லஞ்ச ஒழிப்பு சோதனை: தமிழக அதிகாரியின் வங்கி லாக்கரில் 50 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து 50 லட்ச ரூபாய் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவு சோதனை ஒன்றை நடத்தியது.
அந்தச் சோதனையில், கணக்கில் வராத தொகை 88,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு வங்கியின் கணக்குப் புத்தகம் ஒன்றும் கிடைத்தது. அந்தக் கணக்கில் 38,66,220 ரூபாய் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவரது வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
பாண்டியன் வீட்டிலிருந்து ரொக்கமாக ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 1.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம், 1.51 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி, 5.40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 10.52 காரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்துகளுக்கான பத்திரங்கள், நிரந்தர வைப்பு நிதியில் 37 லட்ச ரூபாய், ஒரு எடியோஸ் கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அவருடைய வங்கிக் கணக்கோடு தொடர்புடைய வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று திறந்து பார்த்தனர். அந்த லாக்கரில் 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக 50 லட்சத்து 500 ரூபாய் பணம் இருந்தது. அந்தப் பணம் முழுவதும் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- "வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளின் ஆதரவு உள்ளது" - நரேந்திர சிங் தோமர்
- சிசுவின் கோவிட் இறப்பு மீது சந்தேகம்: சிக்கலாகுமா முஸ்லிம் பெற்றோர் வழக்கு?
- பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து
- நடராஜன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை, விராட் கோலி போகிறார்: கவாஸ்கர் விமர்சனம்
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























