You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல்ஸ் ஆக்சி மீட்டர்: கருப்பாக இருந்தால் தவறான தகவலை காட்டுகிறதா – என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
கொரோனா தொற்று நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு குறைந்தால் அதை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் கருவி, கருப்பு தோல் உள்ளவர்கள் இடத்தில் சற்று குறைவாக வேலை செய்யும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஆக்சிமீட்டர்கள் சில சமயம் அதிகப்படியான ஆக்சிஜன் அளவை காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த கருவிகள் ரத்தத்தின் வழியாக ஒளியை பாய்ச்சும், தோல் நிறமி எந்த அளவு ஒளி கிரகிக்கப்படுகிறது என்பதில் தாக்கம் செலுத்தும் என்கின்றனர்.
எனவே இதற்கு ஏற்றாற்போல நோயாளிகள் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு, கருப்பினத்தவர்கள், ஆசிய மக்கள் மற்றும் பிற இன சிறுபான்மை குழுக்குள் பல்ஸ் ஆக்சிமீட்டர்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளபோதும் சுகாதார துறை அதிகாரிகளிடம் அறிவுரை கோர வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்த மார்ச் மாதம் வெளியான தேசிய சுகாதார அமைப்பின் உடல்நலம் மற்றும் இன கண்காணிப்பு அறிக்கை ஒன்று மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்களின் ஒழுங்குமுறை முகமை, பல்ஸ் ஆக்சிமீட்டர் குறித்து உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த கருவி கொரோனா தொற்று, பரவலாக இருந்த சமயங்களில் மருத்துவமனை மற்றும் வீடுகள் என அதிகமாக பயன்படுத்தப்பட்டன.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஆக்சிஜன் அளவு ஆபத்தான அளவில் குறைந்தால் அதுகுறித்து எந்த எச்சரிக்கையும் வராமல் இருப்பதற்கு சைலண்ட் ஹிபோக்சியா (silent hypoxia) என்று பெயர்.
கடந்த வருடம் ரஞ்சித் சென்கெரியா, தான் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது பல்ஸ் ஆக்சிமீட்டர் ஒன்றை வாங்கியிருந்தார். இருப்பினும் அவரின் ஆக்சிஜன் அளவு அவரை மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு குறைந்தது ஆனால் அதுகுறித்து அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
"நான் மருத்துவமனைக்கு சென்றபோது நீங்கள் நீண்ட நாட்கள் நிலைமையை சரிசெய்யாமல் விட்டுவிட்டீர்கள் என்று கேட்டனர்" என்கிறார்.
"எனக்கு 14 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கு உங்களை அனுப்புவதற்கு முன் ஒருவருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச ஆக்சிஜன் அளவு அதுதான்"
எனது நிறமோ எனது தோலின் நிறமியோ இம்மாதிரியான கருவிகள் பணி செய்வதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஒருகாலமும் நாம் நினைத்துகூட பார்த்ததில்லை என்கிறார் அவர்.
தேசிய சுகாதார அமைப்பின் இன மற்றும் உடல கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹபிப் நக்வி, பல்ஸ் ஆக்சிமீட்டர் குறித்து தேசிய சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையை வரவேற்கிறார்.
"இது மருத்துவ ரீதியாக பயனுள்ள ஒரு கருவியாக இருந்தாலும், இதில் எழும் பிழைகள் குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் தான் உள்ளனர். இந்த கருவியை நாம் பயன்படுத்தும்போது இவற்றையெல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்." என்கிறார் நக்வி.
மருத்துவர் ஒமர் ஜுண்டி, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவராக உள்ளார். இவர் கருப்பின நோயாளிகள் மத்தியில் இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் தவறான ஆக்சிஜன் அளவை காட்டியதை கண்காணித்தார்.
"ஒரு நாளில் இரண்டு மூன்று நோயாளிகளிடம் ஒரு முறையாவது நான் இதை பயன்படுத்துவேன்" என்கிறார் ஜுண்டி.
கருப்பின, ஆசிய மற்றும் பிற இன குழுக்களை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக தரவுகள் சொல்கின்றன.
ஆக்சிமீட்டர்களில் உள்ள இந்த பிழை அதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
"இம்மாதிரியான பிழைகள் குறித்து அனைவரும் அறிந்திருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பெரிய நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்துள்ளவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். பல்ஸ் ஆக்சி மீட்டர்களை பயன்படுத்தும் கருப்பினத்தவர்கள், ஆசிய மக்கள் பிற பிரிவு மக்கள் இதில் அடங்குவர். இவர்கள் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வீடுகளில் அன்றாடம் ஆக்சிமீட்டர்களை பயன்படுத்துகின்றனர்" என்கிறார் மருத்துவர் நக்வி.
கருப்பாக இருக்கும் மக்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் துள்ளியமாக பயன்படுகிறது என்பதை உறுதி செய்யும் கலாசார ரீதியில் அனைத்து தரப்பினரயும் உள்ளடக்கிய ஆய்வு ஒன்று நடைபெற்றதாக தெரிவிக்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்