"முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே தீர்மானிக்கும்" - மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி திட்டவட்டம்

பட மூலாதாரம், C.T. RAVI
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்வாகும் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக நடத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த ரவி, அண்ணா நகரில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் அதிமுக, பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக மேலிடம் தெளிவாக கூறாமல் இருக்கிறதே என்று கேட்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அதற்கு அவர், இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒன்று கூடித்தான் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார். பெரும்பான்மை அடிப்பையில் முதல்வர் வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்றும் ரவி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளதாக அறிவித்து தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், மாநிலத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்கும் பாஜக, இன்னும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் உள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது என்று கூறும் அதே சமயம், அதில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் என்று தெரிவித்தார்.
ஆனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்திருப்பதை ஏற்கிறீர்களா என்று கேட்டதற்கு, தொடர்ச்சியாகவே முருகன் நேரடியாக பதிலை வெளியிடாமல் பேசி வருகிறார்.
இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் அதேபோன்ற கருத்தை புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், தனது ட்விட்டர் பதிவு மூலம் தமது கருத்தை மேலும் விளக்க சி.டி. ரவி முற்பட்டிருக்கிறார்.
இது தொடர்பான ஒரு ட்வீட்டில், "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய கூட்டாளியாக அதிமுக உள்ளது. எனவே பெரிய கட்சியில் இருப்பவர்தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதுதான் இயல்பு. தற்போதைக்கு, எடப்பாடி பழனிசாமிதான் தமிழக முதலமைச்சர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூடி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மற்றொரு ட்வீட்டில், "பிரதமர் மோதியும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிப்படுத்துவதே எங்களுடைய நோக்கம். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் காத்திருக்கிறார்கள்," என்றும் சி.டி. ரவி கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்தபோது நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். ஆனால், அத்தகைய கருத்தை அமித் ஷா பிரதிபலிக்காமல் சென்றது, இந்த கட்சிகளின் கூட்டணி தொடர்பான நிச்சயமற்ற கேள்வியை எழுப்பியது.
ஆனால், அதன் பிறகு பேசிய மாநில பாஜக தலைவர்கள், கூட்டணி உறுதியாக இருக்கிறது. தேர்தலை சேர்ந்தே இரு கட்சிகளும் சந்திக்கும் என்று தெரிவித்தனர். ஆனால், முதல்வர் வேட்பாளர் என வரும்போது மட்டும் அது யாராக இருக்கும் என்பதை பாஜக தலைவர்கள் வெளிப்படுத்தாமல் உள்ளனர்.
இந்த நிலையில், சி.டி. ரவியின் சமீபத்திய ட்விட்டர் பதிவு மூலம், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகே அதிமுக, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரின் பெயரை அக்கட்சி அறிவிக்கும் என்பது தெளிவாகியிருக்கிறது.
பிற செய்திகள்:
- "ரஜினி ஒரு கண், மோதி மற்றொரு கண்" - அர்ஜுனமூர்த்தி தரும் புதிய விளக்கம்
- சீன எல்லையில் படை குறைப்பை செய்கிறதா இந்தியா? ராஜ்நாத் சிங் பேட்டி
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
- 'சாகும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன்': தமிழருவி மணியன்
- ரஜினி ரசிகர்கள்: "இதயத்தில் இடி இறங்கியுள்ளது"
- கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய சாமியார் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















