You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அரசு, தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்த சேலம் மாநகராட்சி
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக கடந்த இருபதாம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் வழிபாட்டுத் தலம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் ஏற்றிக் கொண்டு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் செல்லாமல் விதியை மீறி அதிக பயணிகளை ஏற்றி செல்வதாக அலுவலகர்களுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தரிதனர். அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி வந்த ஐந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.
பிற செய்திகள்:
- இந்தோனீசிய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலை காணவில்லை
- கொரோனா தடுப்பூசிய போட்டுக்கொண்டவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று தெரியுமா?
- சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் கோவிட் தொற்றால் மரணம்
- உயிர் காக்கும் ஆக்சிஜன் எப்படி உற்பத்தியாகிறது, விலை என்ன?
- "பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்" - ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்
- இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: