கொரோனாவால் வேலையிழப்பு - ஸ்டூடியோவை இடியாப்பக் கடையாக மாற்றிய புகைப்பட கலைஞர்

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக அமல் படுத்தப்பட்ட காரணமாக பலருக்கு வேலையிழப்பு, தொழில் பாதிப்பு ஏற்பட்டு அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரானா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், கடலூர் புதுப்பாளையம் பகுதியில் 12 ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருபவர் சிவசங்கர். இவர் தற்போது கொரோனா ஊரடங்கால் ஸ்டுடியோ தொழிலில் வருமானம் இல்லாததால் மாற்றுத் தொழில் செய்ய முடிவு செய்து பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

சிவசங்கரின் மனைவி அளித்த ஒத்துழைப்பால் இடியாப்பம், கருப்பு இட்லி, வெண்ணபுட்டு, கொண்டகடலை எனப் பாரம்பரிய உணவுகளை வீட்டில் தயார் செய்து தான் நடத்தி வந்த ஸ்டுடியோவில் அவரது மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து வருகிறார்.

தற்போதுள்ள சூழலில், இதில் கிடைக்கும் வருமானம் அன்றாட குடும்பம் நடத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. வரும் நாட்களிலும் இந்த தொழிலைக் கைவிடாமல் மனைவி உதவியுடன் ஸ்டூடியோ வேலையுடன் சேர்ந்து இந்த தொழிலையும் செய்ய சிவசங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :