அதிமுகவுடன் அனுசரித்துப் போகிறாரா சசிகலா?

பிரசுரிக்கப்பட்டது

அதிமுகவுடன் சசிகலா அனுசரித்து செல்கிறாரா என்ற விவாதம், அதிமுகவினர் மத்தியிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் தீவிரமாக காணப்படுகிறது. பெங்களூரு சிறை தண்டனை காலத்தை நிறைவு செய்த பிறகு, சென்னை திரும்பிய அவர், பொது நிகழ்வுகளை தவிர்த்து வரும் நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக தொண்டர்களுக்காக அறிக்கை மூலம் பேசியிருக்கிறார்.

அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவோம் என அவர் அழைப்பு விடுப்பது, ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான அனுசரணையான போக்குக்கு அச்சாரமா, சசிகலாவை பல்வேறு கட்சி தலைவர்களும் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுமா போன்ற கேள்விகளை எழுப்புகிறது. இதன் அம்சங்களை பிபிசி தமிழ் செய்தியாளர்கள் முரளிதரனும் விஜயானந்தும் விவாதிக்கும் காணொளி இது.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: