சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள் முதல் எல்லா வழக்குகளும் ஆன்லைன் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை காணொளி வாயிலாக விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்த அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், காணொலி மூலம் மட்டும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வும், தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரித்து வந்தனர். தற்போது வழக்கம் போல் எல்லா வழக்குகளுக்கும் ஆன்லைன் மூலமாக விசாரணைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலமாக ஒரு சில வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து வழக்குகளும் ஆன்லைனில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

ஆன்லைன் மூலமாக வழக்குகள் நடைபெறுவது குறித்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சக்தி குமாரன், ''சிஸ்கோ வெபேக்ஸ் என்ற ஆப் மூலமாக ஆன்லைன் விசாரணை நடைபெறுகிறது. திங்கள் முதல் எல்லா வழக்குகளும் ஆன்லைன் மூலம் விசாரிக்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. வழக்கில் தேவைப்படும் ஆதாரங்களை போட்டோ எடுத்து, பிடிஎப் பைல் வடிவில் ஈமெயில் அனுப்புகிறோம். சிரமமாக இருந்தாலும், இந்த ஊரடங்கு காலத்தில் இதுதான் சாத்தியம்,'' என்கிறார்.
ஆன்லைன் மூலம் விசாரணை நடைபெறுவதால் தொழில்நுட்பத்தை கட்டாயமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












