You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்ஜெட் 2022-23: டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியே வெளியிடும் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்
2022-23ம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமான 10 அறிவிப்புகள்.
1. பண மேலாண்மையை சிறப்பாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் வகையில் பிளாக் செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் ரூபாய்களை வெளியிடும்.
2. வரும் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 80 லட்சம் குறைந்த விலை வீடுகள் 44 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்படும்.
3. 2022-23ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுகுறு தொழில்களும், அரசாங்கமும் இதில் இணைந்துகொள்ளும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
4. 75 மாவட்டங்களில் 75 டிஜிடல் வங்கிகள் உருவாக்கப்படும்.
5. இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி செல்பேசி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக, அலைக்கற்றை ஏலம் 2022இல் நடத்தப்படும்.
6. அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். 2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.
7. ஒன்றரை லட்சம் அஞ்சல் நிலையங்களும் கோர் பேங்கிங் முறையில் இணைக்கப்படும்.
8. வரும் நிதியாண்டி இ பாஸ்போர்ட் முறை அறிமுகம் செய்யப்படும்.
9. தனி நபர் வருமானவரி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வருவாய் வரம்பு மாற்றியமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், அது தொடர்பான அறிவிப்பு ஏதும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
10. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படும். இது மாநில அரசுகளைப் பங்காளியாக ஆக்கும். இது தற்போதுள்ள தொழில்துறை பகுதிகளை உள்ளடக்கும் மற்றும் ஏற்றுமதியின் போட்டித்தன்மையை அதிகரிக்கும்.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: