You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆற்று வெள்ளத்தால் தடைபடும் கல்லூரி மாணவரின் கல்வி
கன்னியாகுமரி மாவட்டம் மோதிரை மலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் கிருஷ்ணா. இவர் மார்தாண்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் ரப்பர் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஜய் குமார் கல்லூரிக்கு கோதையார் தரை பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
அப்போது அந்த தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் காலையில் கல்லூரிக்கு செல்லும் மாணவர் அஜய் கிருஷ்ணா மாலை தனது வீட்டிற்கு திரும்ப முடியாமல் ஆற்றின் மறு பக்கம் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் மழை பெய்தாலும், காற்றடித்தாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டும். இதனால் மலைவாழ் மக்கள் இக்கிராமத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்? - 'ஜெய் பீம்' மணிகண்டன் பேட்டி
- இலங்கையில் 'அரிசி, சீனிக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்' - எதிர்க்கட்சியினர் போராட்டம்
- "நாலு நாளாச்சு, யாரும் வரலை" - குமரியில் தீவாக மாறிய கிராமத்தின் கள நிலவரம்
- குழந்தைகள் ஆபாச காணொளி பகிர்ந்ததாக தமிழகத்தில் 6 பேர் உள்பட 31 பேர் மீது சிபிஐ வழக்கு
- ஸ்ரீரங்கம் கோயிலில் மோதியின் உரை: திமுக, பாஜக மோதலின் உண்மை பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்