ஆமதாபாதின் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சிக் காணொளி

பிரசுரிக்கப்பட்டது

ஃப்ளோரா அசோதியா, ஏழாம் வகுப்பு மாணவி. கலெக்டராக வேண்டும் என்பது இவரது கனவு.

"ஃப்ளோரா காந்திநகரைச் சேர்ந்தவர் மற்றும் மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த மாதம், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது. மேக்-ஏ-விஷ் அறக்கட்டளையிலிருந்து அந்த சிறுமி கலெக்டர் ஆக விரும்புகிறார் என்று எங்களுக்கு செய்தி வந்தது" என்று ஆமதாபாத் கலெக்டர் சந்தீப் சாங்லே கூறினார்.

உடனடியாக ஃபுளோராவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவரது கனவை நனவாக்க கலெக்டர் சந்தீப் சாங்லே விருப்பம் தெரிவித்தார். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஃபுளோராவின் நிலை மோசமடைந்ததால் பெற்றோர் தயங்கினர். பிறகு அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஃபுளோராவுக்கு ஆட்சியருக்கான பொறுப்புகளை சந்தீப் சாங்லே விளக்கினார். அடுத்த வாரம் அவரது பிறந்தநாள். அதை முன்கூட்டியே ஆட்சியர் அலுவலகத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

நெகிழ்ச்சிகரமான இந்த காணொளியை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :