நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு - குற்றவாளி முகேஷ் சிங்கின் சீராய்வு மனு தள்ளுபடி

முகேஷ் சிங்
படக்குறிப்பு, முகேஷ் சிங்
பிரசுரிக்கப்பட்டது

நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று தூக்கு தண்டனை நிறைவேற்ற அதிகாரபூர்வ ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு கோப்புகளை நாங்கள் நாங்கள் நன்கு கவனித்துப் படித்தோம். மனுதாரர்களின் கூற்றில் எந்த தார்மீக ரீதியிலான அடிப்படை தகுதியும் இல்லை. சித்தரவதை நடந்ததாக குற்றம்சாட்டுவது அடிப்படையாக இருக்க முடியாது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் குடியரசுத்தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளார் என்று நீதிபதி பானுமதி இது குறித்து தெரிவித்தார்.

குற்றவாளியான முகேஷுக்கு சிறைக்குள் சித்தரவதை நடந்ததாக கூறப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதனை அடிப்படை காரணமாக கொண்டு குடியரசுத் தலைவரின் உத்தரவை சீராய்வு செய்ய இயலாது என்று கூறினார்.

குற்றவாளிகள்

முகேஷின் மனு விரைவாகத் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை விரைவாக பரிசீலனை செய்ததால், அது சரியாக கருத்தில் கொள்ளப்படவில்லை என்ற பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: