்கி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் ரத்த தானம் செய்துவந்த தன்னார்வலர்கள் பலர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், ரத்த வங்கிகளில் இந்த ஆண்டு ரத்த சேமிப்பு கணிசமாக குறைந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர்கள், முதலில் ரத்த தானம் செய்துவிட்டு, பின்னர் தடுப்பூசி போட்டுகொண்டால் ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை குறைக்கமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்.

சர்ஃபராஸ் கான்: டான் பிராட்மேனுடன் ஒப்பிடப்படும் மும்பை கிரிக்கெட் வீரர்

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்ஃபராஸ் கான்

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் பேட்டிங் செய்யும்போது, முடிந்தவரை அதிக ரன்கள் எடுப்பதே அவரது எண்ணமாக இருக்கும்.

இந்த 24 வயதான இளம் பேட்ஸ்மேன், முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக மும்பை 374 ரன்கள் என்ற ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.

காணொளிக் குறிப்பு, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்கருவிகள் தயாரிக்கும் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தினர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: