BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்த வாரம் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராடுவது ஏன், விஜய் இளைய தளபதியாகி தளபதியாக உயர்ந்த கதை , விஸ்வநாதன் ஆனந்த் பிரத்யேக பேட்டி, 10ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது, தாய்ப்பாலின் தூய்மை ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இளைஞர்கள் போராடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தார்.
இந்திய ராணுவத்தில் குறுகியகால, ஒப்பந்த முறை பணி நியமன திட்டமாக அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அரசு இந்த திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரு திட்டம் என தெரிவித்துள்ளது.
இந்த அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இளைஞர்கள் போராடுவது ஏன்? அரசு என்ன சொல்கிறது? விரிவாகப் பார்ப்போம்.
ஜோசஃப் விஜய் இளைய தளபதியாகி தளபதியாக உயர்ந்த கதை

பட மூலாதாரம், Sun pictures
நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்பது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய்தான், இன்றைய தளபதி விஜய்.
விஜய் குறித்து நீங்கள் அறிந்திராத பல தகவல்களை இங்கே அறியலாம்.
விஸ்வநாதன் ஆனந்த் பிரத்யேக பேட்டி

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவரது தொடக்க காலம் முதல் செஸ் ஒலிம்பியாட் வரை பல்வேறு விசயங்கள் தொடர்பாக பிபிசி தமிழ் செய்தியாளர் சரண்யா நாகராஜனிடம் பேசினார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.
விஸ்வநாதன் ஆனந்த் அளித்த பேட்டியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், "பத்தாம் வகுப்புத் தமிழ் மொழிப்பாடத்தில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை" என்ற விவரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திங்கள்கிழமையன்று வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
உண்மையில் பரிசுத்தமானதா தாய்ப்பால்?

பட மூலாதாரம், Daniel Garzon Herazo/NurPhoto via Getty Images
குழந்தைகள் முதன்முறையாக சாப்பிடும் தாய்ப்பாலில் என்ன இருக்கிறது? அதிலுள்ள ஆபத்துகள், உணவு தொடர்பாக குழந்தைகளுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?
குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். அதில் தண்ணீர், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், செரிமான நொதியான என்சைம்கள், ஹார்மோன்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்க: உண்மையில் பரிசுத்தமானதா தாய்ப்பால்? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















