You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொகோ கோலா: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தியது ஏன்? மற்றும் பிற செய்திகள்
சர்வதேச குளிர்பான நிறுவனமான கொகோ கோலா சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வெறுப்பு கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு எதிரான பிரசாரம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்த விஷயத்தில் பொறுப்பு இருக்கிறது. அவர்களது தளத்தில்தான் இந்த கருத்துகள் பகிரப்படுவதால், இதற்கு எதிரான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கும் சமீபத்தில், குறிப்பிட்ட சமூகத்தை, இனத்தை, மதத்தை, சாதியை, தேசத்தை, பாலினத்தை சிறுமைப்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த சூழலில் கோலா நிறுவனம், “இனவாதத்திற்கு இந்த உலகத்திலும் இடமில்லை, சமூக ஊடகங்களிலும் இடமில்லை,” என்று கூறி உள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பொறுப்பாக்கவும் அழுத்தம் தருவதற்காக முப்பது நாட்களுக்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்த கோலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மீண்டும் தொடங்கியது - இந்திய அரசு அழிக்க முயற்சி
சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது. உணவுப் பயிர்கள் அவற்றால் உண்ணப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் வட இந்திய மாநிலங்களில் தொடங்கியுள்ளன.
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை காலை பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் காணப்பட்டதாகவும் அவற்றை அழிப்பதற்கான குழுக்கள் அந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன?
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என கொரோனா வைரஸ் பரவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கத்தில் தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை என்ன என்பது குறித்த தகவல்களை அறியலாம்.
சனியன்று, தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் 3,000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது.
விரிவாகப் படிக்க: https://bbc.com.im/tamil/global-53167469%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">
இந்திய - சீன எல்லை பதற்றம்: லடாக் நிலப்பரப்பின் பிரச்சனை என்ன?- வரலாற்றுத் தகவல்கள்
விரிவாகப் படிக்க: https://bbc.com.im/tamil/india-53199516%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">